எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதி ; ஆளுங்கட்சியானவுடன் நிறைவேற்றிய முதல்வர் - அமைச்சர் எ.வா.வேலு பெருமிதம்
முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கமும், 1987-ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டு போராட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான 21 சமூக நீதி போராளிகளின் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
![எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதி ; ஆளுங்கட்சியானவுடன் நிறைவேற்றிய முதல்வர் - அமைச்சர் எ.வா.வேலு பெருமிதம் Minister velu says Promise made when in opposition Chief Minister Stalin fulfilled it once he became the ruling party tnn எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதி ; ஆளுங்கட்சியானவுடன் நிறைவேற்றிய முதல்வர் - அமைச்சர் எ.வா.வேலு பெருமிதம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/23/0ad8e81558032e3022707052ffd6584b1732343700152113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம்: எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதியை ஆளுங்கட்சியானவுடன் நினைவில் வைத்து நிறைவேற்றி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என விழுப்புரத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வா.வேலு தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், வழுதரெட்டியில் முன்னாள் அமைச்சர் திரு.ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு ரூ.4.00 கோடி மதிப்பீட்டில் 5877 சதுர அடி பரப்பளவில் திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவு அரங்கமும், 1987-ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டு போராட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான 21 சமூக நீதி போராளிகளின் தியாகத்தை மதிக்கக்கூடிய வகையில் ரூ.5.70 கோடி மதிப்பீட்டில் 8477 சதுர அடி பரப்பளவில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை வருகின்ற 29ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். தொடர்ந்து தமிழக அரசின் பல்வேறு துறைகளில் சார்பில் பத்தாயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்க உள்ளார். இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இதனை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வா.வேலு, வனத்துறை அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி உள்ளிட்ட அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வா.வேலு: தென்னாடு மாவட்டத்தில் திராவிட இயக்கத்தினுடைய தலைவராக இருந்தவர், கலைஞருடைய அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் எ.கோவிந்தசாமி. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு ஸ்டாலின் வந்தபோது பொன்முடி, ஜெகத்ரட்சகன் ஆகியோர் கோரிக்கை வைத்தனர். அந்த அடிப்படையில் விழுப்புரத்தில் நான்கு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5.877 சதுர அடியில் மணிமண்டபம் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 21 சமூக நீதி போராளிகளுக்கு அவர்களை நினைவு கூறும் வகையில் திராவிட மாடல் ஆட்சியில் ஐந்து கோடிய 75 லட்சம் திட்ட மதிப்பீட்டில், 8.417 சதுர அடியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
மணிமண்டபம் பார்வையாளர்கள் பார்க்கும் வகையில் மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் மண்டபமும், மாணவர்கள் பயன்பெறும் வகையில் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வருகின்ற 29ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். தொடர்ந்து இந்த மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாயிரம் பயனாளிகளுக்கு நலத்தட்டு உதவிகளையும் முதல்வர் வழங்கவுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)