'போராடினால் சிறைக்குதான் செல்வார்கள்' - அமைச்சர் பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
பாமக சார்பில் சிறை நிரப்பும் போரட்டம் அறிவிக்கப்பட்டதற்கு போராடினால் சிறைக்குதான் செல்வார்கள் வேறு எங்கு செல்வார்கள் - அமைச்சர் பன்னீர்செல்வம்

விழுப்புரம்: பாமக சார்பில் சிறை நிரப்பும் போரட்டம் அறிவிக்கபட்டதற்கு போராடினால் சிறைக்கு தான் செல்வார்கள் வேறு எங்கு செல்வார்கள் என வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அருகேயுள்ள ஜானகிபுரம் புறவழிச்சாலை அமைந்துள்ள வன்னியர் இட ஒதுக்கீடு போராளிகள் மணி மண்டபத்தில் உள்ள 21 தியாகிகளின் திருவுருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பொன்முடி, திமுக எம்எல்ஏ லட்சுமணன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்த விவசாய துறை அமைச்சர் பன்னீர்செல்வம்...
அதிமுக ஆட்சி காலத்தில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட 21 பேருக்கு அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி மாதம் 3000 நிதி உதவி வழங்கினார். தற்போதுள்ள முதல்வர் முக ஸ்டாலின் தியாகிகளுக்கு தனியாக மணிமண்டபம் அமைத்துள்ளார். 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டவர்கள் திடீரென்று 15 சதவீதம் கேட்பதற்கு என்ன காரணம். நீதி அரசர் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் முழுமையாக ஆய்வு செய்த பிறகு தான் இட ஒதுக்கீடு வழங்க முடியும். 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்காமலேயே அதற்கு மேலாகவே அந்த சமூக மாணவர்கள் இட ஒதுக்கீடுகளை அனுபவித்து வருவதாக கூறினார்.
மேலும் பாமகவின் சிறை நிரப்பு போராட்டம் குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர் போராடினால் சிறைக்கு தான் செல்வார்கள் வேறு எங்கு செல்வார்கள் நாங்களும் போராட்டம் நடத்தி 48 நாட்கள் 68 நாட்கள் சிறை சென்றுள்ளோம் 21 சமூக நீதி போராளிகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை அஞ்சலி செலுத்தும் அவர்கள் மாதம் அவர்களின் குடும்பத் தேவைக்கு 3000 உதவித்தொகை வழங்கி வருகிற அரசு திமுக அரசு சமூக நீதி போராளிகளை வைத்து பிழைப்பு நடத்தும் கட்சி பாதிக்கப்பட்ட குடும்பத்தை கண்டு கொள்வதோ பார்ப்பதே இல்லை யார் துரோகி என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என்று தெரிவித்தார்.
ஏற்கனவே இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது பதியப்பட்ட 15000 வழக்குகளை கலைஞர் கருணாநிதி தான் தள்ளுபடி செய்தார். திமுக சமூக நீதியின் துரோகி என அன்புமணி தெரிவித்த கேள்விக்கு யார் துரோகி அந்த மக்களுக்கு தெரியும் இட ஒதுக்கீட்டுக்காக போராடிய தன் சொந்த கட்சிகாரர்களே அவர்கள் காப்பாற்றினார்களா என கேள்வி எழுப்பினார்.
டெல்லியில் அமித்ஷா சந்தித்து விட்டு முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்த எடப்பாடி பழனிச்சாமி குறித்த கேள்விக்கு பதிலளித்த எம் ஆர் பன்னீர் செல்வம் அவர் கேரக்டரே அதுதான் ஒருவருக்கு செய்த நன்றியை மறப்பதற்கு கொஞ்சம் காலமாகும் ஆனால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் என அறிவித்த அடுத்த நாளே அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியவர் தான் எடப்பாடி பழனிசாமி என தெரிவித்தார்.






















