விழுப்புரத்தில் கனமழை... 3 ஆயிரம் கோழிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
கெடார் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 3 ஆயிரம் கோழிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தன.
விழுப்புரத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் குடை பிடித்துச் செல்வதும் சிலர் முகத்தில் முகப்பு கட்டி செல்வதுமாக இருந்தனர். விழுப்புரம் மாவட்டத்தின் விழுப்புரம் நகரபகுதி, திருக்கோவிலூர் மற்றும் மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான கந்தாடு, முருக்கேரி, கூனிமேடு, பிரம்மதேசம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு கன மழை பெய்தது.
இந்த நிலையில் மரக்காணம் பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக சுமார் 3500 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று பெற்று வந்த உப்பு உற்பத்தி பணிகள் நேற்று முதல் பெய்து வரும் மழையின் காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த கனமழை காரணமாக, பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் அதிகளவு தேங்கி நிற்கிறது.
இந்த நிலையில் விழுப்புரம் அருகேயுள்ள மணம்பூண்டியில் இரவு 27 செ.மீட்டர் அளவிற்கு மழை பெய்ததால் கெடார் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 3 ஆயிரம் கோழிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தன. கெடார் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்னை செயல்பட்டு வருகிறது. இந்த கோழிபண்ணையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிகோழிகள் வளர்க்கபட்டு வந்த நிலையில் இரவு அப்பகுதியில் பெய்த கனமழையில் கெடாரிலிருந்து சித்தாமூர் செல்லும் ஏரிக்கு செல்லும் வாய்க்காலில் அதிகளவு மழை நீர் சென்றுள்ளது. வாய்க்காலில் சென்ற மழை நீரானது கிருஷ்ணமூர்த்தி என்பவர் கறி கோழி வளர்த்து வந்த இடத்திற்குள் நுழைந்துள்ளது.
இதில் கோழிப்பண்னையில் இருந்த கோழிகள் முழுவதும் இரவு நீரில் மூழ்கி இறந்துள்ளது. அதிகாலையில் கோழிப்பண்னைக்கு சென்ற அதன் உரிமையாளர் கோழிகள் நீரிப் மூழ்கி இறந்து கடந்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து இறந்த கோழிகளை பணியாளர்களை கொண்டு அப்புறப்படுத்தி கோழிபண்ணைக்கு அருகே ஜேசி பி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி புதைத்துள்ளார். திடீரென மணம்பூண்டி பகுதியில் இரவு 27 செ.மீட்டர் அளவிற்கு மழை பெய்த்தால் வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 5 லட்சம் மதிப்பிலான கோழிகள் உயிரிழந்தன. மழை நீரில்கோழிகள் மூழ்கி உயிரிழந்ததால் அரசு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோழி பண்னை உரிமையாளர் கோரிக்கை வைத்துள்ளார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்