மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கடலூர் மாவட்டத்தில் தொடரும் கனமழை - பள்ளிகளுக்கு 2ஆவது நாளாக விடுமுறை அறிவிப்பு
நேற்று பள்ளிகளுக்கு மட்டும் ஒருநாள் விடுமுறை அறிவித்த நிலையில் இன்றும் கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவு
![கடலூர் மாவட்டத்தில் தொடரும் கனமழை - பள்ளிகளுக்கு 2ஆவது நாளாக விடுமுறை அறிவிப்பு Heavy rains continue in Cuddalore district - 2nd day holiday announced for schools கடலூர் மாவட்டத்தில் தொடரும் கனமழை - பள்ளிகளுக்கு 2ஆவது நாளாக விடுமுறை அறிவிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/02/f67d70215f9d8b5928fac8323e0468ce_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கடலூரில் கனமழை
தமிழகத்தில் 17 மாதங்களுக்குப் பிறகு 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் நேற்று திறக்கப்பட்டது. இதையொட்டி, தொடக்கக் கல்வி இயக்குநரகம் பள்ளிகளுக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது. அதில், பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல்கள், புத்தாக்க பயிற்சிக் கட்டகங்கள் ஆகியவை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், 50 விழுக்காடு மாணவர்களுடன் பள்ளிகள் நடைபெறும் என்றும், சுழற்சி முறையில் ஒருநாள் விட்டு ஒருநாள் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனால் முதல் நாள் வரக்கூடிய மாணவர்கள் அடுத்த நாள் பள்ளிக்கு வரத் தேவையில்லை. முழுநாளும் வகுப்பு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
![கடலூர் மாவட்டத்தில் தொடரும் கனமழை - பள்ளிகளுக்கு 2ஆவது நாளாக விடுமுறை அறிவிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/02/b641350e322cfb5db0f6f78e39a5b190_original.jpg)
இந்நிலையில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. நேற்று காலை மழை இன்றி காணப்பட்டாலும் மாலை முதல் திடீரென கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான ரெட்டிச்சாவடி, நெல்லிக்குப்பம், ஆலப்பாக்கம், பாலூர், பண்ருட்டி, வடலூர், நெய்வேலி, ஆகிய பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வந்தது, மழையால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தண்ணீர் தேங்கியது. கடலூர் பான்பரி மார்க்கெட், அண்ணா மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் குட்டை போல் தேங்கி நின்றது.
![கடலூர் மாவட்டத்தில் தொடரும் கனமழை - பள்ளிகளுக்கு 2ஆவது நாளாக விடுமுறை அறிவிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/02/9b6c06c7d751d9c5e867c885e10709a2_original.jpg)
இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். அவர்கள் மழையில் நனைந்தும், குடைபிடித்த படியும் சென்றனர். இனியும் மழை தொடரும் என்பதால் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாவட்டஆட்சியர் பாலசுப்பிரமணியம் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார். இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. பள்ளி வளாகங்களிலும் தண்ணீர் தேங்கி உள்ள நிலையில், நேற்று பள்ளிகளுக்கு மட்டும் ஒருநாள் விடுமுறை அறிவித்த நிலையில் இன்றும் கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion