மேலும் அறிய

பொன்முடி செம்மண் குவாரி வழக்கு; அரசு தரப்பு சாட்சிகள் 2 பேர் பிறழ் சாட்சியம்... வழக்கு 4-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் 2 பேர் பிறழ் சாட்சியம் மீண்டும் விசாரணை 4-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

விழுப்புரம்: முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் 2 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர். இவ்வழக்கின் விசாரணை மீண்டும் 4-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மு.அமைச்சர் பொன்முடி செம்மண் குவாரி வழக்கு

தமிழ்நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த திமுக ஆட்சிக்காலத்தின் போது விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அதாவது அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.

நீதிமன்றத்தில் 3 பேர் ஆஜர்

இவ்வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 12 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். அவர்களில் 9 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளதால் இவ்வழககில் அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு தங்களை அனுமதிக்கக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், கடந்த செப்டம்பர் மாதம் மனுதாக்கல் செய்தார். இம்மனுவை ஏற்கனவே தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தற்போது இவ்வழக்கில் மீண்டும் சாட்சிகள் விசாரணை தொடங்கியுள்ளது. இவ்வழக்கு விழுப்புரம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது சதானந்தன், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகிய 3 பேர் மட்டும் ஆஜராகினர். முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், கோதகுமார் ஆகிய 4 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து திமுக வழக்கறிஞர் மனுதாக்கல் செய்தனர்.

2 பிறழ் சாட்சியம்

மேலும் இவ்வழக்கில் அரசு தரப்பு 13-வது சாட்சியாக முன்னாள் விழுப்புரம் கோட்டாட்சியரும் தற்போது ஓய்வு பெற்றவருமான ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது அவர்,  உயர் அதிகாரிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக வழக்குகள் சம்பந்தப்பட்ட கோப்புகளில் தான் கையெழுத்திட்டதாக கூறி அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்தார். அவரை தொடர்ந்து 14-வது சாட்சியாக இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சதானந்தனின் உறவினரான ராஜசேகரன் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது அவர், தனக்கும் இவ்வழக்கிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை, எனக்கு எதுவும் தெரியாது என்றுகூறி அவரும் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்தார். இதையடுத்து இவ்வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா, இவ்வழக்கின் விசாரணையை மார்ச் 4-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Edappadi Palanisamy : திமுக பிடியில் விசிக; சுதந்திரம் பறிபோனது! திருமாவளவனை முடக்கியது ஏன்? எடப்பாடியின் அதிரடி அட்டாக்!
Edappadi Palanisamy : திமுக பிடியில் விசிக; சுதந்திரம் பறிபோனது! திருமாவளவனை முடக்கியது ஏன்? எடப்பாடியின் அதிரடி அட்டாக்!
ஏமாற்று கூட்டணி... பொருந்தா கூட்டணி! - புதுச்சேரியில் மோடி, ஸ்டாலினை ஒரே மேடையில் வறுத்தெடுத்த விஜய்!
ஏமாற்று கூட்டணி... பொருந்தா கூட்டணி! - புதுச்சேரியில் மோடி, ஸ்டாலினை ஒரே மேடையில் வறுத்தெடுத்த விஜய்!
தங்கத்தை விட விலை உயர்ந்த எலுமிச்சை! ஒரு லட்சத்தைத் தாண்டிய ஏலத் தொகை - விழுப்புரம் அருகே ஆச்சரியம்!
தங்கத்தை விட விலை உயர்ந்த எலுமிச்சை! ஒரு லட்சத்தைத் தாண்டிய ஏலத் தொகை - விழுப்புரம் அருகே ஆச்சரியம்!
சென்னை டூ கடலூர்: இனி 3 மணி நேரம்தான்! பயணிகளின் ஃபேவரிட் தேர்வாகும் ECR சாலை!
சென்னை டூ கடலூர்: இனி 3 மணி நேரம்தான்! பயணிகளின் ஃபேவரிட் தேர்வாகும் ECR சாலை!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ranipet Dmk Candidate : சீட்டுக்காக அடம்பிடிக்கும் காந்தி.. வழியில்லாமல் விட்டுக்கொடுத்த மகன்- ராணிப்பேட்டை திமுகவில் நடப்பது என்ன.?
சீட்டுக்காக அடம்பிடிக்கும் காந்தி.. வழியில்லாமல் விட்டுக்கொடுத்த மகன்- ராணிப்பேட்டை திமுகவில் நடப்பது என்ன.?
Trump Iran War Ceasefire: அமெரிக்கா-ஈரான் இடையே 45 நாட்கள் போர் நிறுத்தம்.? கடைசி நிமிட பேச்சுவார்த்தை; நடந்தா நல்லது தான்.!
அமெரிக்கா-ஈரான் இடையே 45 நாட்கள் போர் நிறுத்தம்.? கடைசி நிமிட பேச்சுவார்த்தை; நடந்தா நல்லது தான்.!
Hormuz Indian LPG Ship: இந்தியாவால மட்டும் தான் முடியும்.! போர் பதற்றத்துக்கு நடுவே ஹார்முஸை அசால்ட்டாக கடந்த LPG கப்பல்
இந்தியாவால மட்டும் தான் முடியும்.! போர் பதற்றத்துக்கு நடுவே ஹார்முஸை அசால்ட்டாக கடந்த LPG கப்பல்
Gold Silver Rates Today: வாரத்தின் முதல் நாளே ஜாக்பாட்.! தங்கத்தின் விலை சரசரவென சரிந்தது.! வெள்ளி விலை என்ன தெரியுமா.?
வாரத்தின் முதல் நாளே ஜாக்பாட்.! தங்கத்தின் விலை சரசரவென சரிந்தது.! வெள்ளி விலை என்ன தெரியுமா.?
Sanju Samson: புடிக்கலன்னா கெளம்புங்க, டீமையும், பேரையும் கெடுக்காதிங்க சஞ்சு - பதவிக்காக CSK-வில் கலகமா?
Sanju Samson: புடிக்கலன்னா கெளம்புங்க, டீமையும், பேரையும் கெடுக்காதிங்க சஞ்சு - பதவிக்காக CSK-வில் கலகமா?
Petrol Vs CNG: பெட்ரோலா.? CNG-ஆ.?; நீங்க டெய்லி ஆஃபீஸ் போறதுக்கு எந்த கார் மலிவானது.? வாங்க தெரிஞ்சுப்போம்
பெட்ரோலா.? CNG-ஆ.?; நீங்க டெய்லி ஆஃபீஸ் போறதுக்கு எந்த கார் மலிவானது.? வாங்க தெரிஞ்சுப்போம்
Tamilnadu Round Up: உணவகங்களில் விலை உயர்வு, சரிந்த தங்கம், ஜாபர் சாதிக் வீட்டில் சோதனை - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: உணவகங்களில் விலை உயர்வு, சரிந்த தங்கம், ஜாபர் சாதிக் வீட்டில் சோதனை - தமிழ்நாட்டில் இதுவரை
TN Election 2026: இன்றே கடைசி..! படையெடுக்கும் பாஜக, காங்., வேட்பாளர்கள் - வேட்புமனு தாக்கல் எந்த தொகுதியில் டாப்?
TN Election 2026: இன்றே கடைசி..! படையெடுக்கும் பாஜக, காங்., வேட்பாளர்கள் - வேட்புமனு தாக்கல் எந்த தொகுதியில் டாப்?
Embed widget