தக்காளி 100 ரூபாய்க்கு வித்தாலும் மாசம் 1000 ரூபாய் கொடுக்குறோம்...மீண்டும் சர்ச்சையில் அமைச்சர் பொன்முடி
தக்காளி விலை உயர்வு குறித்து கேள்வி கேட்ட பெண்ணிடம் மோடியிடம் போய் கேளுங்கள் என அமைச்சர் பொன்முடி பதில்
விழுப்புரம்: மகளிர் உரிமை தொகை முகாமில் அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டபோது தக்காளி விலை உயர்வு குறித்து கேள்வி கேட்ட பெண்ணிடம், மோடியிடம் போய் கேளுங்கள் நாங்கள் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோமே அது மகிழ்ச்சி இல்லையா என தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்கும் முகாம்களை அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார். அதன் ஒரு பகுதியாக அரகண்டநல்லூர் பேரூராட்சியில் நடைபெற்ற முகாமினை பார்வையிட்ட அமைச்சர் பொன்முடி அங்கு இருந்த பொதுமக்களிடம் கலைஞர் மகளிர் உரிமைச் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் அனைவரும் கையில் வைக்கபட்டுள்ளதா, எவ்வளவு பணம் அரசு வழங்க உள்ளது தெரியுமா, உங்களுக்கெல்லாம் வீடு, கார் இதுபோன்று ஏதேனும் இருக்கிறதா என்பது போன்ற கேள்விகளை பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.
அதன்பின்னர், இந்த ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை யார் தருகிறார்கள் என தெரியுமா என கேட்டார். அப்போது கூட்டத்தில் இருந்த பெண்மணி ஒருவர் தக்காளியின் விலை 100 ரூபாயாக உள்ளது. அதனை குறைக்க வேண்டும் என கேட்டார். அதற்கு அமைச்சர் பொன்முடி, மோடியிடம் போய் கேளுங்கள் விலைவாசி ஏறும் இறங்கும் நாங்கள் தான் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோமே அது மகிழ்ச்சியா இல்லையா என கேள்வி கேட்ட பெண்னை பார்த்து கூறிவிட்டு நாங்கள் தான் ரேஷன் கடைகள் மூலமாக குறைந்த விலையில் தக்காளி கொடுக்க நடவடிக்கை எடுத்தோமோ என தெரிவித்தார். அதன் பின்னர் அந்த பெண் தனக்கு ஓட்டு போடவில்லை என்றும் யாராவது சொல்லிக் கொடுத்து பேசுவார் என கூறிவிட்டு அமைச்சர் பொன்முடி சென்றார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்