கோயில் பணத்தில் கல்லூரி? சாமி கும்பிடாதவர்கள், பொட்டு வைக்காதவர்கள் செய்யும் பகீர் செயல் - சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ன செய்கிறார். திருக்கோயிலூர் சட்டமன்ற உறுப்பினர் செய்த வேலையைக்கூட விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் செய்யவில்லை.

விழுப்புரம்: கோயில் மேம்பாட்டுக்காக உண்டியலில் போடும் காணிக்கை பணத்தில் கல்லூரி தொடங்குவதாகவும், சாமி கும்பிடாதவர்கள், பொட்டு வைக்காதவர்கள் கோயில் பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு முதல்வரே அவர் தொகுதியில் கோயில் பணத்தில் கல்லூரியை திறந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
அதிகார திமிரால் பல்கலைக்கழகத்தை மூடினார் பொன்முடி
விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் அண்ணாமலை பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மையத்தில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை ரத்து செய்யபட்டுள்ளதாக புகார் எழுந்தது. இந்நிலையில் பட்ட மேற்படிப்பு ரத்து செய்யக்கூடாது என வலியுறுத்தி சிவி.சண்முகம் தலைமையில் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சி திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றிய அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம், ஆர்ப்பாட்டத்தில் கூடிய கூட்டமே நாளைய ஆட்சிக்கு சான்று என்றும் பட்ட மேற்படிப்பு மையத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளதற்கு காரணம் அதிமுக ஜெயலலிதா பல்கலைக்கழகம் கொண்டு வந்தோம், ஜெயலலிதா பெயர் தான் பிரச்சினை என்றால் பெயரை மாற்றிக்கொள்ளுங்கள் என கூறினோம் அம்பேத்கர் பெயர் வைக்க சொன்னோம், அதிகார திமிரால் பல்கலைக்கழகத்தை மூடினார்கள் பொன்முடி முதல்வரிடம் எடுத்துக்கூறி பல்கலைக்கழகத்தை ரத்து செய்ய வேண்டாம் என கூறியிருக்கலாம்.
திமுக பெயரை மாற்றி ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டிருக்கலாம். ஜல்ஜீவன் திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அதிமுக ஆட்சியில் தான் உயர் கல்வியில் இந்தியாவில் 53 சதவீதம் பயில்வோர் என்னிக்கை உயர்ந்தது இந்த என்னிக்கை திமுக ஆட்சியில் உயரவில்லை என தெரிவித்தார்.
சாமி கும்பிட மாட்டோம், பொட்டு வைக்க மாட்டோம். ஆனால் கோயில் பணத்தை மட்டும் எடுத்துக்கொள்வார்கள்
நான்கரை ஆண்டுகளில் பல்கலைக்கழக, மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி கொண்டு வரவில்லை, கோயில் உண்டியலில் போடும் காசில் கல்லூரி தொடங்குகிறார்கள். கோயில் மேம்பட நிதி தருகிறோம். சாமி கும்பிட மாட்டோம், பொட்டு வைக்க மாட்டோம் ஆனல் கோயில் பணத்தை மட்டும் எடுத்துக்கொள்வார்கள்.
முதல்வர் தன்னுடைய தொகுதிக்கு கோயில் பணத்தில் கல்லூரி திறக்கப்பட்டது. ஆட்சி நிர்வாகம் சீர்கெட்டு போயுள்ளது. கோயில் நகை எல்லாம் உருக்கப்பட்டுவிட்டது. அதிமுக ஆட்சியில் கோயில் பணம் 400 கோடி இருந்தது தற்போது தற்போது நான்கு ரூபாய்கூட பணம் இல்லை. நிதி மேலான்மையை சிறப்பாக கையாண்டவர் எடப்பாடி.பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் பொன்முடி 50 கல்லூரி திறந்ததாக கூறுகிறார். பட்டியல் கொடுக்க முடியுமா. பல்கலைக்கழகம் மூட்டபட்டுவிட்டது. தற்போது பட்ட மேற்படிப்பு மையம் மூட திட்டமிட்டனர். எடப்பாடி.பழனிச்சாமி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தவுடன் மீண்டும் செயல்படும் என கூறுகிறார்கள்.
விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் என ஒருவர் இருக்கிறாரா? விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ன செய்கிறார். திருக்கோயிலூர் சட்டமன்ற உறுப்பினர் செய்த வேலையைக்கூட விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் செய்யவில்லை. திமுக அரசு வந்தாலே அனைத்தையும் மூட பார்க்கிறது. எல்லாற்றையும் தனியார் மயம் ஆக்கிறது திமுக. 2026ல் ஸ்டாலின் சரணடைவார்.
2026ல் எடப்பாடி.பழனிசாமி முதல்வராக வந்தவுடன் விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழக வருவது உறுதி. நிதி இல்லை என ஜெயலலிதா பல்கலைக்கழகம் மூடப்பட்டது தற்போது கலைஞர் பல்கலைக்கழகத்திற்கு ஏது நிதி. இவ்வாறு சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.





















