மேலும் அறிய
Advertisement
கடலூர்: சிறுமி பாலியல் வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள கரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் மகன் ராஜேந்திரன் (56). அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். அந்தச் சிறுமி ராஜேந்திரன் வீட்டுக்கு அடிக்கடி தொலைக்காட்சி பார்ப்பதற்காக வருவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 6.7. 2021 அன்றும் தொலைக்காட்சி பார்க்க வந்த சிறுமியை ராஜேந்திரன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர், சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர். மேலும் கடலூர் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்து சாட்சிகள் விசாரணை நடந்து நீதிபதி எழிலரசி இன்று தீர்ப்பு வழங்கினார்.
ராஜேந்திரன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கடலூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் தமிழக அரசின் ஏதாவது ஒரு திட்டத்தில் இருந்து ரூ.5 லட்சத்தை 30 நாட்களுக்குள் வழங்கவும் உத்தரவிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion