மேலும் அறிய
Advertisement
சந்திராயன் 3 ல் வெற்றி பெற்றது எப்படி? - திட்ட இயக்குநர் வீரமுத்துவேலின் அசத்தல் பேச்சு
சந்திராயன் 3 திட்டம் வெற்றி பெறுவதற்கு காரணம் திட்டமிட்டதை சரியாக செய்து முடித்தால் வெற்றி பெற முடிந்தது - வீரமுத்துவேல்
விழுப்புரம்: நேர்மையுடனும், அர்ப்பனிப்புடனும், ஒழுக்கத்துடனும், சரியாக திட்டமிட்டதை மாற்றமின்றி செயல்படுத்தியதால் சந்திராயன் 3 ல் வெற்றி பெற முடிந்ததாக அத்திட்டத்தின் இயக்குனர் வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் ரயில்வே பள்ளி மாணவர்கள் இணைந்து சந்திராயன் 3 வெற்றி பெற உறுதுனையாக இருந்த அத்திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட சந்திராயன் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுக்கு மாவட்ட ஆட்சியர் பழனி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதனை தொடர்ந்து பள்ளியில் பாடம் கற்பித்த ஆசிரியர்கள் மாணவர்களை சந்தித்து உரையாடினார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு மேடையில் பேசிய சந்திராயன் 3 திட்டஇயக்குனர் வீரமுத்துவேல், இத்திட்டம் வெற்றி பெற்ற பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றிருந்தாலும் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சியை தருவதாகவும் அதிக அளவு படிக்கும் திறன் கொண்ட மாணவர் தான் அல்ல என்றும் சாதாரணமாக நடுத்தரமாக படிக்கும் மாணவனாக இருந்து படிப்பினை விட ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதை கடை பிடித்து பின்பற்றி வருவதாகவும் இரண்டாமாண்டு டிப்ளமோ படிக்கும் போதே மெக்கானிக்கலில் ஆர்வம் இருந்தது அதனை நோக்கி பயணித்ததாக தெரிவித்தார்.
ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்தது விழுப்புரம் ரயில்வே பள்ளி தான் என்றும் இஸ்ரோவில் படிப்பறிவில் அறிவியலில் கைதேர்ந்தவர்கள் உள்ள நிலையில் தனக்கு சந்திராயன் 3 ல் வாய்ப்பு கிட்டியதாகவும் அதில் எடுத்த வேலையின் மீது நேர்மையுடன் செயல்படுவது அர்பணிப்புடன் செயல்படுவது ஒழுக்கமாக செயல்படுவது ஆகிய மூன்றையும் கடைபிடித்ததால் என்னால் சந்திராயன் 3 வெற்றி பெற்றதாகவும் சிலர் இதனை கடைபிடிக்க முடியாமல் இருப்பதால் வெற்றி பெற இயலவில்லை என கூறினார்.
சந்திராயன் 3 திட்டம் வெற்றி பெறுவதற்கு காரணம் திட்டமிட்டதை சரியாக செய்து முடித்தால் வெற்றி பெற முடிந்தததாகவும்,
ரஷ்யா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் நிலவின் தென் துருவத்தில் செயற்கைகோளை இறக்கும் நிகழ்வில் தோல்வி சந்தித்தாலும் இந்தியா அதில் வெற்றி பெற்றுள்ளது அதற்கு காரணம் திட்டமிட்டதை எந்த வித மாற்றமும் இல்லாமல் சரியாக செய்ததால் வெற்றி பெற முடிந்தததாகவும், தன்னுடன் பணிபுரிவரக்ள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணி செய்ததால் வெற்றி பெற முடிந்ததாக வீரமுத்துவேல் தெரிவித்தார்.
ரோவரில் உள்ள கேமரா மூலம் போட்டோ எடுக்கப்பட்டு மூன்று நாட்கள் கண்காணித்து அதன் பிறகு சந்திராயன் 3 செயற்கைகோள் தரையிறக்கியதாகவும், நிலவில் ஜிபிஎஸ் கிடையாது இருப்பினும் இஸ்ரோவில் இருந்து திட்டமிடலின் மூலம் எப்படி நிலவின் ஈர்ப்புவிசைக்கு ஏற்றவாறு இறக்க வேண்டுமென கருதினோமோ அதன்படியே செயல்பட்டு செயற்கை கோளை தரையிறக்கம் செய்ததாகவும், தான் பயின்ற விழுப்புரம் ரயில்வே பள்ளியின் அறிவியல் ஆசிரியர் எனது காதினை திருகியது,பள்ளியில் பயின்றது விளையாடியது தன்னுடன் பழகிய நண்பர்கள் யாரையும் மறக்க முடியாது என தெரிவித்தார்.
மேலும் நான் பயின்ற பள்ளி ஆசிரியர்களுடன் இன்று மேடையில் அமர்ந்திருந்தபோது ஆசிரியர்கள் மீதான பயத்தோட தான் அமர்ந்திருந்ததாகவும், வரலாற்று ஆசிரியரை என்னால் மறக்கவே முடியாது ஒழுக்கமாக மாணவர்கள் இருக்க வேண்டும் என்பதை கற்று கொடுத்தவர் அவர் தான் என்றும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறுவேனா என்று எண்ணம் இருந்த நேரத்தில் சரியாக வழி நடத்திய ஆசிரியராக இருந்ததாக வீரமுத்துவேல் கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion