மேலும் அறிய

மேல்மலையனூர், திண்டிவனம் பகுதிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட மயானக்கொள்ளை விழா

’’விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா 5ஆம் தேதியும், தேரோட்டம் 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது’’

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மாசிப்பெருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் அக்னி குளத்தில் இருந்து புறப்பட்ட சக்தி கரக ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று நேற்று காலை கோயிலை வந்தடைந்தது. அதன் பிறகு விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மயானக்கொள்ளை விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கருவறையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், மஞ்சள், சந்தனம், விபூதி, குங்குமம், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மேல்மலையனூர், திண்டிவனம் பகுதிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட மயானக்கொள்ளை விழா

இதே போல் உற்சவ அம்மனுக்கு 16 கரங்களுடன் ஆவேச அங்காளியம்மன் அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து காலை 9.45 மணிக்கு உற்சவ அம்மன் பம்பை, மேளம் முழங்க வடக்கு வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, கோவிலை சுற்றிலும் உலா வந்தார். 10 மணிக்கு பூசாரிகள் பிரம்ம கபாலத்தை (கப்பறைமுகம் என்று கூறுவார்கள்) எடுத்து ஆடியபடி மயானத்தை நோக்கி புறப்பட்டனர். 10.30 மணிக்கு மயானத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆவேச அலங்காரத்தில் காட்சி அளித்தார். தொடர்ந்து அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த சுண்டல், கொழுக்கட்டை, சில்லறை நாணயங்கள், வயலில் விளைந்த காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை பூசாரிகள் வாரி இறைத்தனர்.

இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களில் சிலர் அம்மன் வேடமிட்டும், கோழிகளை கடித்தபடியும் சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். முன்னதாக அம்மன் வேடமிட்டிருந்தவர்களை கண்ட பக்தர்கள் சாலையில் படுத்தனர். அவர்கள் மீது அம்மன் வேடமிட்டவர்கள் நடந்து சென்று ஆசி வழங்கினர். இவ்வாறு செய்தால் நோய் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

மேல்மலையனூர், திண்டிவனம் பகுதிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட மயானக்கொள்ளை விழா

இதனை தொடர்ந்து இரவில் ஆண் பூதவாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.  விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு, அறங்காவலர் குழு தலைவர் வடிவேல் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். விழாவில் இன்று காலையில் தங்கநிற மரப்பல்லக்கிலும், இரவு பெண் பூதவாகனத்திலும் அம்மன் வீதி உலா நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) காலையில் தங்கநிற மரப்பல்லக்கிலும், இரவு சிம்ம வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடக்கிறது. விழாவின் மற்றோரு முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா 5ஆம் தேதியும் தேரோட்டம் 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC NET 2024 Exam Dates: மாணவர்கள் கவனத்திற்கு - ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுகளுக்கான புதிய தேதியை அறிவித்த NTA
UGC NET 2024 Exam Dates: மாணவர்கள் கவனத்திற்கு - ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுகளுக்கான புதிய தேதியை அறிவித்த NTA
Rasipalan: சனிக்கிழமை இந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் அமோகம் - 12 ராசிக்கும் பலன் இங்கே!
Rasipalan: சனிக்கிழமை இந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் அமோகம் - 12 ராசிக்கும் பலன் இங்கே!
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
HBD Harish Kalyan: பிக் பாஸ் கொடுத்த பப்ளிசிட்டி! விடாமுயற்சியுடன் போராடும் ஹரிஷ் கல்யாணுக்கு பிறந்தநாள் இன்று!
HBD Harish Kalyan: பிக் பாஸ் கொடுத்த பப்ளிசிட்டி! விடாமுயற்சியுடன் போராடும் ஹரிஷ் கல்யாணுக்கு பிறந்தநாள் இன்று!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC NET 2024 Exam Dates: மாணவர்கள் கவனத்திற்கு - ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுகளுக்கான புதிய தேதியை அறிவித்த NTA
UGC NET 2024 Exam Dates: மாணவர்கள் கவனத்திற்கு - ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுகளுக்கான புதிய தேதியை அறிவித்த NTA
Rasipalan: சனிக்கிழமை இந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் அமோகம் - 12 ராசிக்கும் பலன் இங்கே!
Rasipalan: சனிக்கிழமை இந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் அமோகம் - 12 ராசிக்கும் பலன் இங்கே!
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
HBD Harish Kalyan: பிக் பாஸ் கொடுத்த பப்ளிசிட்டி! விடாமுயற்சியுடன் போராடும் ஹரிஷ் கல்யாணுக்கு பிறந்தநாள் இன்று!
HBD Harish Kalyan: பிக் பாஸ் கொடுத்த பப்ளிசிட்டி! விடாமுயற்சியுடன் போராடும் ஹரிஷ் கல்யாணுக்கு பிறந்தநாள் இன்று!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Embed widget