மேலும் அறிய

பாலம் கட்டுமானப்பணி : விழுப்புரம் - திருக்கோவிலூர் சாலையில் நாளை மறுநாள் முதல் போக்குவரத்து மற்றம்

புதிய பாலம் கட்டுமான பணிக்காக விழுப்புரம்-திருக்கோவிலூர் சாலையில் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

புதிய பாலம் கட்டுமான பணிக்காக விழுப்புரம்-திருக்கோவிலூர் சாலையில் நாளை மறுநாள் (வியாழன் கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் - மாம்பழப்பட்டு - திருக்கோவிலூர் சாலையில் அரகண்டநல்லூர் பேரூராட்சி எல்லையில் உள்ள சிறிய பாலம் கடந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மேலும், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்து பாதிப்புக்குள்ளாகியது. இந்த பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் கட்டும் பணி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் வருகிற ஜூன் 6-ந் தேதி வரை நடைபெற உள்ளது. பாலம் கட்டும் பணி முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, திருக்கோவிலூரிலிருந்து விழுப்புரம் செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் பச்சையம்மன் கோவில் அருகில் உள்ள இந்திரா நகர் வழியாக விழுப்புரம் செல்ல வேண்டும்.


பாலம் கட்டுமானப்பணி : விழுப்புரம் - திருக்கோவிலூர் சாலையில் நாளை மறுநாள் முதல் போக்குவரத்து மற்றம்

திருக்கோவிலூரில் இருந்து விழுப்புரம் செல்லும் 4 சக்கர வாகனங்கள் திருக்கோவிலூர்- வேட்டவலம் சாலையில் வலது புறத்தில் உள்ள சிமெண்ட் சாலை (தேவனூர்) வழியாக சென்று ரெயில்வே சுரங்க பாதை, வெள்ளம்புத்தூர், திருமலைப்பட்டு மற்றும் வடகரை தாழனூர் சாலை வழியாக விழுப்புரத்துக்கு செல்ல வேண்டும். விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் வரும் 4 சக்கர வாகனங்கள் விழுப்புரம் - திருக்கோவிலூர் சாலையில் வலது பக்கத்தில் பிரிந்து வடகரைதாழனூர் சாலை, திருமலைப்பட்டு சாலை வழியாக வெள்ளம்புத்தூர் ரெயில்வே சுரங்க பாதை மற்றும் தேவனூர் வழியாக திருக்கோவிலூர் - வேட்டவலம் சாலையில் இணைந்து திருக்கோவிலூர் செல்ல வேண்டும்.

விழுப்புரத்திலிருந்து அரகண்டநல்லூர் வழியாக திருக்கோவிலூர் செல்லும் பஸ்கள் அரகண்டநல்லூரில் நிறுத்தப்பட வேண்டும். அதேபால் திருக்கோவிலூரிலிருந்து அரகண்டநல்லூர் வழியாக விழுப்புரம் செல்லும் பஸ்கள் அரகண்டநல்லூரில் நிறுத்தப்பட வேண்டும். திருக்கோவிலூரிலிருந்து விழுப்புரம் செல்லும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் கடலூர்-திருக்கோவிலூர்-சங்கராபுரம் சாலையில் அரசூர் வழியாக விழுப்புரம் செல்ல வேண்டும். விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் வரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் அரசூர் வழியாக கடலூர் - திருக்கோவிலூர்- சங்கராபுரம் சாலையில் திருக்கோவிலூர் செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget