வீடூர் அணையின் மீன்பாசி குத்தகைக்கு இ-டெண்டர் மூலம் ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்பு!
வீடூர் அணையின் மீன்பாசி குத்தகையினை ஐந்தாண்டு காலங்களுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் e-டெண்டர் மூலம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் அலுவலகம் வாயிலாக ஏலம்

விழுப்புரம் : விழுப்புரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள நீர்த்தேக்கமான வீடூர் அணையின் மீன்பாசி குத்தகையினை ஐந்தாண்டு காலங்களுக்கு மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் e-டெண்டர் மூலம் சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் அலுவலகம் வாயிலாக ஏலம் விட ஆணையிடப்பட்டுள்ளது.
வீடூர் அணை
வீடூர் அணை என்பது விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ளது . 89 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த அணை 1959 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் திரு காமராசர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. அணையின் மொத்த நீளம் அகலம் முறையாக 15,800 அடி மற்றும் 37 அடி ஆகும். அணையின் மொத்தக் கொள்ளளவு 32 அடியாகும். 3200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெரும் வகையில் அமைந்துள்ள இந்த அணையின் பிரதான கால்வாய் 176 கி. மீ நீளம் கொண்டதாகும். இந்த அணை தமிழக அரசின் பொதுபணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
வீடூர் அணையின் மீன்பாசி குத்தகை
விழுப்புரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள நீர்த்தேக்கமான வீடூர் அணையின் மீன்பாசி குத்தகையினை ஐந்தாண்டு காலங்களுக்கு மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் e-டெண்டர் மூலம் சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் அலுவலகம் வாயிலாக ஏலம் விட ஆணையிடப்பட்டுள்ளது.
டெண்டர் விண்ணப்பங்கள் மற்றும் அதன் தொடர்பான விவரங்கள்
டெண்டர் விண்ணப்பங்கள் மற்றும் அதன் தொடர்பான விவரங்கள் www.tntenders.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இது தொடர்பாக தெளிவுரைகள் தேவைப்படின் விழுப்புரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை வேலை நாட்களில் நேரில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
நெ.62/56A, தாட்கோவளாகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், விழுப்புரம்-605602 fishermenwelfarevpm@gmail.com மற்றும் 04146-259329 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மீன் பாசி குத்தகை என்றால் என்ன ?
அரசுக்குச் சொந்தமான கண்மாய்கள், ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் மீன் பிடிப்பதற்கான அல்லது மீன் வளர்ப்பதற்கான உரிமையை தனியாருக்கோ அல்லது மீனவர் கூட்டுறவுச் சங்கங்களுக்கோ குறிப்பிட்ட காலத்திற்கு (பொதுவாக 3 முதல் 5 ஆண்டுகள்) ஏலம் விடுவது அல்லது குத்தகைக்கு விடுவதே மீன்பாசி குத்தகை எனப்படுகிறது.





















