மேலும் அறிய
Advertisement
யார் அந்த சார்? உங்கவேலை எங்ககிட்ட நடக்காது - கொந்தளித்த சி.வி. சண்முகம்
யார் அந்த சார்? ஏன் அந்த அரசு அந்த சாரை காப்பாற்ற துடிக்கிறது. இந்த விவகாரம் குறித்து இதுவரை முதல்வர் வாய் திறந்து பேசவில்லை - சி.வி. சண்முகம்
விழுப்புரம்: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து விழுப்புரத்தில் மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் உட்பட 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்தும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதை கண்டித்தும் விழுப்புரத்தில் அதிமுக சார்பில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்தது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் சி.வி.சண்முகம் தலைமையில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் விழுப்புரம் நான்கு முணை சந்திப்பிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி கையில் பதாகை ஏந்தி, முழக்கமிட்டு அனுமதியின்றி பேரணியாக செல்ல முயன்றனர் அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதில் காவல்துறையினருக்கும், அதிமுகவினருக்கும் தள்ளு,முள்ளு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து காவல்துறையினர் சி.வி.சண்முகம் உட்பட 500க்கும் மேற்பட்ட அதிமுகவினரை கைது செய்தனர்.
அதிமுகவினரின் இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றபோது பேட்டியளித்த சி.வி.சண்முகம், “திமுக ஆட்சியில் பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடைபெற்றாலும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றம் தினந்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாலியல் குற்றங்கள் தொடர்கதையாகியுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் இதனை நீதிமன்றம் விசாரணை எடுத்து இது கடுமையான வணக்கம் என கூறியுள்ளது.
காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்க வேண்டும். திமுக அரசின் கீழ் உள்ள காவல்துறை முற்றிலும் செயலிழந்து விட்டது. காவல்துறை கோமாநிலைக்கு சென்று விட்டது. ஜனநாயக நாட்டில் போராடுவதற்கு கூட உரிமை இல்லை. பாதிக்கப்பட்ட மாணவி தைரியமாக வெளியே வந்து புகார் அளித்துள்ளார் இது பாராட்டப்பட வேண்டியது. யார் அந்த சார்? ஏன் அந்த அரசு அந்த சாரை காப்பாற்ற துடிக்கிறது.
இந்த விவகாரம் குறித்து இதுவரை முதல்வர் வாய் திறந்து பேசவில்லை. காவல்துறையை காட்டி அச்சுறுத்துவது அதிமுக தொண்டர்களிடம் ஈடுபடாது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும். உண்மையான குற்றவாளி கண்டுபிடிக்கப்பட வேண்டும். யார் அந்த சார் என கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்கள் மத்தியில் நிறுத்தப்பட வேண்டும்” என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion