மேலும் அறிய

Accident : சாலையில் கவிழ்ந்த ஆட்டோ..! காப்பாற்றச் சென்ற 2 ஓட்டுனர்கள்..! லாரி மோதி உயிரிழந்த பரிதாபம்...

சாலையில் கவிழ்ந்த ஆட்டோவில் இருந்தவர்களை காப்பாற்றச் சென்ற ஓட்டுனர்கள் இருவர் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த ஆட்டோவை மீட்கச் சென்ற நபர்களில், லாரி மோதி இரண்டு ஓட்டுநர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த ஆட்டோ

வேலூர் அருகே உள்ள பொய்கை பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 30) ஆட்டோ ஓட்டுநரான இவர், நேற்று (அக்.01) நள்ளிரவு மாதனூரில் இருந்து ஆம்பூர் நோக்கி ஆட்டோ ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது உடைய ராஜபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது ஆட்டோவானது நிலை தடுமாறி, சாலை நடுவில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்துள்ளது.

காப்பாற்ற விரைந்த 5 பேர்

அந்த நேரத்தில் குடியாத்தம் அருகே உள்ள மேல்மாயிலைச் சேர்ந்த சரவணன் (வயது 38) எனும் ஓட்டுநர் லாரியில் கோழி லோடு ஏற்றிக்கொண்டு ஆம்பூர் நோக்கி சென்றுள்ளார். அவருடன் க்ளீனராக பணிபுரியும் சுந்தரமூர்த்தி (வயது 38) என்பவரும் இருந்துள்ளார்.

அப்போது எதிர் திசையில் ஆம்பூரில் இருந்து வேலூர் நோக்கி அரிசி லாரி ஒன்றும் வந்துள்ளது அதில் ஓட்டுநர் ராஜா (வயது 50) க்ளீனராக பணிபுரியும் கிருஷ்ணன் (33)ஆகியோரும் வந்துள்ளனர்.

இவர்கள் நால்வரும் தாங்கள் வந்த லாரிகளை அப்படியே நிறுத்திவிட்டு ஆட்டோவில் சிக்கிய வினோத்குமாரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த நேரத்தில் பைக்கில் அந்த வழியே சீனிவாசன் எனும் இளைஞரும் அவர்களுடன் சேர்ந்து ஆட்டோவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

உதவச் சென்றவர்கள் மீது மோதிய லாரி

5 பேரும் சேர்ந்து கவிழ்ந்து கிடந்த ஆட்டோவை தூக்க முயற்சித்து வந்த நிலையில், வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி வேகமாகச் சென்ற லாரி ஒன்று அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் 5 பேரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், பலத்த காயமடைந்த லாரி ஓட்டுநர்கள் சரவணன், ராஜா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த ஆட்டோவில் இருந்த வினோத் குமார், க்ளீனர்கள், பைக்கில் வந்த இளைஞர் உள்பட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.

2 பேர் பலி, 4 பேர் சிகிச்சை

தொடர்ந்து ஆம்பூர் தாலுகா காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் பலியான இரண்டு ஓட்டுநர்களின் உடல்களை முன்னதாக காவல் துறையினர் உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் சிக்கியவரை மீட்கச் சென்றவர்கள் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Embed widget