மேலும் அறிய

மாமூல் தரமறுத்த வியாபாரி: ஆத்திரத்தில் அரிவாளால் தாக்கிய ரவுடி!

ஆத்திரம் அடைந்த ரவுடி உதயா, தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வியாபாரி பாலுவின் தலை மற்றும் முதுகு பகுதியில் சரமாரியாக தாக்கியுள்ளார் .

வேலூர் காய்கறி மார்க்கெட்டில் இன்று அதிகாலை , மாமூல்  தரவில்லை என்று காய்கறி வியாபாரியை , ரவுடி ஒருவர் , கத்தியால் , தலை மட்டும் முதுகு பகுதியில் தாக்கி விட்டு அங்கு இருந்து தப்பி சென்றுள்ளார்.  தொடர்ந்து காய்கறி மார்க்கெட்டில் மாமூல் கேட்டு , அராஜகம் செய்துவரும் ரவுடி உதயா  மற்றும் அவனது கூட்டாளிகளை கைது செய்து , உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று , காய்கறி மார்க்கெட் சங்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் .

 வேலூர் கோட்டைக்கு எதிப்புறம் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே இயங்கி வருகிறது , நேதாஜி மார்க்கெட் . இங்கு அதிகாலை 1  மணியிலிருந்து , காய்கறி மொத்த வியாபாரம் தொடங்கி  நடந்து வரும் .

மாமூல் தரமறுத்த வியாபாரி: ஆத்திரத்தில் அரிவாளால் தாக்கிய ரவுடி!

வேலூர் , ராணிப்பேட்டை , திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நூற்று கணக்கான , மொத்த காய்கறி வியாபாரிகள் , இங்கு கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர் .

இவர்களைப் போலவே  சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த பாலு (வயது 48 ) என்பவர் காய்கறி மொத்த வியபாரம் செய்து வருகின்றார் . இன்று காலை 4 மணியளவில் அவர் வியாபாரத்துக்காக , கடையை எடுத்து வைத்து கொண்டு இருக்கும் பொழுது .

ஓல்ட் டவுன்  பகுதியை சேர்ந்த , 'ஓல்ட் டவுன்' உதயா (வயது 33 ) என்பவர் , அவரது கூட்டாளிகள் 4 பேருடன் பாலுவின் கடைக்கு வந்துள்ளார் ,  வந்தவர் , பாலுவிடம் மாமூல் பணம் கேட்டு மிரட்டியுள்ளார் . அதற்கு பாலு 'இப்பொழுது தான் , கடையை திறந்து எடுத்து வைத்து கொண்டு இருக்கிறேன் , அதற்குள் பணம் கேட்டல் நான் எவ்வாறு தருவது' என்று ரவுடி உதயவிடம் முறையிட்டுள்ளார் .

மாமூல் தரமறுத்த வியாபாரி: ஆத்திரத்தில் அரிவாளால் தாக்கிய ரவுடி!

இதனால் ஆத்திரம் அடைந்த ரவுடி உதயா , தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த அரிவாளை , பின்பக்கமாக திருப்பி  , பாலுவின் தலை மற்றும் முதுகு பகுதியில் சரமாரியாக தாக்கியுள்ளார் . அவர் அலறல் சத்தம் கேட்டு , பக்கத்துக் கடைக்காரர்கள் ஓடிவரவே , அங்கு இருந்து உதயா மற்றும் அவரது கூட்டாளிகள் தப்பித்து சென்றுள்ளனர் .

மேலும் காயமடைந்த பாலுவை அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .  சம்பவம் அறிந்து மருத்துவமனைக்கு வந்த வேலூர் வடக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் , சோமசுந்தரம் , பாலுவிடம் புகாரை பெற்று , தலைமறைவாக உள்ள ரவுடி , உதயா மீது இந்திய தண்டனை சட்டம் , பிரிவுகள் , 294 b (இழிவிவான வார்த்தைகள் பயன்படுத்துதல் ) , 324 (காயப்படுத்துதல் ) , 384 (மிரட்டி பணம் பறித்தல் ) மற்றும் பிரிவு 394  (கொள்ளை அடிக்க  முற்படும்போது காயப்படுத்துதல் ) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ரவுடி 'ஓல்ட் டவுன் ' உதயாவை தேடி வருகின்றனர் .

தொடரும் ரவுடி உதயாவின் அராஜகம் .

இந்த சம்பவம் தொடர்பாக , வேலூர் காய்கறி மார்க்கெட் தலைவர் A பாலுவை,  தொடர்பு கொண்ட பொழுது . சமீப காலமாக ரவுடி உதயாவின் அராஜக போக்கு , எல்லை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது . சென்ற வாரம் கூட , மார்கெட்டிற்கு காய்கறி வாங்க வந்த வாடிக்கையாளர் ஒருவரை , ரவுடி சத்யா இருசக்கர வாகனத்தில் இடித்து கீழே தள்ளியுள்ளார் . இதை கண்டித்த வியாபாரி ஒருவரை , த்தியை எடுத்து காண்பித்து  , கொலை மிரட்டல் விடுத்துள்ளார் . மேலும் தினமும் அதிகாலையிலே , அவரது கூட்டாளிகளுடன் , நேதாஜி மார்க்கெட் பகுதியில்  மாமூல் வேட்டையில் இறங்கி  , வியபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களை அச்சுறுத்தி வருகிறார் . இன்றைய சம்பவத்திற்கு பிறகு , "அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் எங்களது , காய்கறி சங்கத்தின் சார்பாக  தனியாக  புகார் ஒன்றை சமர்பித்துள்ளோம் என்று தெரிவித்தார் .

தலைமறைவாக உள்ள சத்யா மீது , அடிதடி , கொலைமிரட்டல் உள்ளிட்ட பல வழக்குகள் , வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது .

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
ABP Premium

வீடியோ

”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?
ஓடும் பேருந்தில் சில்மிஷம்! வீடியோ வெளியிட்ட பெண்! உயிரை மாய்த்த பயணி!
மீண்டும் மீண்டுமா... தெறி ரிலீஸ்-க்கும் சிக்கல்! மோகன் ஜி-யால் புது பஞ்சாயத்து
AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
கோவில் சொத்து முறைகேடு ; 400 சவரன் நகை , 2 கோடி பணம் எங்கே ? பொதுமக்கள் போராட்டம்
கோவில் சொத்து முறைகேடு ; 400 சவரன் நகை , 2 கோடி பணம் எங்கே ? பொதுமக்கள் போராட்டம்
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
Mahindra THAR: என்ன இப்படி பண்ணிட்டீங்களே.?! பிரபல SUV THAR-ன் விலையை ஏற்றிய மஹிந்திரா; எவ்வளவு தெரியுமா.?
என்ன இப்படி பண்ணிட்டீங்களே.?! பிரபல SUV THAR-ன் விலையை ஏற்றிய மஹிந்திரா; எவ்வளவு தெரியுமா.?
Trump Greenland Denmark: கிரீன்லாந்து விவகாரம்; “டென்மார்க் கோட்டை விட்டுடுச்சு, நான் செஞ்சு முடிப்பேன்“ - ட்ரம்ப் பதிவு
கிரீன்லாந்து விவகாரம்; “டென்மார்க் கோட்டை விட்டுடுச்சு, நான் செஞ்சு முடிப்பேன்“ - ட்ரம்ப் பதிவு
Embed widget