நான்கு பேரின் மொத்த உருவமாக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார் - அமைச்சர் எ.வ.வேலு
திருவண்ணாமலை கீழ்நாத்தூர் நகராட்சி தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உணவுகளை பரிமாறி மாணவ மாணவியரோடு அமர்ந்து உணவருந்தி துவக்கி வைத்தார்.
![நான்கு பேரின் மொத்த உருவமாக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார் - அமைச்சர் எ.வ.வேலு Tamil Nadu Chief Minister Perundhalaivar Kamaraj who started the morning nutrition program said Minister e v velu நான்கு பேரின் மொத்த உருவமாக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார் - அமைச்சர் எ.வ.வேலு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/17/e048ab3d993af0c793464e51569ff2091663386009873109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவண்ணாமலையில் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் பயிலும் திருவண்ணாமலை நகராட்சியில் 14 பள்ளிகளும், செய்யாறு நகராட்சியில் 7 பள்ளிகளும், ஜவ்வாதுமலையில் 46 பள்ளிகள் என தொடக்கக்கல்வி பள்ளிக்கூடங்கள் என மொத்தம் 67 பள்ளிகளில் பயிலும் 3517 மாணவ மாணவியருக்கு முதற்கட்டமாக இந்த திட்டத்தை திருவண்ணாமலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்தார். இதன்பின்னர் அவர் பேசுகையில், தமிழகத்தில் வரும் காலங்களில் மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கும் காலையில் உணவு அருந்தும் வகையில் இந்த திட்டம் மேம்படுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். தமிழக முதல்வர் அறிவித்துள்ள இந்த திட்டம் அண்டை மாநிலங்களுக்கும் முன்னோடி திட்டமாக உள்ளது என்றும், ஏழை எளிய மாணவர்கள் காலையில் உணவு அருந்தாமல் வரும்போது அவர்களுக்கு புரதச்சத்து பிரச்சனைகள் இருக்க வாய்ப்புள்ளதாகவும் , குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கவும் பசி மயக்கம் இல்லாமல் கவனத்தோடு படிப்பதற்கும் காலை உணவு திட்டம் தமிழக முதல்வர் கொண்டுவரப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
உலகத்தில் எந்த மாநிலம் இல்லாத அளவிற்கு காலை உணவு திட்டத்தை தமிழக முதலமைச்சர் தான் கொண்டு வருகிறார். இதில் யாருக்கும் பங்கு இல்லை என்றும் முதல் முதலாக சர்பிடி தியாகராஜன் நூறாண்டு காலத்திற்கு முன்பு எண்ணிய எண்ணத்தை திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டு முதலமைச்சருக்கும் வந்திருக்கிறது. முதல் முதலாக காலை உணவு திட்டத்தை இன்றைய முதலமைச்சர் சர்பிடி தியாகராஜனாக நின்று திட்டத்தை திட்டி உள்ளார். இந்தத் திட்டத்தின் மூலமாக முதலமைச்சரை பார்க்கிற பொழுது சர்பிடி தியாகராஜன் ஆகவும், பெருந்தலைவர் காமராஜர் ஆகவும் , மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆகவும், தலைவர் கலைஞர் ஆகவும் நான்கு பேரின் மொத்த உருவமாகவும் இன்றைக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக விளங்குகிறார்.
தமிழ்நாட்டில் பெறும் பணச்சுமை இருக்கிறது என்றும் அரசாங்கத்திற்கு பெரும் கடன் சுமை இருந்து கொண்டிருக்கிறது. பத்தாண்டு காலம் ஆட்சி செய்த அதிமுக அரசு 6,25 ,000 கோடி ரூபாய் தமிழ்நாட்டை கடனாளியாக ஆக்கிவிட்டு சென்றனர். ஆண்டுக்கு ஒரு முறை 48,000 கோடி ரூபாய் வட்டியாக அடைக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளதாகவும், ஆனாலும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் கடன் இருக்கட்டும் வட்டியை செலுத்துவோம் என்று இருந்துள்ளனர். குழந்தைகளை வஞ்சிக்க கூடாது என்று தாய் உள்ளம் கொண்ட தமிழக முதலமைச்சர் இந்தத் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி குழந்தைகளுக்கும் காலை உணவு வழங்க வேண்டும் என்று திட்டத்தைக் கொண்டு வந்தவரை தாய் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும் என்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் முருகேஷ்,சட்டமன்ற உறுப்பினர் கிரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)