மேலும் அறிய

யார் எதிர்த்தாலும் திருவண்ணாமலைக்கு சிப்காட் வந்தே தீரும் - எ.வ.வேலு சபதம்

’’நல்லநோக்கத்தின் அடிப்படையில் திட்டங்களை கொண்டு வந்தால் அதனை விவசாயிகள் போர்வையில்  இருக்கும் என சிலர் எதிர்க்கிறார்கள்’’

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேரூராட்சி அலுவலகம் அருகே பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், புதிய கட்டிடங்கள் திறப்பு விழா  நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.என். அண்ணாதுரை, எம்.கே.விஷ்ணு பிரசாத், கலசபாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன், மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 2,487 நபருக்கு 750.59 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 

யார் எதிர்த்தாலும் திருவண்ணாமலைக்கு சிப்காட் வந்தே தீரும் - எ.வ.வேலு சபதம்

இந்த நிகழ்ச்சியில் பேசிய பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழக மக்களின் நாடிபிடித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்கிறார். திருவண்ணாமலை மாவட்ட வளர்ச்சியில் கடந்த 10 ஆண்டாக தொய்வு காணப்பட்டது; கடந்த 10 ஆண்டுகளில் இது போன்ற நிகழ்ச்சிகள் ஏதும் நடக்கவில்லை. மக்களை தேடி மருத்துவம் மூலம் வீடுதேடி மருந்து வழங்கப்படுகிறது. நான் முதல்வருடன் நீண்டதூரம் பயணிக்கும் போது அவரிடம் மனு கொடுக்க மக்கள் குவிந்து வருகின்றனர். இன்னுயிர் காக்கும் திட்டம், நம்மை காக்கும் 48 மணி நேரம் திட்டம் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.

யார் எதிர்த்தாலும் திருவண்ணாமலைக்கு சிப்காட் வந்தே தீரும் - எ.வ.வேலு சபதம்

திமுக ஆட்சியில் மட்டும் தான் திருவண்ணாமலை மாவட்டம் வளர்ச்சி பெற்று வருகிறது. கொரோனா காலத்தில் மக்கள் வாழ்வாதாரம் இழந்தனர். அதற்காக அதிமுக அரசிடம் 5 ஆயிரம் கேட்டும் தரவில்லை. திமுக வெற்றி பெற்று முதல்வராக மு.கஸ்டாலின் பொறுப்பேற்று போட்ட முதல் கையெழுத்து 4 ஆயிரம் ரூபாய் குடும்ப அட்டைகளுக்கு வழங்கினார். ஒன்றிய அரசு மக்களை காப்பாற்றுவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என திமுக ஆட்சியை பாராட்டுகிறது. மாவட்டத்தின் வடபகுதியான செய்யாறில் சிப்காட் தொடங்கியது திமுக ஆட்சியில் தான் தென் பகுதியில்  அமைக்க வேண்டும் என நான் வைத்த கோரிக்கையை முதல்வர் ஏற்று அனுமதி வழங்கினார்.

யார் எதிர்த்தாலும் திருவண்ணாமலைக்கு சிப்காட் வந்தே தீரும் - எ.வ.வேலு சபதம்

அதற்கான நில எடுக்கும் பணி செய்ய முயலும் போது சில விவசாயிகள் நிலம் தர மறுக்கின்றனர். நான் அமைச்சராக இருந்தாலும் நான் ஒரு விவசாயி மாவட்டத்தில் உள்ள பிள்ளைகள் எல்லோரும் என் பிள்ளைகளாக நினைத்து அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நல்லநோக்கத்தின் அடிப்படையில் திட்டங்களை கொண்டு வந்தால் அதனை விவசாயிகள் போர்வையில்  இருக்கும் என சிலர் எதிர்க்கிறார்கள்.  இந்தியாவின் 4வது தூண் என சொல்லப்படும் பத்திரிகையாளர்கள் முன்னலையில் நான் இப்போது கூறுகிறேன். யார் எதிர்த்தாலும் செங்கம் அருகே புதிய  சிப்காட் கண்டிப்பாக வந்தே தீரும்  என எ.வ.வேலு பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM MK Stalin:
CM MK Stalin: "அதானியைச் சந்தித்தேனா?" சட்டசபையில் போட்டு உடைத்த மு.க.ஸ்டாலின்!
UGC NET 2024: இன்றே கடைசி: ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் அவதி!
UGC NET 2024: இன்றே கடைசி: ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் அவதி!
Chennai Safety: என்கவுன்டர்னா பயந்துருவோமா? அடங்காத ரவுடிகள் - தொடரும் கொலைகள், சென்னை பாதுகாப்பானதா?
Chennai Safety: என்கவுன்டர்னா பயந்துருவோமா? அடங்காத ரவுடிகள் - தொடரும் கொலைகள், சென்னை பாதுகாப்பானதா?
"குறையே சொல்ல மாட்டேன்" EPS கொண்டு வந்த திட்டத்தை புகழ்ந்து தள்ளிய துரைமுருகன் - எந்த திட்டம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?MK Stalin slams Intelligence IG: ''கோட்டை விட்ட உளவுத்துறை! கடுப்பான முதல்வர் ஸ்டாலின்!High Court Judge Controversy Speech: ”இது இந்துஸ்தான்!இந்துக்கள் தான் ஆளனும்” நீதிபதி சர்ச்சை கருத்துAadhav Arjuna : ’’நான் ஓயமாட்டேன்..மன்னர் பரம்பரை ஒழியணும்’’ஆதவ் அர்ஜுனா பரபர

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin:
CM MK Stalin: "அதானியைச் சந்தித்தேனா?" சட்டசபையில் போட்டு உடைத்த மு.க.ஸ்டாலின்!
UGC NET 2024: இன்றே கடைசி: ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் அவதி!
UGC NET 2024: இன்றே கடைசி: ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் அவதி!
Chennai Safety: என்கவுன்டர்னா பயந்துருவோமா? அடங்காத ரவுடிகள் - தொடரும் கொலைகள், சென்னை பாதுகாப்பானதா?
Chennai Safety: என்கவுன்டர்னா பயந்துருவோமா? அடங்காத ரவுடிகள் - தொடரும் கொலைகள், சென்னை பாதுகாப்பானதா?
"குறையே சொல்ல மாட்டேன்" EPS கொண்டு வந்த திட்டத்தை புகழ்ந்து தள்ளிய துரைமுருகன் - எந்த திட்டம்?
Teachers Protest: படையெடுத்த பகுதிநேர ஆசிரியர்கள்; சென்னையில் தொடங்கிய போராட்டம்- கைது செய்யும் காவல்துறை!
Teachers Protest: படையெடுத்த பகுதிநேர ஆசிரியர்கள்; சென்னையில் தொடங்கிய போராட்டம்- கைது செய்யும் காவல்துறை!
RBI Governor Role: ஆர்பிஐ ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கு? முக்கிய வேலை, சம்பளம், வசதிகள் இவ்வளவா?
RBI Governor Role: ஆர்பிஐ ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கு? முக்கிய வேலை, சம்பளம், வசதிகள் இவ்வளவா?
SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
New RBI Governor: இனிமே இவர் தான்.. வட்டி குறையுமா? இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர், யார் இந்த சஞ்சய் மல்ஹோத்ரா?
New RBI Governor: இனிமே இவர் தான்.. வட்டி குறையுமா? இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர், யார் இந்த சஞ்சய் மல்ஹோத்ரா?
Embed widget