மேலும் அறிய

திருவண்ணாமலை : போலியோ சொட்டு மருந்து 2048 முகாம்கள்.. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அளிக்க திட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 லட்சத்து 23 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நாளை 2048 இடங்களில் நடைபெறுகிறது.

போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயை நமது இந்திய நாட்டில் அறவே ஒழிக்கும் வகையில் கடந்த 1995-ம் ஆண்டு முதல் கடந்த 27 ஆண்டுகளாக தீவிர முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. நடத்தப்பட்ட முகாம்களினால் இந்தியாவில் இளம்பிள்ளைவாத நோய் படிப்படியாக ஒன்றிய அரசால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.  தற்போது நாளை 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இந்நிலையில் போலியோ சொட்டு மருந்து முகாம் மூலம் நம் நாட்டில் பெருமளவில் போலியோ நோய் தாக்கம் குறைக்கப்பட்டு தற்சமயம் அந்நோயை முற்றிலும் ஒழிப்பதற்கான இறுதி கட்டத்தில் உள்ளோம். சிறுவர்கள் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் முன்னரே போலியோ சொட்டு மருந்து அளித்து இருப்பினும் வருகிற 27-ந் தேதியன்று இலவசமாக தமிழ்நாடு அரசு மூலம் சொட்டு மருந்து அளிக்கப்பட உள்ளது.

திருவண்ணாமலை : போலியோ சொட்டு மருந்து 2048 முகாம்கள்.. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அளிக்க திட்டம்

தற்போது கொரோனா காலம் என்பதால் போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வரும்போது முககவசம் அணிந்து வருவதுடன் சமூக இடைவெளியும் அவசியம் கடைபிடிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ,செய்யார்,ஆரணி,போளூர், செங்கம், கண்ணமங்கலம், ஜவ்வாதுமலை, சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மலை கிராமங்கள் என மாவட்ட முழுவதிலும் 2048 முகாம்களில் 8055 பணியாளர்கள் மூலமாக இம்முகாம் செயல்பட உள்ளது. இவர்கள் முகாம் நடைபெறும் நாள் அன்று அந்தந்த முகாம்களிலேயே குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிப்பார்கள். மறுநாள் முதல் பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று விடுபட்ட குழந்தைகளுக்கு வீட்டிலேயே சொட்டு மருந்து அளிப்பார்கள். இப்பணியில் கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

திருவண்ணாமலை : போலியோ சொட்டு மருந்து 2048 முகாம்கள்.. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அளிக்க திட்டம்

முகாம்கள் மற்றும் வீடுகளில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதுடன் ரெயில் நிலையம், பேருந்து நிலையம், திரையரங்குகள், தங்கும் விடுதிகள் போன்ற இடங்களில் நடமாடும் முகாம் மூலம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க மாவட்ட நிர்வாகம் மூலம் ஆவன செய்யப்பட்டு உள்ளது. நமது மாவட்டதில் ஒரு குழந்தைகள் கூட விடுபடாமல் அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்டவர்கள் 2 லட்சத்து 23 ஆயிரத்து 474 குழந்தைகளுக்கு நாளை சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து போலியோ நோயினை ஒழிப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

Minister Rajmohan: “கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
“கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Rajmohan: “கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
“கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
US Iran War: ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
Automatic Cars Under 6 Lakh: வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
Nissan Tekton First Look: டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
Embed widget