மேலும் அறிய
Advertisement
வேலூர் அருகே கணவன் குடிப்பழக்கத்தை விட மறுத்ததால் தீக்குளித்து உயிரிழந்த மனைவி...!
’’விஜயனிடம் குடிப்பழக்கத்தை கைவிடுமாறும் இல்லையெனில் தான் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிடுவேன் என பிரியா எச்சரித்துள்ளார்’’
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர் பேட்டை ஊராட்சிக்குட்பட்ட லிங்குன்றம் ஜாபர்கான் பேட்டை பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளி விஜயனுக்கும் (40) ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புரா பகுதியை சேர்ந்த பிரியாவுக்கும் (37) கடந்த 17 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு மோகன்குமார் (16) என்ற மகனும், மாதவி (10 ) என்ற மகளும் உள்ளனர். தினக்கூலியாக கட்டிட வேலை செய்து வரும் விஜயனுக்குச் சமீப காலமாக மதுப்பழக்கம் அதிகரித்ததால் மனைவி பிரியா உடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதேபோன்று நேற்று இரவு 10 மணிக்கு கணவன் மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் எழுந்துள்ளது. அப்போது பிரியா விஜயனிடம் குடிப்பழக்கத்தை கைவிடுமாறும் இல்லையெனில் தான் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிடுவேன் என்று எச்சரித்துள்ளார். இதற்கு விஜயன் தனது தரப்பிலிருந்து பதில் ஏதும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகின்றது . இந்நிலையில் இரவு 10.30 மணி அளவில் அவர்களது வீட்டிற்கு பக்கத்தில் உள்ள காலி இடத்தில் பிரியா எரிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இந்த சம்பவம் வீட்டில் தூங்கி கொண்டு இருந்த மகன் மதன்குமார் மற்றும் மகள் மாதவி ஆகிய இருவருக்கும் கூட அவரது தாய் தற்கொலை செய்துகொண்டது தெரியவில்லை என்று கூறப்படுகின்றது.
மேலும் பிரியா எறிந்த நிலையில் இருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக இந்த சம்பவம் குறித்து தகவலை ஆற்காடு அடுத்த தாஜ்புரா கிராமத்தில் வசிக்கும் பிரியாவின் பெற்றோருக்குத் தெரிவித்துள்ளனர். சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இரவோடு இரவாக குடியாத்தம் வந்தடைந்தனர். மேலும் அவர் இறந்து தொடர்பான புகாரை பிரியாவின் மூத்த சகோதரர் சுரேஷ் என்பவர் குடியாத்தம் நகரக் காவல் நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார்.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில் குடியாத்தம் துணை காவல்துறை சூப்பிரண்டு ராமமூர்த்தி நகர காவல்நிலைய ஆய்வாளர் லட்சுமி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் இன்று காலை 4 மணி அளவில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் முதற்கட்ட விசாரணைக்குப் பின்பு பிரியாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
பிரியா தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொண்டார் என அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கவே குடியாத்தம் நகரக் காவல் நிலைய காவல்துறை அதிகாரிகள் சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக பிரியாவின் கணவர் விஜயனை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion