மேலும் அறிய
Advertisement
சர்வதேச பெண் குழந்தைகள் தினம்; திருப்பத்தூரில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் தொடக்கம்
பெண் குழந்தைகளுக்கு எதிரான எந்தவித குற்றங்கள் குறித்த தகவல்களையும் உரிய அலுவலர்களிடமோ 1098/181 இலவச தொலைபேசி உதவி எண்கள் மூலமாகவோ கட்டாயம் தெரிவிப்பேன்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளை கற்பிப்போம் குறித்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கையெழுத்துயிட்டு துவக்கி வைத்தார்.
பின்னர் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
கருவில் வளரும் சிசுவின் பாலினத்தை எக்காரணம் கொண்டும் கண்டறியவோ கருக்கொலை செய்யவோ முயல மாட்டேன். நானும் எனது உறவினர்களும் எனது கிராமத்தில் பெண் குழந்தைகள் பிறப்பிற்கும் அவர்களின் பாதுகாப்பிற்கும் எவ்வித பாகுபாடின்றி சமமான மதிப்பு அளித்து உதவி செய்வோம். மேலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி அளித்து உயர்கல்வி தொடர்வதை உறுதி செய்வோம். குழந்தை திருமணத்தை நடத்தவோ ஆதரிக்கவோ மாட்டோம். பெண் குழந்தைகளுக்கு எதிரான எந்தவித குற்றங்கள் குறித்த தகவல்களையும் உரிய அலுவலர்களிடமோ 1098/181 இலவச தொலைபேசி உதவி எண்கள் மூலமாகவோ கட்டாயம் தெரிவிப்பேன் என பள்ளி மாணவிகள் உறுதிமொழி கூறினர்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, மகளிர் திட்ட இயக்குனர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion