மேலும் அறிய
Advertisement
வேலூரில் ஆந்த்ராக்ஸ் நோயால் உயிரிழக்கும் கால்நடைகள்-போலி மருத்துவர்களால் வேதனையில் விவசாயிகள்
’’அரசு கால்நடை மருத்துவர்களை சிகிச்சைக்கு அழைத்தாலும் , தூரம் மற்றும் மோசமான சாலைகளை காரணம்காட்டி இந்த கிராமங்களுக்கு மருத்துவம் பார்ப்பதை தவிர்த்து வருகின்றனர்’’
மழைக் காலம் தொடங்க உள்ள நிலையில் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கால் நடைகளுக்கு ஆந்த்ராக்ஸ் நோய் பரவல் அதிகரித்துள்ளது. கால்நடை மருத்துவமனைகள் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி போலி கால்நடை மருத்துவர்கள் கால்நடைகளுக்குத் தவறான சிகிச்சை அளிப்பதாகப் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டத்துக்கு உட்பட்ட ஒடுக்கத்தூர், சேர்பாடி, வண்ணன்தாங்கல், கொட்டாவூர், பெரிய ஏரியூர், கீழ்கொத்துர் மற்றும் சுற்றியுள்ள சிறு கிராமங்களில் விவசாய நிலங்கள் அதிக அளவில் உள்ளது. அங்கு வசிக்கும் பெரும்பாலானோர் பசு, காளை உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கீழ்கொத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மாடுகள் அதிக அளவில் இறந்து வருகிறது. இறந்த மாடுகளை உடற்கூறு செய்யும் கால்நடை மருத்துவர்கள் மாடுகள் ஆந்த்ராக்ஸ் நோய் தாக்குதலால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
கால்நடைகள் உயிரிழப்பால் இந்த பகுதி விவசாயிகள் வருவாயை இழந்து மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் .
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கீழ்கொத்துர் கிராமத்தில் விவசாயி ஒருவர் எருது விடும் விழாவுக்குத் தயார் நிலையில் வைத்திருந்த காலை மாடு ஒன்று உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்கியுள்ளது. எனவே அணைக்கட்டு வட்டத்தைச் சேர்ந்த கிராம மக்கள் கால்நடைத் துறை சார்பில் கீழ்கொத்தூர் உள்பட அனைத்து கிராமங்களுக்கும் கால்நடைகளுக்குச் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கால்நடை மருத்துவமனைகள் அமைக்க வேண்டும் .
கீழ்கொத்தூர், வழுதலம்பட்டு, பெரிய ஏரியூர் சுற்றியுள்ள பகுதியில் பால் கொள்முதல் நிலையங்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களும் உள்ளது. இங்கு ஒவ்வொரு கிராமத்திலும் நாளொன்றுக்கு சுமார் 1000 லிட்டர் வரை பால் கொள் முதல் செய்யப்படுகின்றது. இருந்தபோதிலும் இந்த கிராமங்களில் கால்நடை மருத்துவமனைகள் இல்லை . இதனால் பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒடுக்கத்தூர் அல்லது அணைக்கட்டு அரசு கால்நடை மருத்துவமனைகளுக்கு தான் கால்நடைகளை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்ற நிலை உள்ளது.
மேலும் அரசு கால்நடை மருத்துவர்களை சிகிச்சைக்கு அழைத்தாலும் , தூரம் மற்றும் மோசமான சாலைகளை காரணம்காட்டி இந்த கிராமங்களுக்கு மருத்துவம் பார்ப்பதை தவிர்த்து வருகின்றனர் . இதனால் போலி கால்நடை மருத்துவர்களின் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது. போலி கால்நடை மருத்துவர்கள் அளிக்கும் தவறான சிகிச்சையால் மாடுகள் இறப்பதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion