மேலும் அறிய

நாம் அனைவரும் தமிழர்கள் தான்; ஒருதாய் பிள்ளைகள் தான். கடல் மட்டுமே நம்மை பிரிக்கிறது : முதல்வர் பேச்சு

’’நீங்கள் ஆதரவற்றவர்கள் அல்ல என்னை உங்கள் சகோதரனாக எடுத்துக்கொள்ளுங்கள். என்றைக்கும் திமுக அரசு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்’’

தமிழகத்தில் உள்ள புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்காக புதிய குடியிருப்புகள் கட்ட அடிக்கல் நாட்டுதல். இலவச கல்வி , இலவச அரிசி தரமான துணி, இலவச கேஸ் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட 10 திட்டங்களை முதலமைச்சர் தொடங்கிவைத்தார். 
 
வேலூர் அடுத்த மேல்மொனவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அருகே இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு முதற்கட்டமாக 142.16 கோடி மதிப்பீட்டில் 3,510 புதிய வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். மேலும் ரூபாய் 30 கோடி மதிப்பில் பல்வேறு அடிப்படை வசதிகளுக்கான அடிக்கல் நாட்டி வைத்தார். பின்னர் பொறியியல் மாணவி ஒருவருக்கு இலவச கல்விக்கான முழு கல்வி கட்டண காசோலை, மற்றும் 5 கல்லூரி மாணவ மாணவிகளுக்கு உயர்த்தப்பட்ட கல்வி தொகைக்கான காசோலை, 13 சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதிக்கான காசோலை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.
 
நாம் அனைவரும் தமிழர்கள் தான்; ஒருதாய் பிள்ளைகள் தான். கடல் மட்டுமே நம்மை பிரிக்கிறது : முதல்வர் பேச்சு
 
இந்த விழாவில் மொத்தமாக 317 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவில் மாநில நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி K.S.மாஸ்தான், மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக மகளிர் குழுவினர் தயாரித்த கைவினைப் பொருட்களை முதலமைச்சர் மு க. ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களாக இருந்தாலும் மொழியால் இனத்தால் பண்பால் நாகரிகத்தால் தமிழர்களோடு ஒன்று பட்டவர்கள். ஒரு தாய் மக்கள். 1983ஆம் ஆண்டு முதல் ஈழத்தில் இருந்து வந்த நாள் முதல் திமுக அவர்களுக்கு அடைக்கலமாக இருந்து வருகிறது. இலங்கை தமிழர்களுக்கு 1997ஆம் ஆண்டு தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் அன்றைய ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ஓரளவு அவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.
 
நாம் அனைவரும் தமிழர்கள் தான்; ஒருதாய் பிள்ளைகள் தான். கடல் மட்டுமே நம்மை பிரிக்கிறது : முதல்வர் பேச்சு
 
அதன்பிறகு கடந்த 10 ஆண்டுகளாக புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு எந்த ஒரு திட்டமும் கொண்டு வரவில்லை. இலங்கை அகதிகள் முகாம்கள் என அழைக்கக் கூடாது என்பதற்காக மறுவாழ்வு முகாம் என்று சட்டப்பேரவையில்  அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள 106 புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழருக்கான முகாம்களை ஆய்வு செய்து அதனை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் 19 ஆயிரத்து 46 குடும்பங்களுக்கு 7 ஆயிரத்து 469 வீடுகள் கட்டித் தரநடவடிக்கை எடுக்கப்பட்டு, இன்று வமுதல் கட்டமாக 290 சதுர அடியில் 3510 வீடுகள் கட்ட 142-16 கோடி மதிப்பீட்டில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்காக கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் தமிழக அரசு முழுமையாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
நாம் அனைவரும் தமிழர்கள் தான்; ஒருதாய் பிள்ளைகள் தான். கடல் மட்டுமே நம்மை பிரிக்கிறது : முதல்வர் பேச்சு
 
இலவசக் கல்வி மற்றும் பட்டயப் படிப்புகளுக்கு ஊக்கத் தொகை ஆகியவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து குடும்பங்களுக்கும் இலவசமாக அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்காக இன்றுமுதல், 8.6 கோடி மதிப்பீட்டில் மானிய விலையில் எரிவாயு இணைப்பு திட்டம், இலவச அரிசி வழங்கும் திட்டம், இலவச கல்வி, பட்டப் படிப்புகளுக்கு உயர்த்தப்பட்ட கல்வி உதவித்தொகை, ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் 5000 இளைஞர்களுக்கு  திறன் வளர்ச்சி மேம்பாட்டு பயிற்சி, ரூ621 சுய உதவிக் குழுக்களுக்கு 6.15 கோடியில் சமுதாய முதலீட்டு நிதிவழங்குதல் கோ-ஆப்டெக்ஸ் மூலம் தரமான துணிகள் வழங்குதல்,உள்ளிட்ட  10 நல திட்டங்கள் செயல்படுத்தப்படும். இலங்கை தமிழருக்காக தமிழக அரசு என்றும் துணை நிற்கும்.
 
பல்வேறு காலகட்டச்களில் இலங்கை தமிழருக்கு நல திட்டம் செய்திருந்தாலும். 6 ஆவது முறையாக திமுக பொறுப்பேற்று இத்திட்டத்தை உங்களை சந்தித்து தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி. ஒரு அடையாள சொல்லாகவே இலங்கை தமிழர் என அழைக்கிறேன் மற்றபடி நாம் அனைவரும் தமிழ் இனத்தை சேர்ந்தவர்கள். ஒரு தாய் பிள்ளைகள் தான். கடல் தான் நம்மை பிறிக்கிறது. நிங்கள் விட்ட கண்ணீர் மறக்க முடியாது. கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் இவர்களை பற்றி கவலைபடவே இல்லை. 
 
இவர்கள் அகதிகள் அல்ல, ஆனாதைகள் அல்ல நாங்கள் இருக்கிறோம். இது அகதிகள் முகாம் அல்ல இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இது முடிவல்ல, மற்ற முகாம்களில் அமைச்சர்கள் இத் திட்டத்தை தொடங்கி வைப்பார்கள்.  இறுதியாக சொல்கிறேன் நீங்கள் ஆதரவற்றவர்கள் அல்ல என்னை உங்கள் சகோதரனாக எடுத்துக்கொள்ளுங்கள். என்றைக்கும் திமுக அரசு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். எத்தனை நிகழ்ச்சிக்கு சென்றாலும் இங்கு வந்ததில் பெறுமை கொள்கிறேன் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். இலங்கை மக்கள் வசிக்கும் முகாமில் ஆய்வு செய்த முதல்வர்.  தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் வாழ்வாதாரத்தை மேம்படும் வகையில் சிறுபான்மை துறை சார்பில் இலங்கை தமிழர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்ட அடிக்கல் நாட்டுவிழா, 10 திட்டங்களை வேலூர் அடுத்த மேல்மொனவூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். பின்னர் மேல்மொனவூரில் உள்ள முகாமிற்க்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து பேசினிர். குறைகளை கேட்டறிந்தார். அங்குள்ள அங்கான்வாடி மையத்தையும் ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த பெண் குழந்தையை தூக்கி கொஞ்சினார். முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அங்குள்ள மக்கள் புகைபடங்களை எடுத்துக்கொண்டனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget