மேலும் அறிய

எலியை சாப்பிடும் நூதன போராட்டம் - திருச்சியில் விவசாயிகளால் பரபரப்பு

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 14 நாடகளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 14 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று எலியை சாப்பிடும்- நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த போராட்டத்தின் முக்கிய கோரிக்கையான   2016 - ல் வறட்சியின் பொழுது பெரிய விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கூறிய பிறகு , பெரிய விவசாயிகள் வாங்கிய குறுகிய கால கடனை விவசாயிகளின் கையெழுத்தை பெறாமலே போலியாக  கையெழுத்தை  போட்டு மத்திய கால கடனாக அதிமுக அரசு மாற்றி வைத்தது. ஆகையால்  விவசாய கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம். மேட்டூரில் இருந்து வெள்ள நீராக கடலில் கலக்கும் வெள்ள நீரை மேட்டூர் அணையின் வடபுறம் கால்வாய் வெட்டி, அய்யாற்றுடன் இணைத்து சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம். அதேபோல் ஆலடியாறு டேமில், துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், தேனி, பெரியகுளம், திண்டுக்கல், எரியோடு, கடவூர் வழியாக பொன்னியாறு டேமில் இணைத்தால், தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன்பெற முடியும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

எலியை சாப்பிடும் நூதன போராட்டம் - திருச்சியில்  விவசாயிகளால் பரபரப்பு

மேலும், தனியார் நிறுவனங்கள் ரூ.5,00,000 கடன் கொடுத்து 48 மாதங்களில் ரூ.7 லட்சம் கட்ட சொல்லி கையெழுத்து வாங்கி விட்டு ரூ.62 லட்சம் கடனை திருப்பி கட்டிய பிறகு 71 மாதங்களாக்கி 11, 1/2 லட்சம் கட்ட சொல்லி 1 தவனை கட்டவில்லையென்றால் டிராக்டர், கார்களை தூக்கி செல்பவர்களை கைது செய்ய வேண்டுகிறோம்.  மேலும், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நெல்லுக்கு கிலோவுக்கு ரூ.54, கரும்புக்கு 1 டன்னுக்கு ரூ.8100, வழங்க உதவிட வேண்டுகிறோம். குறிப்பாக காவிரியில் மேகதாது அணைக்கட்ட கூடாது என்றும் காவிரியில் மாத மாதம் தண்ணீர் திறக்க மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். விவசாயிகள் உரிமைக்காக ஜனநாயக நாட்டில் , டெல்லி சென்று போராட முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை விவசாயிகள் திடீரென்று காவிரி ஆற்றில் உள்ளே இறங்கி போராட்டம் நடத்தியதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தடையை மீறி ஆற்றில் இறங்கி போராடிய விவசாயிகள் 25 பேர்களை கைது செய்தனர்.  மேலும் அனுமதி பெற்று அமைதி வழியில் போராட்டம் நடத்தியவர்களையும் காவல்துறை கைது செய்தனர். 

எலியை சாப்பிடும் நூதன போராட்டம் - திருச்சியில்  விவசாயிகளால் பரபரப்பு

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அய்யாகண்ணு, “காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கர்நாடக அரசு போதுமான அளவிற்கு தண்ணீர் திறக்கவில்லை, விவசாயிகள் வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கிறார்கள்.  இந்நிலையில், தமிழக அரசு எந்தவிதமான ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. ஆகையால் இதை கண்டித்து இன்று எலியை சாப்பிடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.. மேலும்  இதுவரை அரசு அதிகாரிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. விவசாயிகளின் நலன்கள் எப்படி அதிகாரிகள் அலட்சிய போக்கில் இருக்கிறார்களோ, அதே போன்று தான் எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதில் அலட்சியப் போக்கில் செயல்படுகிறார்கள்.  உடனடியாக அரசு அதிகாரிகள் எங்களுடைய கோரிக்கையை குறித்து அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்,  இல்லை என்றால் எங்களுடைய போராட்டம் தீவிரமடையும்” என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: மாணவர்களுக்கு பாராட்டு விழா.. அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்த தவெக தலைவர் விஜய்
மாணவர்களுக்கு பாராட்டு விழா.. அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்த தவெக தலைவர் விஜய்
IND Vs SA T20 Worldcup Final: 10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா - கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா-கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
IND Vs SA, T20 Worldcup: ஃபைனலில் இந்தியா Vs தென்னப்ரிக்கா - ரிசர்வ்டேவிலும் மழை பெய்தால் யாருக்கு கோப்பை?
ஃபைனலில் இந்தியா Vs தென்னப்ரிக்கா - ரிசர்வ்டேவிலும் மழை பெய்தால் யாருக்கு கோப்பை?
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: மாணவர்களுக்கு பாராட்டு விழா.. அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்த தவெக தலைவர் விஜய்
மாணவர்களுக்கு பாராட்டு விழா.. அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்த தவெக தலைவர் விஜய்
IND Vs SA T20 Worldcup Final: 10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா - கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா-கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
IND Vs SA, T20 Worldcup: ஃபைனலில் இந்தியா Vs தென்னப்ரிக்கா - ரிசர்வ்டேவிலும் மழை பெய்தால் யாருக்கு கோப்பை?
ஃபைனலில் இந்தியா Vs தென்னப்ரிக்கா - ரிசர்வ்டேவிலும் மழை பெய்தால் யாருக்கு கோப்பை?
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Kamalhaasan Salary : அடேங்கப்பா! இந்தியன் 2 படத்துக்கு கமல்ஹாசன் வாங்கிய சம்பள பணம் இவ்வளவா?
அடேங்கப்பா! இந்தியன் 2 படத்துக்கு கமல்ஹாசன் வாங்கிய சம்பள பணம் இவ்வளவா?
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
57 years of Thiruvarutchelvar : 39 வயதில் 80 வயது நாயன்மாராக கலங்கவைத்த சிவாஜி.. திருவருட்செல்வர் படம் வெளியான நாள்
57 years of Thiruvarutchelvar : 39 வயதில் 80 வயது நாயன்மாராக கலங்கவைத்த சிவாஜி.. திருவருட்செல்வர் படம் வெளியான நாள்
Embed widget