மேலும் அறிய

திருச்சி எஸ்பி. வருண்குமார் பற்றி அவதூறு கருத்து; 4 பேரை போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க உத்தரவு

திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார் மற்றும் குடும்பத்தினரை குறித்து சமூக வலைதளங்களில் ஆபாச கருத்துக்களை வெளியிட்டதாக பெறப்பட்ட புகாரின் பேரில் கைதான 4 பேரை, ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரணை.

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் பொறுப்பு ஏற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக பொதுமக்கள் எளிதாக புகார்களை தெரிவிப்பதற்காக இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்து, அதன் வழி வரும் புகார்களை உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி பல்வேறு புகார்கள் விசாரணை செய்து அதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் குற்றச்சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும் தயங்காமல் பொதுமக்கள் இந்த எண்ணிற்கு புகார் தெரிவிக்க வேண்டும் என எஸ்.பி வருண்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். 

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருச்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன், இவர் பொதுவெளியில் குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக திருச்சி மாவட்ட எஸ்பி.  வருண்குமாருக்கு புகார் சென்றது.

இதனை தொடர்ந்து எஸ்பி. வருண்குமார் உத்தரவின் பேரில் போலீஸார் சாட்டை துரைமுருகனை கைது செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நாதக கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் திருச்சி எஸ்பி வருண்குமார் மற்றும் அவர் மனைவி வந்திதா பாண்டே ஆகியோர் குறித்து சமூக வதைளமான எக்ஸ் பக்கத்தில் ஆபாசமாகவும், அருவெறுக்கத்தக்க வகையிலுமான கருத்துக்களை பதிவிட்டனர்.

திருச்சி எஸ்பி. வருண்குமார் பற்றி அவதூறு கருத்து;  4 பேரை போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க உத்தரவு

நாதக நிர்வாகிகள் 4 பேர் ஒரு நாள் போலீஸ் கஸ்டடியில் விசாரணை.

மேலும், இதுகுறித்து எஸ்பி. வருண்குமார் தில்லைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீஸார், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார் பேட்டையை சேர்ந்த சண்முகம், மதுரை தபால் தந்தி நகரை சேர்ந்த அப்துல் ரகுமான், விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த திருப்பதி,  மற்றும் எஸ்.ராமலிங்கபுரத்தை சேர்ந்த கண்ணன் ஆகியோரை ஆபாச கருத்துக்கள் பதிவிட்டமைக்காக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் போலீஸ் தரப்பில், கைதான 4 பேரையும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி 4 வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த குற்றவியல் நீதிபதி (பொ) சுபாஷினி 4 பேரையும் ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதித்து உத்தரவிட்டார்.

ஜாமீன் மேல்முறையீடு மனு தள்ளுபடி: 

இந்த வழக்கில் கைதான திருப்பதி, கண்ணன் ஆகியோர் ஜாமீன் கோரி 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இருவரும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மணிமொழி ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அரசு தரப்பில் திருச்சி மாவட்ட தலைமை அரசு வழக்கறிஞர் சவரிமுத்து ஆஜரானார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Muthusamy : ”ஈரோடு திமுகவில் உள்ளடி வேலை?” அமைச்சர் முத்துச்சாமிக்கு எதிராக உடன்பிறப்புகள்..!
Minister Muthusamy : ”ஈரோடு திமுகவில் உள்ளடி வேலை?” அமைச்சர் முத்துச்சாமிக்கு எதிராக உடன்பிறப்புகள்..!
4B movement: ட்ரம்புக்கா ஓட்டு போட்டீங்க..! நோ டேட்டிங், நோ கல்யாணம், உடலுறவு - ஆண்களுக்கு எதிராக அமெரிக்க பெண்கள் போராட்டம்
4B movement: ட்ரம்புக்கா ஓட்டு போட்டீங்க..! நோ டேட்டிங், நோ கல்யாணம், உடலுறவு - ஆண்களுக்கு எதிராக அமெரிக்க பெண்கள் போராட்டம்
Ajithkumar: திராவிட மேடையில் அஜித்தை பாராட்டிய சத்யராஜ்! எதற்காக தெரியுமா?
Ajithkumar: திராவிட மேடையில் அஜித்தை பாராட்டிய சத்யராஜ்! எதற்காக தெரியுமா?
ஒரே விமானத்தில் முதல்வர் ஸ்டாலின்- ஆளுநர் ரவி பயணம்... மதுரையில் பாதுகாப்பு தீவிரம்
ஒரே விமானத்தில் முதல்வர் ஸ்டாலின்- ஆளுநர் ரவி பயணம்... மதுரையில் பாதுகாப்பு தீவிரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Meet Army Officers | ராணுவ வீரர்களுடன் விஜய் திடீர் சந்திப்பு ஏன்? கதறும் பாஜகவினர்Muthusamy | முத்துசாமியின் உள்ளடி வேலை! ஷாக்கில் ஈரோடு திமுக! யாரும் எதிர்பார்க்காத அறிவிப்புVijay vs Seeman | நாதக சீமானுக்கு செக்! விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெகவினர் மரணகலாய்Vijay Thiruma meeting | ஒரே மேடையில் விஜய், திருமா! கடுப்பில் விசிக சீனியர்கள்!ஆதவ் அர்ஜூனா அடாவடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Muthusamy : ”ஈரோடு திமுகவில் உள்ளடி வேலை?” அமைச்சர் முத்துச்சாமிக்கு எதிராக உடன்பிறப்புகள்..!
Minister Muthusamy : ”ஈரோடு திமுகவில் உள்ளடி வேலை?” அமைச்சர் முத்துச்சாமிக்கு எதிராக உடன்பிறப்புகள்..!
4B movement: ட்ரம்புக்கா ஓட்டு போட்டீங்க..! நோ டேட்டிங், நோ கல்யாணம், உடலுறவு - ஆண்களுக்கு எதிராக அமெரிக்க பெண்கள் போராட்டம்
4B movement: ட்ரம்புக்கா ஓட்டு போட்டீங்க..! நோ டேட்டிங், நோ கல்யாணம், உடலுறவு - ஆண்களுக்கு எதிராக அமெரிக்க பெண்கள் போராட்டம்
Ajithkumar: திராவிட மேடையில் அஜித்தை பாராட்டிய சத்யராஜ்! எதற்காக தெரியுமா?
Ajithkumar: திராவிட மேடையில் அஜித்தை பாராட்டிய சத்யராஜ்! எதற்காக தெரியுமா?
ஒரே விமானத்தில் முதல்வர் ஸ்டாலின்- ஆளுநர் ரவி பயணம்... மதுரையில் பாதுகாப்பு தீவிரம்
ஒரே விமானத்தில் முதல்வர் ஸ்டாலின்- ஆளுநர் ரவி பயணம்... மதுரையில் பாதுகாப்பு தீவிரம்
எச்.ராஜா மீது நடவடிக்கை இல்லையென்றால் தமிழகம் முழுவதும் போராடுவோம் - மனித நேய மக்கள் கட்சி
எச்.ராஜா மீது நடவடிக்கை இல்லையென்றால் தமிழகம் முழுவதும் போராடுவோம் - மனித நேய மக்கள் கட்சி
Group 2 Exam: சூப்பர்! குரூப் 2 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு - எத்தனை இடங்கள் தெரியுமா?
Group 2 Exam: சூப்பர்! குரூப் 2 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு - எத்தனை இடங்கள் தெரியுமா?
Sabarimala: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு.... சாமியை தரிசனம் செய்வது எப்படி? - புதிய அறிவிப்பு இதோ
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு.... சாமியை தரிசனம் செய்வது எப்படி? - புதிய அறிவிப்பு இதோ
CM MK Stalin:
CM MK Stalin: "பட்டாசு தொழிலாளர்கள் சந்திப்பு முதல் ரோட் ஷோ வரை" விருநுகரில் இன்று முதலமைச்சர் ப்ளான் இதுதான்!
Embed widget