திருச்சி: கள்ளிக்குடி சந்தையில் தற்காலிக வர்த்தக மையம் - எம். எஸ்.எம்.இ., யோசனை
பாதுகாப்பு உற்பத்தி மற்றும் வேளாண் பொறியியல் துறைகளில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், கள்ளிக்குடி சந்தையில் தற்காலிக வர்த்தக மையத்தை அமைக்கும் திட்டத்தை MSME பரிந்துரைத்துள்ளது.
திருச்சி வர்த்தக மைய வளாகத்திற்கு ஏற்ற இடம் தேடும் பணி நடந்து வரும் நிலையில், பயன்பாடின்றி உள்ள கள்ளிக்குடி ஒருங்கிணைந்த காய்கறி சந்தையில் தற்காலிக வர்த்தக மையம் அமைக்க, குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கூட்டமைப்பு (MSME) யோசனை தெரிவித்துள்ளது . திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சந்தையானது தொழில்துறை கண்காட்சிகள் மற்றும் வர்த்தக மாநாடுகளை நடத்துவதற்குப் பயன்படுத்தப்படலாம் என்று அவர்கள் கூறினர். வர்த்தக மையம் பொருத்தமான இடத்தில் தொடங்கும் வரை. சிட்கோவின் நிதியுதவியுடன் வர்த்தக மையத்திற்காக பஞ்சாப்பூரில் 10 ஏக்கர் நிலம் முதலில் அடையாளம் காணப்பட்டது விசாலமான அணுகு சாலை இல்லாததால், செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆகையால் மாவட்ட நிர்வாகம், ஸ்ரீரங்கம் மற்றும் திருவெறும்பூர் தாலுகாக்களில், நெடுஞ்சாலைகளில் உள்ள நிலம் குறித்து ஆய்வு செய்து வருகிறது. இருப்பினும், நிலத்தை அடையாளம் காண்பது நேரத்தைச் செலவழிப்பதால், பாதுகாப்பு உற்பத்தி மற்றும் வேளாண் பொறியியல் துறைகளில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், கள்ளிக்குடி சந்தையில் தற்காலிக வர்த்தக மையத்தை அமைக்கும் திட்டத்தை MSMEகள் இப்போது பரிந்துரைத்துள்ளது.
மேலும் ஒருங்கிணைந்த சந்தை காலியாக இருப்பதால், இந்த விசாலமான வளாகம் தொழில்துறை கண்காட்சிகளை நடத்துவதற்கு ஏற்றதாக இருக்கும் என்று MSMEகள் தெரிவித்தன. ஒரு பிரத்யேக வர்த்தக மையம் கட்டப்படும் வரை நாங்கள் குறைந்தபட்ச வாடகையை செலுத்தி, பயன்படுத்தப்படாத கடைகளைப் பயன்படுத்தி வர்த்தக கண்காட்சியை நடத்தலாம். கைவிடப்பட்ட சந்தையை மீட்டெடுப்பதில் மாவட்ட நிர்வாகம் மற்றும் எம்.எஸ்.எம்.இ ஆகிய இரு நிறுவனங்களுக்கும் இனைந்து செயல்படலாம் என்று திருச்சி வர்த்தக மையம் சார்பாக தெரிவிக்கபட்டுள்ளது. கள்ளிக்குடி சந்தையை தற்காலிக வர்த்தக மையமாகப் பயன்படுத்துவதன் மூலம் அனுபவத்தையும் தொடர்புகளையும் பெற முடியும் என்று தொழில்முனைவோர் கருதுகின்றனர, இது அர்ப்பணிக்கப்பட்ட வர்த்தக மையம் தொடங்கப்பட்டவுடன் அவர்களுக்கு உதவும். எம்எஸ்எம்இகள் தங்களது பங்களிப்பாக சுமார் ரூ.6 கோடியும், நிரந்தர வர்த்தக மைய வளாகத்துக்கு ரூ.5 கோடியும் சிட்கோ நிறுவனத்திடமிருந்து திரட்டியுள்ளன. மேலும் கள்ளிக்குடி சந்தையை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கான அனைத்து விருப்பங்களுக்கும் நாங்கள் தெரிவித்துள்ளோம். சந்தையின் நோக்கம் மற்றும் அதன் எதிர்காலம் குறித்து விவாதிக்க ஒரு கூட்டம் திட்டமிடப்பட்டது. MSME களின் தேவை விவாதிக்கப்படும், என்று வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வணிகத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தகவல் கூறினார். 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கள்ளிக்குடி மார்க்கெட் போதிய இடவசதி மற்றும் நகரத்திலிருந்து அதிக தூரம் இருப்பதால் பொதுமக்கள் வருகை இருக்காது, ஆகையால் காய்கறி வியாபாரிகளால் நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்