மேலும் அறிய

திருச்சியில் 68 கி.மீ., தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம்; விரைவில் பணிகள் தொடக்கம்

திருச்சியில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை திட்டம் 68 கிலோ மீட்டர் தூரத்துக்கு தொடங்க ஆய்வு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்த பெங்களூருவைச் சேர்ந்த ஆலோசகர் மூலம் திருச்சி மாநகராட்சி நிறைவு செய்த விரிவான இயக்கம் திட்டம் ( சிஎம்பி ) திருச்சி மாநகரில் முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் நெட்வொர்க்கிற்கான அதிக தேவையுள்ள தாழ்வாரங்களாக, மூன்று சாத்தியமான வழித்தடங்களை அடையாளம் கண்டுள்ளது. மொத்தம் 68 கிமீ நீளத்திற்கு அடையாளம் காணப்பட்ட பொதுப் போக்குவரத்து வழித்தடங்கள், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் ( சிஎம்ஆர்எல் ) முன்மொழியப்பட்ட திருச்சி மெட்ரோவிற்கான முதன்மைத் திட்டமாக செயல்படும் என அதிகாரிகள் கூறினர். மேலும் விரைவில் திருச்சியிலும் மெட்ரோ ரயில் சேவை திட்டம் தொடங்கப்பட உள்ளது. திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்தை எந்தெந்த வழித்தடங்களில் அமைக்க முடியும் என்பது குறித்து பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனம் கடந்த ஓராண்டாக திருச்சியில் ஆய்வு நடத்தியது. இந்த தொலைநோக்கு ஆய்வறிக்கையை நடைபெற்ற மாநகராட்சி அவசர கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டது. இது குறித்து அந்த நிறுவனத்தை சேர்ந்த அழகப்பன் விளக்கி கூறினார். அதில், அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஒரு நகரத்துக்கு பொதுபோக்குவரத்து எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து திருச்சி மாநகரில் ஓராண்டு காலம் 803.75 சதுரகிலோ மீட்டரில் மேற்கொள்ளப்பட்ட தொலைநோக்கு ஆய்வு நடத்தப்பட்டது. அதன்அடிப்படையில் சமயபுரம் முதல் ஸ்ரீரங்கம், சத்திரம்பஸ் நிலையம், தில்லைநகர், வயலூர் வரை 18.7 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு வழித்தடமும், துவாக்குடி முதல் திருவெறும்பூர், பால்பண்ணை, பஞ்சப்பூர் வழியாக மத்திய பஸ் நிலையம் வரை 26 கிலோ மீட்டருக்கு ஒரு வழித்தடமும், ஜங்ஷன் முதல் விமானநிலையம், புதுக்கோட்டைரோடு, சுற்றுச்சாலை வரை 23.3 கிலோமீட்டர் தூரத்துக்கு ஒரு வழித்தடமும் என 3 வழித்தடங்களில் மொத்தம் 68 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை திட்டத்தை நிறைவேற்ற சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் 68 கி.மீ., தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம்; விரைவில் பணிகள் தொடக்கம்

இதன் ஆய்வறிக்கையை தமிழக அரசுக்கு அனுப்பி, அதன் மூலமாக மத்திய அரசிடம் இருந்து இந்த திட்டத்துக்கான நிதி பெற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு, அதன்பிறகு தான் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் கூறினார். மேலும், 66 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடைபாதை, பாதசாரிகள் சாலையை கடந்து செல்ல ஜங்ஷன் உள்பட 9 இடங்களில் வழித்தடம், காந்திமார்க்கெட் பகுதியில் சரக்கு ஒருங்கிணைப்பு மையம், இன்னும் 4 இடங்களில் பன்னோக்கு வாகன நிறுத்தும் இடம், ஸ்மார்ட் சிக்னல்கள் என பல்வேறு அம்சங்கள் அமைய உள்ளன.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA T20 Final LIVE Score:  டாஸ் வென்ற இந்திய அணி.. பேட்டிங்கை கையில் எடுத்த ரோஹித் சர்மா..  சாம்பியன் பட்டம் யாருக்கு?
டாஸ் வென்ற இந்திய அணி.. பேட்டிங்கை கையில் எடுத்த ரோஹித் சர்மா.. சாம்பியன் பட்டம் யாருக்கு?
IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
Breaking News LIVE: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல்!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல்!
Suchitra on Kasthuri: வாலண்ட்டியராக சென்று வாங்கி கட்டிக்கொண்ட கஸ்தூரி! சுசித்ரா வீடியோவால் பரபரப்பு - என்ன நடந்தது?
Suchitra on Kasthuri: வாலண்ட்டியராக சென்று வாங்கி கட்டிக்கொண்ட கஸ்தூரி! சுசித்ரா வீடியோவால் பரபரப்பு - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோT20 World Cup Final :  இறுதிப்போட்டியில் இந்தியா..வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?மகுடம் சூடப்போவது யார்?Dharmapuri Gender Reveal Issue : வசமாக சிக்கிய கும்பல்..LEFT&RIGHT வாங்கிய அதிகாரிBussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA T20 Final LIVE Score:  டாஸ் வென்ற இந்திய அணி.. பேட்டிங்கை கையில் எடுத்த ரோஹித் சர்மா..  சாம்பியன் பட்டம் யாருக்கு?
டாஸ் வென்ற இந்திய அணி.. பேட்டிங்கை கையில் எடுத்த ரோஹித் சர்மா.. சாம்பியன் பட்டம் யாருக்கு?
IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
Breaking News LIVE: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல்!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல்!
Suchitra on Kasthuri: வாலண்ட்டியராக சென்று வாங்கி கட்டிக்கொண்ட கஸ்தூரி! சுசித்ரா வீடியோவால் பரபரப்பு - என்ன நடந்தது?
Suchitra on Kasthuri: வாலண்ட்டியராக சென்று வாங்கி கட்டிக்கொண்ட கஸ்தூரி! சுசித்ரா வீடியோவால் பரபரப்பு - என்ன நடந்தது?
T20 World Cup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 World Cup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 World Cup 2024 Final: சண்டே மட்டும்தான் கஷ்டம்... மத்தபடி கப் நமக்குத்தான்! குஷியில் இந்திய ரசிகர்கள்! வரலாறு சொல்வது என்ன?
சண்டே மட்டும்தான் கஷ்டம்... மத்தபடி கப் நமக்குத்தான்! குஷியில் இந்திய ரசிகர்கள்! வரலாறு சொல்வது என்ன?
Karthi29: டாணாக்காரன் இயக்குநருடன் இணையும் கார்த்தி: வெளியானது 29வது பட அப்டேட்! ஷுட்டிங் எப்போது தெரியுமா?
Karthi29: டாணாக்காரன் இயக்குநருடன் இணையும் கார்த்தி: வெளியானது 29வது பட அப்டேட்! ஷுட்டிங் எப்போது தெரியுமா?
தமிழகத்திற்கு தேவையான எரிவாயு அபரிமிதமான அளவிற்கு  இங்கே உள்ளது - காவிரி அசட் உற்பத்தி பிரிவு மேலாளர் மாறன்
தமிழகத்திற்கு தேவையான எரிபொருள் இறக்குமதி செய்தால் அதன் சுமை மறைமுகமாக மக்களை சென்றடையும் -  மாறன்
Embed widget