மேலும் அறிய

திருச்சியில் ஜாலியன் வாலாபாக் போன்று நடத்தபட்ட துப்பாக்கி சூடு வரலாறு தெரியுமா..?

திருச்சி மாவட்டம் பொன்மலையில் ஜாலியன் வாலாபாக் படுகொலை போன்று நடைபெற்ற சம்பவம் இன்றளவும் மக்கள் மனதில் நீங்காத வடுவாய் இதைப்பற்றி விவரிக்கிறது செய்தி தொகுப்பு.

இந்தியா முழுவதும் 1946 ஆம் ஆண்டு தொழிலாளர்கள் போராட்டம் நடைபெற்றது. ரயில்வே தொழிற்சாலையில் விசாரணையின்றி வேலை நீக்கம் செய்யப்படும் சட்டத்தை அதிகாரிகள் உருவாக்கினர். அதை எதிர்த்து தொழிலாளர் வர்க்கம் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தது. அந்தப் போராட்டம் வேலை நிறுத்தம் ஆக மாறியது. அச்சமயம், தொழிற்சங்க தலைவர் அனந்த நம்பி தலைமையில் பொன்மலை சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. பொன்மலை பணிமனை முகப்பில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் அவர்தம் குடும்பத்தினரும் மறியல் செய்தனர். எதுவரினும் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்ற உறுதி அவர்களிடம் மேலோங்கி நின்றது. வேலை நிறுத்தத்தை உடைக்க ஆங்கிலேய நிர்வாகம் பல ஆசை வார்த்தைகளை காட்டி வந்தது. 30 ரூபாய் வரை சம்பளம் வாங்குற தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பினால் 100 சதவீத சம்பள உயர்வு என பல ஆசை வார்த்தைகளை காட்டியது. இத்தகைய முயற்சிகள் அனைத்தையும் தொழிலாளிகள் துச்சமாகக் கருதி வெறுப்புடன் நிராகரித்தனர். இது மேலும் அவர்களுக்கு சிக்கலாக அமைந்தது. எப்படியாவது ரயிலை இயக்கியாக வேண்டும் என்ற வீம்புக்காக யார் யாரையோ அழைத்து வந்து ஓரிரு ரயிலை இயக்கி வந்தனர்.


திருச்சியில் ஜாலியன் வாலாபாக் போன்று நடத்தபட்ட துப்பாக்கி சூடு வரலாறு தெரியுமா..?

ஆனால் அதுவும் கேலிக்கூத்தாக முடிந்தது. செப்டம்பர் 2 ஆம் தேதி அன்று பண்டிதர் நேரு தலைமையிலான இடைக்கால அமைச்சரவை டெல்லியில் பதவி ஏற்றது. ஆங்கிலேயரிடமிருந்து இந்திய மக்களுக்கு அதிகார மாற்றம் செய்யப்படுவதற்கான அடையாள நிகழ்ச்சி அதுவாகும். இந்த பதவியேற்பு முடிந்து சரியாக 71 மணி நேரத்திற்குப் பின் பொன்மலையில் கொடூரமான தாக்குதல் தொடங்கியது .செப்டம்பர் 5ஆம் தேதி காலை 9 மணிக்கு பொன்மலை சங்கத் திடலில் வேலை நிறுத்தம் செய்து வரும் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரும் ஆயிரக்கணக்கானோர் கூடி இருந்தனர். தலைவரின் உரையை கேட்டு, அந்தச் சமயத்தில் ஹரிகரன் தலைமையில் பெரும் போலீஸ்படை சங்க திடலுக்குள் நுழைந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்நிலையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் அங்கும் இங்குமாக சிதறி ஓடினர். தொழிலாளிகள் கலைந்து போக வேண்டும் என்று முன்னறிவிப்பு கிடையாது. கண்ணீர்புகை குண்டு போடவில்லை. எடுத்த எடுப்பிலேயே துப்பாக்கிச்சூடு.. மலபார் சிறப்பு காவல்படை துப்பாக்கிச்சூட்டை நடத்தி கொண்டே மிருகத்தனமான தடியடி தாக்குதல் நடத்தியது.


திருச்சியில் ஜாலியன் வாலாபாக் போன்று நடத்தபட்ட துப்பாக்கி சூடு வரலாறு தெரியுமா..?

சங்கத் திடலில் நான்கு பக்கங்கள் ஒரு பெரிய சுவர் ஒரு முட்புதர் எல்லா பக்கமும் அடைக்கப்பட்ட நிலையில் வாலிபர்களை தவிர மற்றவர்கள் தப்பிப்பது கடினமாக இருந்தது‌. துப்பாக்கி குண்டுக்கு பலியானவர்கள் காயமடைந்தவர்களின் உடலிலிருந்து வழிந்த ரத்தம் மைதானத்தில் சிந்திக் கிடந்தது. சங்கம் தனது இளம் செயல் வீரர்கள் 5 பேரை துப்பாக்கிச் சூட்டில் இழந்தது. 26 வயது தங்கவேலு, 28 வயது தியாகராஜன், 26 வயது ராஜு, 25 வயது ராமச்சந்திரன், 24 வயது கிருஷ்ணமூர்த்தி ஆகிய ஐந்து இளைஞர்கள் பலியாகினர். சங்க கட்டிடத்திற்குள் நுழைந்த போலீஸ் படை சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனந்தன் நம்பியாரின் கை கால்களை கட்டி தடியடியால் அவரை தாக்கியது. துப்பாக்கி கூர்முனையால் அவர் தலையில் இடி இடித்து படுகாயப்படுத்தியது. நம்பியார் இறந்துவிட்டதாக கருதி விட்டுச் சென்றது. 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படும் காயப்பட்டனர். அட்டூழியங்களையும் புரிந்த ஆயுதப்படை சங்கத்தின் சொத்துக்களையும் சூறையாடியது. இன்று போய் பார்த்தாலும் அந்த துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் நுழைவு கேட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய தடயம் இருக்கும். மிகப்பெரிய பழமையான கட்டிடம் மரணத்தின் ஓலமாக இன்றும் இருந்து வருகிறது. தொழிலாளர்களின் வீரத்தின் நினைவுச் சின்னமாக அந்த கட்டிடம் இன்று வரை கம்பீரமாக இருந்து வருகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Embed widget