மேலும் அறிய

திருச்சி : திமுக கூட்டணி கட்சிகளுக்கு வார்டு ஒதுக்கீட்டில் தொடரும் பேச்சுவார்த்தை..

திருச்சி மாநகராட்சி தேர்தல் திமுக கூட்டணி கட்சிகளுக்கு வார்டுகள் ஒதுக்கீடு, காங்கிரஸ், மதிமுக, முஸ்லிம் லீக் அதிருப்தி..

திருச்சி மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட திமுக கூட்டணி கட்சிகளுக்கான வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளன. திருச்சி மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு வார்டுகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக கலைஞர் அறிவாலயத்தில்  பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், அமைச் சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார். இதில் திமுக சார்பில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் க.வைரமணி, வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி ந.தியாகராஜன் எம்எல்ஏ, மாநகரச் செய லாளர் மு.அன்பழகன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், கதிரவன் உள்ளிட்டோரும், காங்கிரஸ் தரப்பில் ஜவகர், கலை, கோவிந்தராஜ், மதிமுக சார்பில் வெல்லமண்டி சோமு, டி.டி.சி சேரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தர், ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்திரஜித், சுரேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அருள், தமிழாதன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தெற்கு மாவட்டச் செயலாளர் கே.எம்.கே.ஹபிபூர் ரகுமான், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எம்எல்ஏ அப்துல்சமது உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருச்சி :  திமுக கூட்டணி கட்சிகளுக்கு வார்டு ஒதுக்கீட்டில் தொடரும் பேச்சுவார்த்தை..

இதில், திருச்சி மாநகராட்சியிலுள்ள 65 வார்டுகளில் காங்கிரஸ் கட்சிக்கு 4, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகியவற்றுக்கு தலா 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 வார்டுகளை ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. காங்கிரஸ், மதி முக ஆகிய இரு கட்சிகளும் தங்களுக்கு கூடுதலாக இடம் கொடுக்க வேண்டும் என கேட்டு வருகின்றன. இதுதவிர நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான வார்டு பங்கீடும் மேற்கொள்ளப்பட்டது.இதுகுறித்து திமுக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கூறிய தாவது: காங்கிரஸ் கட்சிக்கு 3 மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு கட்சி நிர்வாகிகள் உடன்படாததால், மேலும் ஒரு வார்டு கூடுதலாக ஒதுக்கப்பட்டது. ஆனாலும் அந்த கட்சிக்கு எந்தெந்த வார்டுகள் என்பதில் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 2 வார்டுகள் கேட்கப்பட்டி ருந்தன. ஆனால் 51 அல்லது 52 ஆகியவற்றில் ஏதாவது ஒரு வார்டு மட்டுமே ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இவை இரண்டும் பெண்களுக்கான வார்டு என்பதால் அவர்களிடமும் மனவருத்தம் அடைந்தனர்.

திருச்சி :  திமுக கூட்டணி கட்சிகளுக்கு வார்டு ஒதுக்கீட்டில் தொடரும் பேச்சுவார்த்தை..

விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு அவர்கள் கேட்ட 17, 59 ஆகிய 2 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுவிட்டன. இந்திய கம்யூ னிஸ்ட் கட்சிக்கு 23, 65 ஆகிய 2 வார்டுகளும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு 35, 47 ஆகிய 2 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஓரளவுக்கு திருப்தியடைந்துள்ளனர். மனிதநேய மக்கள் கட்சிக்கு 28-வது வார்டு ஒதுக் கப்பட்டுள்ளது. காங்கிரஸ், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் கூடுதலாக சீட் கேட்டு வருகின்றன. அவர்களுடன் அடுத்தகட்ட பேச்சு வார்த்தை நடத்தப்படலாம் எனவும், அதற்குப்பின் கூட்டணிக்கான வார்டு ஒதுக்கீடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் எனவும் தெரிகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டனி கட்சிகளுக்கு வார்டு ஒதுக்கீடு இறுதி கட்ட பேச்சுவார்த்தை  இன்று மாலை நடத்தி முடிக்கபடும் என திமுக வட்டாரங்கள் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Cylinder Price Cut: இன்று முதல் சிலிண்டர் விலை குறைப்பு.! ஆனால் விலை உயர்த்தியிருந்தது எவ்வளவு தெரியுமா? 
இன்று முதல் சிலிண்டர் விலை குறைப்பு.! ஆனால் விலை உயர்த்தியிருந்தது எவ்வளவு தெரியுமா?
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் Bihar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cylinder Price Cut: இன்று முதல் சிலிண்டர் விலை குறைப்பு.! ஆனால் விலை உயர்த்தியிருந்தது எவ்வளவு தெரியுமா? 
இன்று முதல் சிலிண்டர் விலை குறைப்பு.! ஆனால் விலை உயர்த்தியிருந்தது எவ்வளவு தெரியுமா?
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
இது நாடா, சுடுகாடா? அடுத்த பாலியல் வன்கொடுமை: சின்ன சேலத்தில் பரபரப்பு - அன்புமணி அட்டாக்
இது நாடா, சுடுகாடா? அடுத்த பாலியல் வன்கொடுமை: சின்ன சேலத்தில் பரபரப்பு - அன்புமணி அட்டாக்
Half Yearly Leave: அரையாண்டு விடுமுறை நீட்டிப்பு? தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? வெளியான தகவல்
Half Yearly Leave: அரையாண்டு விடுமுறை நீட்டிப்பு? தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? வெளியான தகவல்
Eb bill : கரண்ட் பில் கம்மியா வரணுமா..? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக !
Eb bill : கரண்ட் பில் கம்மியா வரணுமா..? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக !
Embed widget