மேலும் அறிய

தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் கவனிக்க வேண்டிய முக்கிய செய்திகள்..

திருச்சி மாவட்டம் உறையூர் பகுதிகளில் வெள்ள நீர் வடியாததால் இரண்டாவது நாளாக மக்கள் மின்சாரம் இல்லாமல் அவதிபட்டு வருகிறார்கள்.

1-திருச்சி மாவட்டம் துறையூர் அருகே குண்டாரு கரை உடைந்து விவசாய நிலங்களில் வெள்ளநீர் சூழ்ந்து உள்ளதால் பயிர்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளது. வெள்ள சேதத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.

2- திருச்சி மணப்பாறை அருகே பாகுபாடு பார்த்து வேலை வழங்குவதாக கூறி 100 நாள் திட்ட பயனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்பு காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

3- திருவெறும்பூர் அருகே திருநெடுங்களம் செல்லும் வழியில் அழுகிய நிலையில் எலும்புக் கூடாக தூக்கில் தொங்கிய ஆண் சடலத்தை மீட்டு துவாகுடி காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

4- தமிழகத்தில் தொடர்ந்து மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை நடந்து வரும் நிலையில் மணப்பாறை துவரங்குறிச்சி அருகே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை தொந்தரவு செய்த வாலிபரை மகளிர் காவல் நிலையம் காவல்துறையினர் கைது செய்து போக்சோ  சட்டத்தின் கீழ்  வழக்கு பதிவு செய்தனர்.

5- திருச்சி மாவட்டத்தில் என்று 515 இடங்களில் 12 வது  மெகா சிறப்பு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஒரு லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது மாவட்ட நிர்வாகம்.

6- திருச்சி மாவட்டம் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட செல்வநகர், லிங்கா நகர், ராஜலட்சுமி நகர், உறையூர் பகுதிகளில் மழை நீர் வீடுகள் முழுவதும் சூழ்ந்துள்ளது, மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதிபட்டு வருகிறார்கள். பாதிக்கப்பட்ட இடங்களை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே .என். நேரு நேரில்  ஆய்வு

7- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தொடர் கனமழையால் வெள்ளநீர் வீடுகளில் சூழ்ந்துள்ளதால் மக்கள் அச்சம், மேலும்  மின்சாரம் இல்லாமலும், அத்தியாவசிய தேவைக்கு வெளியே செல்ல முடியாமலும், மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

8- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் இளைஞர்கள் மத்தியில் போதை பழக்கம் அதிகமாகி வருகிறது. இவற்றை தடுப்பதற்காக காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை  தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

9- புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் தொடர்ந்து ஆடு திருடு போவதாக காவல்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட காவல்துறையினர். இந்நிலையில் திருட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

10- பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மலையாளப்பட்டி கிராமங் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் கனமழையால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ,குறிப்பாக மரவள்ளிக்கிழங்கு விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்ததை அடுத்து மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு..

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ
’தைரியமா இருங்க’’உடைந்து அழுத தந்தை! ஆறுதல் கூறிய அன்பில் மகேஸ்
T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
America Weapon Sale: அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
Trump Vs India: 350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Embed widget