மேலும் அறிய

2 லட்சம் தேசிய கொடிகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய இலக்கு - மாவட்ட நிர்வாகம்

75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி நிர்வாகம் 2 லட்சம் தேசிய கொடிகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்த 75-ம் ஆண்டு அமிர்த பெருவிழாவாகும். இந்த நல்ல நாளில் மத்திய அரசாங்க உள்துறையின் சார்பாக தகவல் தெரிவிக்கபட்டது. அதாவது ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி என்ற முனைப்புக்கேற்ப நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் மூவர்ண கொடியை ஏற்றுங்கள் அல்லது காட்சிப்படுத்துங்கள் என்று பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த இயக்கம் தேசிய கொடியுடனான நமது தொடர்பை வலுப்படுத்தும் என்று கூறியுள்ளார். டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதள பக்கங்களில் பொதுவாக எல்லோரும் அவரவர் தங்கள் படத்தையோ அல்லது தங்களுக்கு பிடித்த படத்தையோ முகப்பு படமாக வைக்கிறார்கள். இப்போது பிரதமர் நரேந்திரமோடி அனைவரும் தேசிய கொடியை முகப்பு படமாக பதிவேற்றம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அவரது சமூகவலைதள பக்கங்களில் இதை செய்து முன்மாதிரியாகிவிட்டார். இந்த ஆண்டு 75-வது ஆண்டு விழாவை நாட்டு மக்கள் கொண்டாடும் நிலையில், வீட்டுக்கு வீடு மூவர்ண கொடி இயக்கத்தை வலுப்படுத்துவோம். அந்த நாட்களில் தேசிய கொடியை இரவும், பகலும் பறக்கவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு மாதம் 13-ந் தேதிக்கும் 15-ந் தேதிக்கும் இடையே மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் நம் தேசிய கொடியை பட்டொளி வீசி பறக்க செய்யுங்கள் அல்லது காட்சிப்படுத்துங்கள் என்று பிரதமர் நரேந்திரமோடி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். 


2 லட்சம் தேசிய கொடிகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய இலக்கு - மாவட்ட நிர்வாகம்

இதனை தொடர்ந்து தேசிய கொடி ஏற்றுவதற்காக திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேசிய கொடியை தயாரிக்கும் பணிகள் கடந்த 5 நாட்களாக மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்று வந்தது. குறிப்பாக மணச்சநல்லூரில் மகளிர் சுதே உதவி குழு மூலம் தேசியக்கொடி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி மற்றும் துவாக்குடி நகராட்சிகளில் வார்டு உறுப்பினர்கள் வீடு வீடாக சென்று தேசியக்கொடி வழங்கும் பணிகள் தற்போது  நடைபெற்று வருகிறது.  மேலும் 13 ஆம் தேதிக்குள் மாவட்ட முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் தேசிய கொடியை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.


2 லட்சம் தேசிய கொடிகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய இலக்கு - மாவட்ட நிர்வாகம்

இந்நிலையில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி நிர்வாகம் 2 லட்சம் தேசிய கொடிகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த தேசியக் கொடி மாநகராட்சியின் 5 மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பி  வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் தலா 40 ஆயிரம் கொடி விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு கொடிக்கு ரூ.21 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி பகுதியில் 2 லட்சத்து 75 ஆயிரம் வீடுகள் உள்ளன. இதில் இரண்டு லட்சம் மக்களுக்கு கொடி விற்பனை செய்யலாம் என கருதுகின்றனர். இதுபற்றி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், நமது மாநகராட்சி கவுன்சிலர்களும் இதற்கு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என நம்புகிறோம். மேலும் 16 ஆயிரம் கொடிகள் பள்ளிகளுக்கு வழங்க இருக்கின்றோம். கவுன்சிலர்கள் நன்கொடையாளர்கள் மூலம் தேசியக் கொடிகளை வாங்கி வார்டு மக்களுக்கு இலவசமாக கொடுத்தால் நிறைய வீடுகளில் கொடி ஏற்றும் வாய்ப்பு ஏற்படும் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். துணியினால் செய்யப்பட்ட இந்த கொடி ரூ.21க்கு வாங்கப்பட்டு அதே விலைக்கு பொதுமக்களுக்கு விநியோகிப்பதாகவும், இதில் எந்த லாப நோக்கமும் இல்லை எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஸ்ரீரங்கம் பகுதிகளில் கழிவுநீர் பொங்கி வழிவதால் மக்கள் கடும் அவதி: குழாய்களை மாற்ற விரைவில் நடவடிக்கை?
ஸ்ரீரங்கம் பகுதிகளில் கழிவுநீர் பொங்கி வழிவதால் மக்கள் கடும் அவதி: குழாய்களை மாற்ற விரைவில் நடவடிக்கை?
Trichy Power Shutdown: திருச்சியில் நாளை (27-05-2026) பவர்கட் அறிவிப்பு! - எங்கெல்லாம் கரண்ட் இருக்காது?
Trichy Power Shutdown: திருச்சியில் நாளை (27-05-2026) பவர்கட் அறிவிப்பு! - எங்கெல்லாம் கரண்ட் இருக்காது?
திருச்சியில் அதிரவைக்கும் கஞ்சா புழக்கம்... சிறுவர்கள், மாணவர்கள் சீரழியும் அவலம்: தவிக்கும் பெற்றோர்
திருச்சியில் அதிரவைக்கும் கஞ்சா புழக்கம்... சிறுவர்கள், மாணவர்கள் சீரழியும் அவலம்: தவிக்கும் பெற்றோர்
Bengaluru-Trichy Travel : ரூட் கிளியரா இருக்கு பாஸ்! பெங்களூரு - திருச்சி பயணத்தை செம ஈஸியாக்கும் 'சீக்ரெட்' வழித்தடங்கள்!
Bengaluru-Trichy Travel : ரூட் கிளியரா இருக்கு பாஸ்! பெங்களூரு - திருச்சி பயணத்தை செம ஈஸியாக்கும் 'சீக்ரெட்' வழித்தடங்கள்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்
10 நிமிட MEETING 4 முக்கிய கோரிக்கைகள் மோடியுடன் முதல்வர் விஜய்!
தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK to TVK: அதிமுகவில் விழுந்த அடுத்த விக்கெட்; தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்; யார் தெரியுமா.?
அதிமுகவில் விழுந்த அடுத்த விக்கெட்; தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்; யார் தெரியுமா.?
Gold Silver Rate May 28th: நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்.! இன்று ஒரே நாளில் தங்கம் விலை அதிரடியாக குறைவு; தற்போது விலை என்ன.?
நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்.! இன்று ஒரே நாளில் தங்கம் விலை அதிரடியாக குறைவு; தற்போது விலை என்ன.?
CM Vijay: கையகப்படுத்தப்பட்ட பரந்தூர் நிலங்கள்! திருப்பித் தருமா தவெக அரசு? விஜய்யின் முடிவு என்ன?
CM Vijay: கையகப்படுத்தப்பட்ட பரந்தூர் நிலங்கள்! திருப்பித் தருமா தவெக அரசு? விஜய்யின் முடிவு என்ன?
America Strikes Iran: யப்பா, மறுபடியும் முதல்ல இருந்தா.! மீண்டும் தொடங்கும் போர்.! ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்
யப்பா, மறுபடியும் முதல்ல இருந்தா.! மீண்டும் தொடங்கும் போர்.! ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்
Trump Warns Oman: ட்ரம்ப்பின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.! ஓமனை தகர்த்துவிடுவேன் என எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?
ட்ரம்ப்பின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.! ஓமனை தகர்த்துவிடுவேன் என எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?
CV Shanmugam: இபிஎஸ்-யிடம் தஞ்சமா? MLA பதவி ராஜினாமாவா? சிவி சண்முகம் இன்று முக்கிய முடிவு!
CV Shanmugam: இபிஎஸ்-யிடம் தஞ்சமா? MLA பதவி ராஜினாமாவா? சிவி சண்முகம் இன்று முக்கிய முடிவு!
Tamilnadu Headlines: இன்று பக்ரீத் கொண்டாட்டம்! ராகுல், சோனியாவை சந்திக்கும் விஜய் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Headlines: இன்று பக்ரீத் கொண்டாட்டம்! ராகுல், சோனியாவை சந்திக்கும் விஜய் - தமிழகத்தில் இதுவரை
தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்: அடுத்த இரு நாட்களுக்கான வானிலை நிலவரம்!
தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்: அடுத்த இரு நாட்களுக்கான வானிலை நிலவரம்!
Embed widget