டெல்டா பகுதியில் கொரோனா தொற்றால் பள்ளிக் குழந்தைகள் அடுத்தடுத்து பாதிப்பு!
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால் பெற்றோர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் இரட்டை வாய்க்கால் பகுதியில் இயங்கி வரும் தனியார் மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு மாணவிக்கு கொரானா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.ஆகையால் இன்று முதல், ஒரு வாரம் பள்ளிக்கு விடுமுறையை அறிவித்துள்ளது பள்ளி நிர்வாகம். மேலும் மாணவியுடன் தொடர்பில் இருந்தவர்கள், மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ள பள்ளி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மாணவர்களின் நலனைக் கருதியே ஒரு வார காலம் விடுமுறை அறிவித்துள்ளதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொற்று பரவாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தனர்.ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு மண்ணச்சநல்லூர் அரசுப் பள்ளி ஆசிரியைக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யபட்டுள்ளது , குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து புதுக்கோட்டை கறம்பக்குடி அருகே முள்ளங்குறிச்சி ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இதனைத் தொடர்ந்து மாணவியை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மெலும் பள்ளியில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யபட்டுள்ளது, மேலும் தொற்று பரவாதா வகையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று கடந்த இரண்டு நாட்கள் முன்பாக அரியலூர் மாவட்டத்தில் உதவி பெறும் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கும், ஆண்டிமடம் தென்னூரில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோன்று தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி மேலையூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கு, நேற்று முன்தினம் காய்ச்சல் மற்றும் சளி இருந்ததால் ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் நோய்த்தொற்று பரிசோதனை செய்துள்ளனர், மற்றும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு அந்த மாணவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். பரிசோதனை முடிவில் மாணவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக சுகாதாரத் துறை மூலம் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் ,மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நோய் பரிசோதனை செய்யப்பட்டு, பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்களின் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மேலும் அந்த வகுப்பறை முழுவதும் கிருமி நாசினி தெளித்து தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது,சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )