Srirangam Temple issue: சேகர் பாபு இந்து அறநிலைத்துறை அமைச்சராக இருக்க தகுதி இல்லை - ஹெச். ராஜா
அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் அறை வாங்கிய பின்னர் தற்பொழுது திமுகவினர் அமைதியாகி விட்டனர் - ஹெச்.ராஜா

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் ஆறாவது சுற்றில் உள்ள கிழக்கு வாசல் கோபுரத்தின் கொடுங்கை சுவர் கடந்த 5ம் தேதி இடிந்து விழுந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா இன்று நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறுகையில், “தமிழகத்தில் உள்ள ஆலயங்கள் மீது அக்கரை இல்லாத சேகர் பாபு எப்படி அறநிலை துறையையும், அரங்கநாதரையும் பார்க்க முடியும் ?. கோவில் உண்டியலை நம்பியே அறநிலைய துறை கோவில்களை கையில் எடுத்தது. ஆனால் கோவில்களுக்கு என்று அறநிலையத்துறை ஏதும் செய்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. கோவில் திருப்பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள ஜெயராமன் எதற்கும் தகுதியானவர் அல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த கோபுரத்தை ஆய்வு செய்து முழுமையாக சரி செய்திருக்க வேண்டும். இதனை தவறிய ஜெயராமனை கண்டிப்பாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் திமுகவில் பல இலக்கா இல்லாத அமைச்சர்கள் உள்ளனர். ராமராஜ்யம் இது என்று சொன்ன ராஜேந்திரன் என்கிற தமிழக காவல் துறையை சேர்ந்தவரை ஸ்டாலின் அரசு டிஸ்மிஸ் செய்து உள்ளனர். ஏன் இதே போல் கிறிஸ்துவர் அதிகாரிகளை நீக்கவில்லை என்பதே என் கேள்வி”என்றார்.
மேலும், ”செந்தில் பாலாஜி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் அரசாங்கம் ஆட்டம் போட்டுக்கொண்டு இருந்தது. ஆனால் 60 நாளுக்கு பின்னர் உச்சநீதி மன்றத்தில் அரை வாங்கிக்கொண்டு இப்போது அமைதியாக உள்ளனர். ஸ்ரீரங்கத்தில் தாமரை கோலங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்காத, தமிழ் செல்வி என்கிற மேலாளரை சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும், கண்டிப்பாக அவரை வேலையை விட்டு நீக்க வேண்டும், இல்லையென்றால் ஒட்டுமொத்த பாஜகவும் சேர்ந்து எதிர்ப்போம். சிலை கடத்தலோடு தொடர்பில் இருப்பவர்கள் எப்படி இந்து சமய துறையில் இருக்க முடியும். இந்து சமய அறநிலைத் துறையில் அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகளாக கண்டிப்பாக இந்துக்கள் மட்டுமே இருக்க வேண்டும். திமுக ஆட்சியை விட்டு போகும் போது கோவில் நகைகள், பனம், நிலம், சொத்துக்கள் இருக்க கூடாது என்பதே இவர்களது எண்ணம். பழனியில் உள்ள கோசாலையை எப்படி சிப்காட் ஆக மாற்றுவீர்கள் ? யார் உங்களுக்கு இந்த அனுமதியை கொடுத்தது” என கேள்வி எழுப்பினார்.
மேலும், ”கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஒருவர் எப்படி அமைச்சராக செயல்பட முடியும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பின்னாடியே சுற்றும் ஒருவர் அமைச்சர் பதவிக்கு தகுதி இல்லாதவர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இந்துக்குள் கோவில்களிலும் உள்ள சொத்துக்களை கொள்ளையடிக்கும் எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார்கள்” என்றார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

