மேலும் அறிய

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தேரோட்டம் - வரும் 29ஆம் தேதி திருச்சியில் உள்ளூர் விடுமுறை

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவின் தொடக்கமாக கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி  அதிகாலை 2.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 3 மணிக்கு கொடி மண்டபம் வந்தார். பின்னர் காலை 4.30 மணி முதல் காலை 5.15 மணிக்குள் மீன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து காலை 6 மணிக்கு நம்பெருமாள் கொடி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 6.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை பேரிதாடனம் நடைபெற்றது. பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் உலா வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை சென்றடைந்தார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளினார். இதையடுத்து அங்கிருந்து புறப்பட்டு இன்று  அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். இதனை தொடர்ந்து இன்று மாலை  கற்பகவிருஷ வாகனத்திலும், 23ஆம் தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 24ஆம் தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருட வாகனத்திலும், 25ஆம் தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 26ஆம் தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார்.
 
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தேரோட்டம்  - வரும் 29ஆம் தேதி திருச்சியில் உள்ளூர் விடுமுறை
 
இதனை தொடர்ந்து 27ஆம் தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 28ஆம் தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 29ஆம்  தேதி நடைபெறுகிறது. 30ஆம் தேதி சப்தாவரணம், மே ஒன்றாம் தேதி ஆளும்பல்லக்குடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி, உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு கிழக்கு சித்திரை வீதியில் உள்ள சித்திரை தேரில் முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது. அப்போது கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல முகூர்த்தக்காலில் புனிதநீர் தெளித்து, சந்தனம் பூசி, முகூர்த்தக்காலின் நுனியில் மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்கல பொருட்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
 
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தேரோட்டம்  - வரும் 29ஆம் தேதி திருச்சியில் உள்ளூர் விடுமுறை
 
பின்னர் காலை 9.45 மணியளவில் மிதுன லக்னத்தில் முகூர்த்தக்காலை தேரில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் நட்டனர். அப்போது கோவில் யானைகள் ஆண்டாள், லட்சுமி தும்பிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தின. இந்நிகழ்ச்சியில் கோவில் அர்ச்சகர்கள், அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் வருகிற 29ஆம் தேதி நடைபெறுவதால் அன்று அனைத்து அரசு அலுவலகங்களுக்கும்  உள்ளூர் விடுமுறை அளித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Karthigai 2024: பக்தர்களே! நாளை பிறக்கிறது முக்தி தரும் கார்த்திகை - இத்தனை விசேஷங்களா?
Karthigai 2024: பக்தர்களே! நாளை பிறக்கிறது முக்தி தரும் கார்த்திகை - இத்தனை விசேஷங்களா?
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
Embed widget