(Source: ECI/ABP News/ABP Majha)
திருச்சியில் போதை பழக்கத்தில் இருந்து மீண்டு வந்த நபர்களுக்கு மறுவாழ்வு திட்டம்
’’30 ஆயிரம் மதிப்பில் பெட்டிக்கடை வைத்தல், ஆடு அல்லது கறவை மாடுகள் வழங்குதல் என வாழ்க்கை மேம்பாட்டுக்கான திட்டங்கள், திட்ட உதவிகள் ஆகியவை முன்னெடுக்கப்பட்டு வருகிறது’’
திருச்சி மாவட்டத்தில் மதுபானம், கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்கள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அலுவலர்கள், மதுவிலக்கு குற்றப்பிரிவு காவல் துறை அலுவலர்கள், திருச்சி மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்தினால் உடல்நலம் பாதிக்கப்படுவதோடு தன்னை சார்ந்த குடும்பத்தினருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தான் மட்டுமல்லாது தனது குடும்பத்தினரையும் காப்பாற்றிய மகிழ்ச்சியாக வாழும் வகையில் குடிப்பழக்கத்தை தவிர்த்திடல் வேண்டும். திருச்சி மாவட்டத்தில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 6 கலைக்குழுவினர் வாயிலாக கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் பல இடங்களில் போதைபொருட்களான கஞ்சா, மதுபானம் போன்ற பொருட்கள் தொடர்ந்து அதிகமாக கள்ளச்சந்தையில் விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும் பல இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாக கொண்டு வருகிறார்கள். மேலும் திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை மதுபானம், கள்ளச்சாராயம் போதை பழக்கத்திற்கு பலர் அடிமையாகி போதையில் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அன்மையில் நடைபெற்ற கொலை, குடும்பதகராறில் பெண்கள் குழந்தைகள் தற்கொலைசெய்து கொண்டுள்ள சம்பவங்கள் அனைத்திற்கும் மூல காரணமாக இருப்பது மதுபானம், கள்ளச்சாராயம், போன்ற போதை பொருட்கள் தான் என்றார். இவற்றை முற்றிலுமாக தடுக்க மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறார்கள். மேலும் போதைபொருட்கள் விற்பனை செய்வோர்களின் மீது கடுமையான நடைவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. போதை பழக்கத்தில் இருந்து திருந்தி வாழ்வதற்க்கும், தொழில் தொடங்குவதற்கும் அரசின் சார்பில் பல திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் வாகன ஓட்டுனர்கள் இடையே குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்தல் குறித்து எடுத்துரைத்தல் அனைத்து வட்டாரங்களிலும் மகளிர் சுய உதவிக் குழுவின் வாயிலாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்குதல் மாணவர்களிடையே கட்டுரை ஓவியப் போட்டி நடத்துதல், ஏற்கனவே கள்ளச்சாராயம் வியாபாரம் செய்து தண்டனை பெற்று பின்னர் மனம் திருந்திய நபர்கள் அரசின் மூலம் பிற தொழில் செய்து நல்ல முறையில் வாழ்க்கையை நடத்திட நபர்கள் ஒருவருக்கு தலா 30 ஆயிரம் மதிப்பில் பெட்டிக்கடை வைத்தல், ஆடு அல்லது கறவை மாடுகள் வழங்குதல் என வாழ்க்கை மேம்பாட்டுக்கான திட்டங்கள், திட்ட உதவிகள் செய்வது குறித்து எடுத்துரைத்தல், ஆகிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார்.