திருச்சியில் சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் - கொரோனா விதிகளை மீறியதாக ஈபிஎஸ் மீது வழக்கு
திருச்சியில் சொத்துவரி உயர்வை கண்டித்து அதிமுக சார்ப்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, வெல்லமண்டி நடராஜன், உள்ளிட்ட பலர் மீது நான்கு பிரிவில் வழக்கு பதிவு
தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் திருச்சியில் நேற்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலமையில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என சுமார் ஆயிரம் பேர்கள் கலந்துக்கொண்டனர். மேலும் கண்டன உரையை நிகழ்த்திய எடப்பாடி பழனிச்சாமி பேசியது.. தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசு தான் வீட்டு வரியை உயர்த்த சொல்லி உள்ளது என வீன் பழியை போட்டு ஏமாற்ற பார்க்கின்றனர். இந்தியாவிலேயே தேர்தல் அறிக்கையை புக்கு போட்டு வெளியிட்ட கட்சி திமுக தான் - 487வது அறிவிப்பில் நீங்கள் தெரிவித்தது சொத்து வரி உயர்த்தப்படாது என்று ஆனால் தற்போது உயர்ந்துள்ளது. இந்த ஆர்பாட்டத்தின் நோக்கம் மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனோவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நேரத்தில் இந்த விடியா அரசு 150% சொத்து வரியை உயர்த்தி உள்ளது. மக்கள் மிகவும் சிரமப்பட்டு கொண்டு இருக்கும் இந்த காலகட்டத்தில் இப்படி வரியை உயர்த்தி உள்ளது கண்டனத்துக்கு உரியது என்றார். தமிழக முதல்வரையும் , திமுக ஆட்சியையும் விமர்சனம் செய்தார்.
இந்நிலையில் அதிமுக சார்பாக நேற்று நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு அனுமதிபெறாமல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து அதிக அளவில் அதிமுக தொண்டர்கள் வந்தனர். இதனால் திருச்சி ஜங்ஷன் பகுதியில் கடுமையான போக்குவரத்து ஏற்பட்டது. ஆகையால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கபட்டு உள்ளது. மேலும் 2 மணி நேரமாக அப்பகுதி முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூர் விளைவித்ததாகவும், கொரோனா விதிமுறைகளை மீறியதாகவும், போக்குவரத்துக்கு இடையூர் விளைவித்தல், அனுமதி இல்லாமல் கூட்டத்தை கூட்டுதல் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், பரஞ்ஜோதி, வளர்மதி உள்ளிட்ட பலர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 143,153,188, 283 ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் திருச்சி கண்டோண்மென்ட் காவல் நிலைய காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.