மேலும் அறிய

குடும்ப பிரச்னை காரணமாக மகனுடன் தந்தை கிணற்றில் குதித்து தற்கொலை -பெரம்பலூரில் சோகம்

பெரம்பலூர் மாவட்டத்தில் குடும்ப பிரச்னையால் மகனுடன் தந்தை கிணற்றில் குதித்து உயிரிழந்த சம்பவம் வெண்பாவூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெண்பாவூர் காட்டு கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 35). விவசாயி. இவரது மனைவி பூங்கொடி (30). இவர்களுக்கு யோகேஸ்வரன் (9), பிரகதீஸ்வரன் (4) என 2 மகன்கள் உண்டு. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அவ்வப்போது குடும்பப் பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த பாஸ்கர், தனது 2-வது மகன் பிரகதீஸ்வரனை தூக்கிக்கொண்டு அருகில் இருந்த விவசாயக் கிணற்றுக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென அவர், பிரகதீஸ்வரனுடன் கிணற்றில் குதித்துள்ளார். இதில் 2 பேரும் நீரில் மூழ்கினர். இதனைக்கண்ட பூங்கொடி, சத்தம்போட்டு அருகில் இருந்தவர்களை அழைத்துள்ளார். இதையடுத்து அவர்கள், கிணற்றுக்குள் இருந்து 2 பேரையும் மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள், கயிற்றை கட்டிக்கொண்டு கிணற்றுக்குள் இறங்கி தேடினர். இதையடுத்து பாஸ்கர் மற்றும் பிரகதீஸ்வரன் ஆகியோரை பிணமாக மீட்டு கிணற்றில் இருந்து மேலே கொண்டு வந்தனர்.

குடும்ப பிரச்னை காரணமாக மகனுடன் தந்தை கிணற்றில் குதித்து தற்கொலை -பெரம்பலூரில் சோகம்

மேலும் இதுபற்றி தகவல் அறிந்த கை.களத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பப் பிரச்சினையால் மகனுடன் தந்தை கிணற்றில் குதித்து உயிரிழந்த சம்பவம் வெண்பாவூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டதில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகையில், இவர்களுக்கு திருமணம் ஆகி சில ஆண்டுகள் மகிழ்ச்சியாக தான் இருந்தனர். மேலும் பாஸ்கர் தினம்தோறும் விவசாய பணியில் ஈடுபட்டு வருவார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே சில கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிந்தது.

குடும்ப பிரச்னை காரணமாக மகனுடன் தந்தை கிணற்றில் குதித்து தற்கொலை -பெரம்பலூரில் சோகம்

இதனை தொடர்ந்து தினமும் இருவரும் சண்டையிட்டு கொள்வார்கள். காலபோக்கில் பிரச்சனை அதிகரித்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து இருவருக்கும் பிரச்னை நடந்தாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரனையை மேற்கொண்டு வருகிறார்கள். 

தமிழகம் இத்தனையாவது இடமா தற்கொலையில்..? 

கடந்த 5 ஆண்டுகளில் அதிக தற்கொலைகள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் தமிழகமும், மூன்றாவது இடத்தில் மேற்கு வங்கமும் இருந்து வருகின்றது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி, திருவள்ளூர் மாணவி சரளா ஆகியோர் தற்கொலை சம்பவங்கள் தமிழகத்தையே அதிர வைத்தன. தொடர்ந்து மாமல்லப்புரம், விக்கிரவாண்டி, மேட்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சிகளும் பலருக்கும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Pulsar N160 S-N160 SS First Look: அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
Embed widget