திருச்சியில் 2000 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கிய அமைச்சர் கே.என். நேரு
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு 2000 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்- அமைச்சர் கே.என். நேரு
தமிழ்நாடு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் பட்டா வழங்கும் விழாவில் 2000 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி ரூபாய் 12449.67 இலட்சம் மதிப்பீட்டில் நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், ரூபாய் 1235 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெறவுள்ள புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 4321 பயனாளிகளுக்கு ரூபாய் 34.55 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கி விழாப் பேருரையாற்றினார். நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 24 கட்டடங்களும், நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் 2 பணிகளும், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் 13 பணிகளும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 4 பணிகளும், ஊரக வளர்சித்துறையின் சார்பில் 7 பணிகளும், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 4 பணிகளும், வணிகவரித்துறையின் சார்பில் 1 பணியும், கரூவூலம் மற்றும் கணக்குகள் துறையின் சார்பில் 1 பணியும், நூலகத்துறையின் சார்பில் 1 பணியும் என மொத்தம் ரூபாய் 12,449.57 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 57 பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பின்பு ரூபாய் 125 இலட்சம் மதிப்பீட்டில் திருவெறும்பூர் துவாக்குடி ராவுத்தன் மேடு அரசுத் துவக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்கள்.
மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 2001 பயனாளிகளுக்கு ரூபாய் 10 கோடியே 64 இலட்சம் மதிப்பீட்டில் வீட்டுமனைப் பட்டாக்களும், 2 பயனாளிகளுக்கு 3 இலட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் சாலைவிபத்து நிவாரண நிதி உதவியும், 2 பயனாளிகளுக்கு கருணை அடிப்படையில் இளநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் பணி நியமன ஆணைகளையும். 20 பயனாளிகளுக்கு ரூபாய் 2.91 இலட்சம் மதிப்பீட்டில் சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் மாதாந்திர ஓய்வூதியத் தொகைக்கான ஆணையும், 45 பயனாளிகளுக்கு ரூபாய் 10.12 இலட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் இயற்கை மரணத்திற்கான உதவித்தொகையும், 17 பயனாளிகளுக்கு ரூபாய் 1.36 இலட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் திருமண நிதி உதவித் தெகையும், 40 பயனாளிகளுக்கு ரூபாய் 1 இலட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகையும், மகளிர் திட்டத்தின் சார்பில், 500 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்புக்கான ஆணையும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.சத்துணவுத் திட்டத்தின் கீழ் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
மேலும், ஊரக புத்தாக்கத்துறையின் சார்பில் (வாழ்ந்து காட்டுவோம்) 5 பயனாளிகளுக்கு சமுதாய திறன் பள்ளித் திட்டத்தின் கீழ் ரூபாய் 4.30 இலட்சம் மதிப்பீட்டில் நிதிஉதவிக்கான ஆணையும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 50 பயனாளிகளுக்கு ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் இருங்களூர் திட் திட்டப்பகுதி 1 அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீட்டுக்கான ஆணையும், மாவட்ட சமூகநலத்துறையின் சார்பில் 225 பயனாளிகளுக்கு ரூபாய் 1.12 கோடி மதிப்பீட்டில் முதமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வைப்புத் தொகைக்கான ஆணையும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு 12 ஆயிரம் மதிப்பீட்டில் கல்வி உதவித்தொக்ைகான ஆணையும், 2 பயனாளிகளுக்கு ரூபாய் 88 ஆயிரம் மதிப்பீட்டில் இயற்கை மரணத்திற்கான நிவாரண உதவித்தொகைக்கான ஆணையும், 1 பயனாளிக்கு ரூபாய் 5 இலட்சம் மதிப்பீட்டில் விபத்து மரணத்திற்கான நிவாரண உதவித் தொகைக்கான ஆணையும், 44 பயனாளிகளுக்கு ரூபாய் 5.28 ஆயிரம் மதிப்பீட்டில் மாதாந்திர ஓய்வூதியத்திற்கான ஆணையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 176 பயனாளிகளுக்கு ரூபாய் 52.50 இலட்சம் மதிப்பீட்டில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் வெங்காய சேமிப்பு கிடங்கு அமைக்க நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கியும், நலதிட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.