மேலும் அறிய

குப்பைத்தொட்டி இல்லாத தமிழகம் உருவாக்க முயற்சி - அமைச்சர் கே.என்.நேரு

நம்மால் பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியவில்ல . இது பெரிய பிரச்னையாக இருக்கிறது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பிளாஸ்டிக் மக்குவதில்லை ஆகையால் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும்.

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று சிறப்பு சுகாதார முகாமான 'நம்ம ஊரு சூப்பரு' திட்ட செயல்பாட்டினை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மாஸ் கிளீனிங் என்ற திட்டம் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதில் தன்னார்வலர்கள், நகர்ப்புற உள்ளாட்சி தூய்மை பணியாளர்கள் சுய உதவி குழுக்கள் இணைந்து மாஸ் கிளீனிங் செய்கிறார்கள். மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் பிரித்து பெறப்படுகிறது. அந்த வகையில் கிராமப் பகுதிகளும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று ஊரகத் துறை சார்பில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கமானது ஊரை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குடிநீரில் கழிவுகள் கலக்கக்கூடாது. சுத்தமான தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதாகும். கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக பப்பாளி மற்றும் முருங்கைக் கன்றுகளை இங்கு வழங்குகிறோம். நம்மால் பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியவில்லை. இது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பிளாஸ்டிக் மக்குவதில்லை. இந்தியாவில் இந்து நகரில் நகராட்சி துறை சார்பில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத குப்பைகளை எரிபொருளாகவும் மாற்றுகிறார்கள் என்றார்.

குப்பைத்தொட்டி இல்லாத தமிழகம் உருவாக்க முயற்சி - அமைச்சர் கே.என்.நேரு

இந்த திட்டத்தை அறிந்து கொள்ள நமது பேரூராட்சி தலைவர்கள், அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் சென்று திரும்பி இருக்கிறார்கள். அந்த முறை வரும்போது குப்பைத்தொட்டியே இருக்காது. உற்பத்தியாகும் இடத்திலேயே அதனை பிரித்து மக்காத குப்பைகளை மின்சாரம் தயாரிக்கவும், மக்கும் குப்பைகளை உரமாக தயாரித்து உங்களுக்கே வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் குப்பைக்கு பணம் தந்து பெற்று விடுகிறார்கள். இன்றைக்கு தமிழகத்தில் நகர்ப்புறங்களில் 55 சதவீத மக்கள் வசிக்கிறார்கள். இருந்த போதிலும் ஊரகத் துறைக்கு தமிழக அரசு ரூ.26 ஆயிரம் கோடி நிதியினை ஒதுக்கியுள்ளது. கிராமப்புறங்களில் ஜல் ஜீவன் திட்டத்தில் வீடு தோறும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூ.40 ஆயிரம் கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது” என்றார்.

தமிழகம் முழுவதும் தூய்மை நகரமாக மாற்ற வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்துவதால் இயற்கை வளங்களும், சுற்றுச்சூழலும் மிகவும் பாதிக்கப்படுவதால் அவற்றை பயன்படுத்தக் கூடாது என அரசு தெரிவித்துள்ளது. ஆகையால் பொதுமக்கள் பிளாஸ்டிக் சம்பந்தமான எந்த ஒரு பொருளையும் பயன்படுத்த வேண்டாம். மேலும் பொதுமக்கள் மக்கும் குப்பை , மக்காத குப்பை என தரம் பிரித்து மாநகராட்சி ஊழியர்களிடம் வழங்க வேண்டும் என்றார்.  பொதுமக்களும் அரசு எடுக்கும்  நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அது முழுமை பெறும்” என்று கூறினார். 

குப்பைத்தொட்டி இல்லாத தமிழகம் உருவாக்க முயற்சி - அமைச்சர் கே.என்.நேரு

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.பழனியாண்டி, ந.தியாகராஜன், ப.அப்துல்சமது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வே.பிச்சை, ஒன்றியக் குழுத் தலைவர் ச.துரைராஜ் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வளர்ச்சித் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

"முதல்வர் விஜய் எங்கள் வயிற்றில் அடித்துள்ளார்" - பால் உற்பத்தியாளர்கள் கொந்தளிப்பு; ஆவின் பால் நிறுத்தம்?
GST Highway Smart Lighting: தாம்பரம்–திண்டிவனம் சாலையில் புதிய மாற்றம்! இரவு பயணிகளுக்கு வரப்போகும் ஸ்மார்ட் வசதி! IOT அதிசயம்!
தாம்பரம்–திண்டிவனம் சாலையில் புதிய மாற்றம்! இரவு பயணிகளுக்கு வரப்போகும் ஸ்மார்ட் வசதி! IOT அதிசயம்!
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget