மேலும் அறிய
Advertisement
வேங்கைவயல் குடிநீர் தொட்டி விவகாரம்: 8 பேரிடம் சிபிசிஐடி விசாரணை
வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த சம்பவம் தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உள்பட 8 பேரிடம் திருச்சி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில், மேல்நிலை குடிநீர் தொட்டியில் சமீபத்தில் சிலர் மனிதக் கழிவுகளை கலந்ததாக பரபரப்பு புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக தகவல் கிடைத்ததும் மாவட்ட கலெக்டர் கவிதாராமு, போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசாரும் தனியாக வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் விசுவரூபம் எடுத்ததை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணையை தொடங்கினர். அத்துடன், குடிநீர் தொட்டியில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னைக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த சம்பவம் தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உள்பட 8 பேரிடம் திருச்சி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.#Trichydistrict @abpnadu pic.twitter.com/YTu4iyVxDD
— Dheepan M R (@mrdheepan) February 8, 2023
மேலும் முத்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கைவயல், இறையூர் மற்றும் பக்கத்து கிராமங்களை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 46 பேர், பிற சமூகத்தை சேர்ந்த 49 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்தநிலையில் வேங்கைவயல் கிராமம் அமைந்துள்ள முத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவரின் கணவர், பயிற்சி காவலர் முரளிராஜா மற்றும் முன்னாள் கவுன்சிலர் உள்பட 8 பேரை விசாரணைக்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருச்சி மத்திய சிறை அருகே உள்ள சி.பி.சி.ஐ.டி போலீஸ் அலுவலகத்துக்கு அழைத்திருந்தனர்.
மேலும் அவர்கள் 8 பேரும் நேற்று காலை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு தில்லைநடராஜன் முன் நேரில் ஆஜராகினர். அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தை அடைந்து விட்டதாகவும், விரைவில், தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion