மேலும் அறிய

திருச்சி : பேருந்து சேவைகள் முடக்கம்.. 1500 மேற்பட்ட காவலர்கள் பணியில் தீவிரம்..

நாடு தழுவிய போராட்டத்தால் திருச்சி மாவட்டத்தில் 30 சதவீதம் பேருந்துகள் மட்டுமே இயக்கபடுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் அறிவித்த நாடு தழுவிய இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டம் இன்று  தொடங்கியது. பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய தொழிற்சங்கங்கள் மார்ச் 28,29 ஆகிய தேதிகளில் வாலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இந்நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் பேருந்து சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் திருச்சியில் இன்று  காலை முதல் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதியில் உள்ளனர். மேலும் தனியார் பேருந்து மட்டும் இயங்கி வருவதால், பேருந்தில் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதனைக்காரணம் காட்டி  வெளி மாநிலங்களுக்கு செல்லக்கூடிய தனியார் பேருந்துகள் அதிக அளவு கட்டணம் வசூலிப்பதாக பேருந்து பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்லும் மக்கள், ஆட்டோ மற்றும் வாடகை கார் மூலம் செல்லக் கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள நான்கு அரசு போக்குவரத்து பணிமனைகளில் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருச்சி : பேருந்து சேவைகள் முடக்கம்.. 1500 மேற்பட்ட காவலர்கள் பணியில் தீவிரம்..

இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் புறநகரில் 18 இடங்களிலும், மாநகரில் ஒரு இடங்களும் என மொத்தம் 19 இடங்களில் இன்று  மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. தற்போது நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருவதால், முக்கியமான இடங்களில், அதிக அளவில் காவல் துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

மேலும் ஆங்காங்கே தீயணைப்பு வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் பல வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.  திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையத்திற்கு பல்வேறு கிராமப்புற பகுதிகளில் இருந்து, இன்று காலை இயக்கப்படும் வழக்கமான பேருந்துகள் இயக்கப்படவில்லை. மணப்பாறை, துறையூர், லால்குடி,மண்ணச்சநல்லூர், சமயபுரம் போன்றபுறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறைவாக உள்ளதால், தனியார் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகின்றது.

திருச்சி : பேருந்து சேவைகள் முடக்கம்.. 1500 மேற்பட்ட காவலர்கள் பணியில் தீவிரம்..

இதே போல் மத்திய பேருந்து நிலையத்திலும் 30% அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இன்று அனைத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட, மலை தொழிற்சங்கத்தினர் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக ரயில்வே நிலையத்தை, முற்றுகையிட செல்ல உள்ளதால், 1500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நாளையும் போராட்டம் தொடரும் என்பதால் பொதுமக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பமான சூழ்நிலையில் இருக்கின்றனர்.

இந்நிலையில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் இருக்க திருச்சி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget