மேலும் அறிய

கணவரை விடுவிக்கக்கோரி நீதிமன்ற வளாகத்தில் விஷம் குடித்த மனைவியால் பரபரப்பு..!

கணவரை விடுவிக்கக்கோரி கோர்ட்டு வளாகத்தில் மனைவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள இடையக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் புரட்சித்தமிழன்(வயது 27). இவர் கடந்த அக்டோபர் மாதம் 15-ந் தேதி பட்டப்பகலில் பரணம் கிராமத்தில் மாடு மேய்த்த ஒரு பெண்ணிடம் 4½ பவுன் தாலிச்சங்கிலியை பறித்து சென்ற வழக்கில், அவரை இரும்புலிக்குறிச்சி போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் மொத்தம் 11 திருட்டு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையை ஏற்று, புரட்சித்தமிழனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார். இதையடுத்து புரட்சித்தமிழன் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த புரட்சித்தமிழனை செந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்த இரும்புலிக்குறிச்சி போலீசார் அழைத்து வந்தனர். அவரை பார்க்க அவரது மனைவி கோர்ட்டிற்கு வந்திருந்தார். அப்போது திடீரென அவர் கையில் வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் மற்றும் வக்கீல்கள் உடனடியாக அந்த பெண்ணை மீட்டு செந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

கணவரை விடுவிக்கக்கோரி நீதிமன்ற வளாகத்தில் விஷம் குடித்த மனைவியால் பரபரப்பு..!

இதனை தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், எனக்கு 17 வயதுதான் ஆகிறது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த எனக்கு பெற்றோர் இல்லை. இந்நிலையில் என்னை புரட்சித்தமிழன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு திருட்டு பழக்கம் இருப்பது எனக்கு தெரியாது. எனக்கு உள்ள ஒரே ஆதரவு எனது கணவர் மட்டுமே. எனவே அவரை விடுவிக்க வேண்டும் என்று போலீசாரிடம் கோரிக்கை விடுத்தார். இதற்கிடையே புரட்சித்தமிழன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். கணவரை விடுவிக்கக்கோரி கோர்ட்டு வளாகத்தில் மனைவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
H Raja on Vijay:
H Raja on Vijay: "கட்டுப்படுத்துங்க விஜய்... ரொம்ப கவலையா இருக்கு.." அட்வைஸ் கொடுத்த எச்.பாஜக
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
H Raja on Vijay:
H Raja on Vijay: "கட்டுப்படுத்துங்க விஜய்... ரொம்ப கவலையா இருக்கு.." அட்வைஸ் கொடுத்த எச்.பாஜக
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
Sri Lanka Iran Warship Attacked: இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
TVK Vijay: சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
Embed widget