மேலும் அறிய

அகோரியை பிடித்த காதல் வைரஸ் - அரைநிர்வாண கோலத்தில் கொல்கத்தா பெண்ணுடன் திருமணம்

’’கொல்கத்தாவை சேர்ந்த பிரியங்கா, அகோரி மணிகண்டனுடன் அகோரி பயிற்சி எடுத்த போது இருவரும் காதல் வயப்பட்டனர்’’

திருச்சியை சேர்ந்த பிரபல அகோரி சாமியார் பாபா மணிகண்டன் தனது சிஷ்யையை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சியை சேர்ந்தவர் அகோரி பாபா மணிகண்டன். காசிக்கு தனது இளம் வயதில் சென்றவர் அங்கேயே தங்கி சாமியார்களோடு சாமியாராக சில காலம் இருந்தார். காசியில் இருக்கும் அகோரிகளுடன் தங்கி இருந்தவர், அவர்களின் வாழ்க்கை முறை பிடித்து போய், சிவ பக்தனாக மாறி, அவர்களோடு சேர்ந்த அகோரி பயிற்சி எடுத்தார். காசியில் தங்கி இருந்து சில வருடங்களுக்கு முன் அகோரி ஆன மணிகண்டன் அதன்பின் மற்ற சில அகோரிகளோடு சேர்ந்து தமிழ்நாடு திரும்பினார். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் சுடுகாட்டில் தங்கி இருந்தவர் திருச்சிக்கு இடம் பெயர்ந்து அங்கு தனது சொந்த ஊரான அரியமங்கலம் அருகே மக்களுக்கு ஆசி வழங்கி கொண்டு இருந்தார். இரவில் அடிக்கடி இவர் சுடுகாட்டில் பூஜை செய்வது வழக்கம். இவரை சந்திக்க வந்த பலரை சிஷ்யர்களாக ஏற்றுக்கொண்டு திருச்சிலேயே அவர்களை தங்க வைத்து பலருக்கு சிறப்பு பயிற்சிகளையும் வழங்கி வருகிறார். சமீபத்தில் இவரின் சிஷ்யர் விபத்தில் பலியானார். பலியானவரின் உடலுக்கு அகோரி மணிகண்டன் திருச்சியில் இறுதி சடங்கு நடத்தியது பெரிய அளவில் சமூக வளையதளங்களில் வைரலானது.


அகோரியை பிடித்த காதல் வைரஸ் - அரைநிர்வாண கோலத்தில் கொல்கத்தா பெண்ணுடன் திருமணம்

இறந்து போன தனது சிஷ்யரின் உடலின் மீது ஏறி அமர்ந்து அகோரி மணிகண்டன் விசித்திர பூஜை செய்தார். மேலும் அகோரி பாபா மணிகண்டன் சாமியார் தொடர்ந்து நள்ளிரவில் பேய் ஓட்டுவது, சிறப்பு பூஜை என சங்குகள் முழங்க மிகுந்த சத்தத்துடன் பூஜை நடத்தி வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து ஒரு பதட்டமான சூழ்நிலையில் மக்கள் இருந்து வருகின்றனர். திடீரென்று நள்ளிரவில் இதுபோன்று பூஜை  நடத்துவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருப்பதாகவும், உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல்துறையிடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். இந்நிலையிலும் அகோரி மணிகண்டன் நான் இறந்தவரின் ஆத்மா சாந்தியடைய பூஜை  செய்வதாகவும், மக்களின் நலனுக்கா பூஜை செய்வதாக தெரிவித்தார். நள்ளிரவில் அரை நிர்வாணத்துடன் உடல்முழுவதும் விபூதி பூசிக்கொண்டு சங்குகள் முழங்க பூஜை செய்வது திருச்சி மாவட்டத்தில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


அகோரியை பிடித்த காதல் வைரஸ் - அரைநிர்வாண கோலத்தில் கொல்கத்தா பெண்ணுடன் திருமணம்

மேலும் மணிகண்டன் நடத்திய இந்த ஆன்ம சாந்தி பூஜை இணையம் முழுக்க வைரலாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் அகோரி சாமியார் மணிகண்டன் நேற்று தனது சிஷ்யயை திருமணம் செய்து கொண்டார். இவரிடம் கொல்கத்தாவை சேர்ந்த பிரியங்கா என்ற பெண் சிஷ்யையாக பயிற்சி எடுத்து வந்தார். கடந்த சில காலமாக பிரியங்கா, மணிகண்டனுடன் சேர்ந்து பயிற்சி எடுத்து வந்தார். இதில் பிரியங்கா மீது காதல் வயப்பட்ட அகோரி சாமியார் மணிகண்டன்  கோவிலில் வைத்து பிரியங்காவை திருமணம் செய்து கொண்டார். இந்து முறைப்படி மந்திரம் ஓத திருமணம் செய்து கொண்டார். இவரின் அருகில் இருந்த மற்ற அகோரிகள் சங்குகள் ஊதி திருமணத்தை நடத்தி வைத்தனர். உடல் முழுக்க விபூதி பூசி அகோரி மணிகண்டன் அரை நிர்வாணத்தில் காட்சி அளித்தார். பிரியங்காவும் முகம் முழுக்க விபூதி பூசி இருந்தார். இந்த திருமணம் திருச்சியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget