மேலும் அறிய

ஸ்ரீரங்கத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு!

ஸ்ரீரங்கத்தில் புதிய பஸ் நிலையம் அமைவதன் மூலம் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உலக பிரசித்தி பெற்ற ரெங்கநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த புண்ணிய ஸ்தலத்திற்கு வருகை தரும் சுற்றுலா வாகனங்கள் மற்றும் பஸ்கள் நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லை. மேலும் வழிநெடுகிலும் சாலைகளில் பஸ்களை நிறுத்தி விடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீரங்கத்தில் ஒரு பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் தீர்க்கப்படாமல் இருக்கும் அடிமனை பிரச்சனைக்கும் தீர்வு காண வேண்டும் என குடியிருப்பு வாசிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நீண்ட நாள் கோரிக்கையான ஸ்ரீரங்கம் பஸ் நிலைய பிரச்சினைக்கு விடிவு காலம் பிறந்து இருக்கிறது. தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் ஸ்ரீரங்கத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டியும் புதிய பஸ் நிலையத்துக்கு சட்டமன்றத்தில் குரல் கொடுத்தார். இதையடுத்து தமிழக பட்ஜெட்டிலும் ஸ்ரீரங்கம் புதிய பஸ் நிலையம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் புதிய பஸ் நிலையத்துக்கு இடம் தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது.

ஸ்ரீரங்கத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு!

இந்த நிலையில் நேற்றைய தினம் தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டர் மா.பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையாளர் வைத்திநாதன் ஆகியோர் ஸ்ரீரங்கம் மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகாமையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பழைய கிளப் இடத்தை பார்வையிட்டனர். சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அந்த இடம் அமைந்துள்ளது. அதில் பஸ் நிலையம் அமைக்க அமைச்சர் கே.என்.நேரு பச்சைக்கொடி காட்டி விட்டதாக மேயர் மு.அன்பழகன் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ஸ்ரீரங்கம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற கிடைத்த வாய்ப்பினை எண்ணி பெருமிதம் கொள்கிறோம். அமைச்சர் தேர்வு செய்துள்ள இடத்தில் புதிய பஸ் நிலையம் கட்ட திட்ட மதிப்பீடு தயாரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திட்ட மதிப்பீடு முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்படும். சுமார் ரூ.25 கோடி அளவுக்கு திட்ட மதிப்பீடு வரும் என எதிர்பார்க்கிறோம். இந்த புதிய பஸ் நிலையத்தில் டவுன் பஸ்கள் வந்து செல்ல வசதி செய்யப்படும்.

ஸ்ரீரங்கத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு!

மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கோவிலுக்கு வரும் சுற்றுலா வாகனங்களை யாத்திரி நிவாஸ் எதிர்ப்புறம் உள்ள கோவிலுக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தை பயன்படுத்த திட்டமிட்டு ரங்கநாதர் கோவில் அறநிலைய துறையிடம் கேட்டிருக்கிறோம். ஏற்கனவே யாத்ரி நிவாஸ் கட்டுவதற்கு மாநகராட்சிக்கு சொந்தமான இடம் கொடுக்கப்பட்டது. அதற்கு மாற்றாக மாநகராட்சிக்கு இடம் தருவதாக அப்போது ஒப்புக் கொண்டுள்ளனர். அந்த அடிப்படையில் யாத்திரி நிவாசுக்கு எதிர்ப்புறம் உள்ள நிலத்தை கேட்போம். அதனை அவர்கள் தர ஒப்புக் கொள்ளவில்லை என்றால் தரை வாடகைக்கு கேட்டு சுற்றுலா பஸ்கள் மற்றும் இதர வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி செய்யப்படும். அதன் மூலம் கோவில் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார். ஸ்ரீரங்கத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீரங்கம் நகர நல சங்க மக்கள் செய்தி தொடர்பாளர் ரோட்டேரியன் கே.சீனிவாசன் கூறும் போது, ஸ்ரீரங்கம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற இருக்கும் அமைச்சர் கே.என்.நேரு, பழனியாண்டி எம்.எல்.ஏ., மேயர் அன்பழகன் ஆகியோருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதேபோன்று அடிமனை பிரச்சினைக்கும் நல்ல தீர்வினை ஏற்படுத்தித் தருமாறு அமைச்சரை கேட்டுக்கொள்கிறோம் என்றார். இந்த புதிய பஸ் நிலையம் அமைவதன் மூலம் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai:
Annamalai: "பா.ஜ.க. பயப்படாது! விஜய் திராவிட சித்தாந்தத்தையே பேசுகிறார்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai:
Annamalai: "பா.ஜ.க. பயப்படாது! விஜய் திராவிட சித்தாந்தத்தையே பேசுகிறார்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Fengal Cyclone:  ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ்  நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
WTC Final: பவுமா பாய்ஸ்னா சும்மாவா! இந்தியா, ஆஸி.க்கு ஆப்பு வைக்கும் தென்னாப்பிரிக்கா?
WTC Final: பவுமா பாய்ஸ்னா சும்மாவா! இந்தியா, ஆஸி.க்கு ஆப்பு வைக்கும் தென்னாப்பிரிக்கா?
Embed widget