மேலும் அறிய

ஆ.ராசா தான் உலகத்திலேயே ஆபத்தான மனிதர் - இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத்

ஹிந்து தர்ம எதிர்ப்பு கருத்துக்களால், தி.மு.க., செல்வாக்கை இழந்து கொண்டிருக்கிறது. வரும் தேர்தலில் அதை உணர்ந்து விடுவர் - அர்ஜூன் சம்பத் பேட்டி 

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள ஓம் அகத்தியர் அம்மையப்பன் முதியோர் இல்லம் மற்றும் அறக்கட்டளையில் 8 ம் ஆண்டு குருபூஜை விழா வேள்வி  நடந்தது.  வேள்வியில் பங்கேற்ற இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத் கூறியதாவது: தமிழகத்தில், சனாதனம் குறித்த அவதுாறு கருத்து பரப்பப்படுகிறது. சனாதனம் என்பது தொன்மையான தர்மம். தமிழக அரசின் பாடப்புத்தகத்திலும் கூட, சனாதன தர்மம் பற்றி உள்ளது. ஆனால், மூடநம்பிக்கை, பிற்போக்குத்தனம் என்றெல்லாம் கூறியவர்கள், அதற்கு எதிர்ப்பு கிளம்பியவுடன் ஒரு சில கோட்பாட்டை எதிர்ப்பதாக சொல்கின்றனர். சனாதனம் என்ற வார்த்தையை தடை செய்து விட்டது போல், அரசு இயந்திரத்தின் செயல்பாடு உள்ளது. திருவாரூர் திரு.வி.க., கல்லூரியில் சனாதனத்தை எதிர்த்து பேசுவதற்கான சுற்றறிக்கையே அனுப்பி உள்ளனர். இது தவறான முன்னுதாரணம். திலகர் காலத்தில் ஹிந்து சமய ஒற்றுமை விழாவாக நடந்த விநாயகர் ஊர்வலம், பன்னெடும் காலமாக நடைபெற்று வருகிறது. திராவிட மாடல் ஆட்சியாளர்கள் வெறுப்பு பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். லஞ்சம் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, போதை கலாச்சாரம் போன்ற அரசாங்கத்தின் தோல்வியை திசை திருப்புவதற்காக, ஹிந்து கலாச்சாரத்துக்கு தடை விதிக்கின்றனர்.

ஆ.ராசா தான் உலகத்திலேயே ஆபத்தான மனிதர் - இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத்

திருவள்ளுவரை கிறிஸ்தவர் என்றவரையும், திருக்குறள் தங்கத் தட்டில் வைக்கப்பட்ட மலம் என்ற ஈ.வெ.ரா., போன்றவர்களை கைது செய்யவில்லை. ஆன்மீக பேச்சாளர் திருவள்ளுவரின் உண்மை விஷயங்களை எடுத்துப் பேசியதற்காக, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்துள்ளனர். அவர்கள் ஹிந்து தர்மத்தின் மீதும், பிராமணர்கள் மீதும் வெறுப்புணர்வோடு செயல்படுகின்றனர். பிராமண இன ஒழிப்பு கொள்கையை இந்த அரசு நடைமுறைப்படுத்துகிறது. கோவில்களில் கிறிஸ்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. ஆ.ராசா தான் உலகத்திலேயே ஆபத்தான மனிதர். வாய்க் கொழுப்பு எடுத்த ராசா, உதயநிதி போன்றவர்கள் வேண்டுமென்றே உள் நோக்கத்தோடு பிரிவினையை ஏற்டுத்துகின்றனர். ஒன்றே குலம் ஒருவனே தேவன், எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறோம். உலக மக்கள் சகோரத்துவம் சமத்துவத்தோடு வாழ வேண்டும் என்பதைத் தான் சனாதன ஹிந்து தர்மம் வலியுறுத்துகிறது. ஜனநாயகத்தில் எதுவும் நிரந்தரம் இல்லை. ஆட்சிப் பொறுப்பிலும் அதிகாரத்திலும் இருப்பதால், அடக்குமுறை நடவடிக்கைகளை கையாளுகின்றனர். மக்கள் உங்களுக்கு பாடம் புகட்டுவார்கள்.

ஆ.ராசா தான் உலகத்திலேயே ஆபத்தான மனிதர் - இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத்

தி.மு.க.,வினரை திருப்திபடுத்தவும், பதவி கிடைக்கும் என்பதற்காகவும், சனாதனத்தை விமர்சித்தும், ஹிந்துக்களையும் இழிவுபடுத்தி பேசுகின்றனர்.  தி.மு.க.,வில் கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு கோடி பேர் உள்ளனர். ஹிந்து தர்ம எதிர்ப்பு கருத்துக்களால், தி.மு.க., செல்வாக்கை இழந்து கொண்டிருக்கிறது. வரும் தேர்தலில் அதை உணர்ந்து விடுவர். பிரதமர் மோடி எதுவும் கொடுக்காமலா, இங்கு ஆட்சி நடத்துகின்றனர். தி.மு.க.,வினர் இந்திய தேசத்துக்கு விரோதமாகவே சிந்திக்கின்றனர். தமிழகத்துக்கு தண்ணீர் தரக்கூடாது, என்பது கர்நாடகா அரசின் நிலைப்பாடாக இருக்கலாம். ஆனால், காவிரி நதிநீர்ஆணையம் எடுக்கும் முடிவு, உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்றால், திறந்து விட வேண்டியிருக்கும். தண்ணீர் திறந்து விடாவிட்டால், ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக அர்த்தம். மத்திய அரசு அவர்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறது. காவிரி விவகாரத்தில், நம்முடைய உரிமையை நிலைநாட்டுவதற்கு, ஆணையம் நடவடிக்கை எடுக்கும். தி.மு.க.,வினர் கர்நாடகா காங்கிரஸ் அரசுடன் நட்பாக இருந்து, தமிழகத்துக்கு துரோகம் செய்கின்றனர். இந்த துரோகிகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget