மேலும் அறிய

கைதுசெய்யப்பட்ட திமுகவினர் 5 பேரும் 29-ஆம் தேதி வரை திருச்சி மத்திய சிறையில் அடைப்பு.. விவரம்..

காவல் நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்து பெண் போலீஸ் மீது தாக்குதல், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல், அரசு சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று அரசு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பிராட் டியூர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திருச்சி கண்டோன்மென்ட் எஸ்.பி.ஐ. காலனி பகுதியில் நமக்கு நாமே திட்டத்தில் அமைக்கப்பட்ட இறகு பந்து மைதானத்தை திறந்து வைக்க அமைச்சர் கே.என்.நேரு புறப்பட்டு சென்றார். இந்த விழாவில் அப்பகுதியில் வசிக்கும் மேல் சபை எம்.பி. திருச்சி சிவாவின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவரது ஆதரவாளர்கள் அவரின் வீட்டு முன்பு அமைச்சர் கே.என்.நேரு காரை வழிமறித்து கறுப்பு கொடி காட்டினர். இதனால் ஆத்திரமடைந்த நேரு ஆதரவாளர்கள் திருச்சி சிவாவின் வீடு புகுந்து போர்டிகோவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் காம்பவுண்டு சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த விளக்குகளை அடித்து நொறுக்கினர். இந்நிலையில் கருப்புக்கொடி காட்டிய சிலரை திருச்சி செசன்ஸ் கோர்ட் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இது பற்றி தகவல் அறிந்த நேரு ஆதரவாளர்கள் காவல் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் சிலர் காவல் நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்து பெண் போலீஸ் சாந்தியை தள்ளிவிட்டு சிவா ஆதரவாளர்களை நாற்காலிகளை தூக்கி அடித்து தாக்கியதாக கூறப்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களிலும் பரவியது.

கைதுசெய்யப்பட்ட திமுகவினர் 5 பேரும் 29-ஆம் தேதி வரை திருச்சி மத்திய சிறையில் அடைப்பு.. விவரம்..
 
இந்நிலையில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு கருப்புக்கொடி காட்டியதாக சிலர் மீது ஒரு வழக்கும், சிவா வீடு மீது தாக்குதல் நடத்தியதாக சிலர் மீது இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆனால் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக பெண் போலீஸ் சாந்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு சொத்துக்களை சேதப் படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதில் திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்களான மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் முத்துச்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், ராமதாஸ், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவரும், மாவட்ட தி.மு.க. பொருளாளருமான துரைராஜ், மாநகராட்சி வார்டு பகுதி துணை செயலாளர் திருப்பதி ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
 
பின்னர் திருச்சி காஜாமலை நீதிபதிகள் குடியிருப்பில் திருச்சி நீதிமன்ற குற்றவியல் எண் 2 நீதிபதி பாலாஜி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அதைத் தொடர்ந்து நீதிபதி வருகிற மார்ச் 29-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
Trichy power cut: திருச்சியில் நாளை (01-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
Trichy power cut: திருச்சியில் நாளை (01-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்... தூய்மைப்பணிகளை தீவிரப்படுத்திய நிர்வாகம்
திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்... தூய்மைப்பணிகளை தீவிரப்படுத்திய நிர்வாகம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Galaxy F70 Pro 5G Price: ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
Embed widget