அதிமுக தேர்தல் அறிக்கையை தடை செய்ய தேர்தல் ஆணையத்தில் புகார்

தேர்தல் அறிக்கையில் திட்டங்களை அறிவிக்கும் போது அதற்கான ஆதாரங்களை குறிப்பிட வேண்டும். மேலும் தேர்தல் அறிக்கை நம்பகத்தன்மையாகவும், வாக்காளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகவும் எனவும் புகாரில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

FOLLOW US: 

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றுபவர் ராமசுப்பிரமணியன். அவர் தேர்தல் ஆணையத்திற்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக இருப்பதாக கூறி தனது புகாரின் தெரிவித்துள்ளார். அப்படி என்ன புகார் தெரிவிக்கப்பட்டது? அதிமுக தேர்தல் அறிக்கையில் என்ன உச்சநீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது? என்பது குறித்து ராமசுப்பிரமணியனின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் இதோ:அதிமுக தேர்தல் அறிக்கையை தடை செய்ய தேர்தல் ஆணையத்தில் புகார்

2013ம் ஆண்டு சுப்பிரமணியபாலாஜி என்பவர் தொடர்ந்த வழக்கில் , ‛அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை மூலமாக நடைமுறைப்படுத்துவதற்கு சாத்தியமில்லாத அறிவிப்பின் மூலம் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் மக்களை மறைமுகமாக தூண்டாதபடி தேர்தல் அறிக்கையை வெளியிட வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் 2015 ஏப்ரல் 24ல் தேர்தல் ஆணையம் விதிமுறைகளை உருவாக்கியது அதன் படி தேர்தல் அறிக்கையில் திட்டங்களை அறிவிக்கும் போது அதற்கான ஆதாரங்களை குறிப்பிட வேண்டும். மேலும் தேர்தல் அறிக்கை நம்பகத்தன்மையாகவும், வாக்காளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகவும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய சாத்தியமுள்ளதாகவும் இருக்க வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டது.அதிமுக தேர்தல் அறிக்கையை தடை செய்ய தேர்தல் ஆணையத்தில் புகார்ஆனால் அதிமுக தேர்தல் வாக்குறுதியில் ‛வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை’ என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2 கோடி குடும்ப அட்டைதாரர்கள் இருக்கும் நிலையில் 2 கோடி பேருக்கு அரசு வேலை என்பது சாத்தியமில்லாத ஒன்று என்றும், ஏற்கனவே அரசு பணியிலிருந்து ஓய்வு பெறும் வயதை 58யில் இருந்து 60 ஆக உயர்த்தியதால் இளைஞர்களுக்கான அரசு பணி பெறும் வாய்ப்பு பறிபோன நிலையில், ‛வீட்டுக்கு ஒருவருக்கு அரசு பணி என்ற சாத்தியமில்லாத வாக்குறுதியை அதிமுக அளித்துள்ளதாகவும்,அதிமுக தேர்தல் அறிக்கையை தடை செய்ய தேர்தல் ஆணையத்தில் புகார்

உச்சநீதிமன்ற உத்தரவிற்கும், தேர்தல் ஆணைய விதிகளுக்கும் மாறாக சாத்தியமில்லாத தேர்தல் அறிக்கையாக இருப்பதால் அதிமுக தேர்தல் அறிக்கையை தடை செய்யுமாறு, தேர்தல் ஆணையத்திற்கு வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் மனு அளித்துள்ளார். 

Tags: admk OPS @election @tn election @admk @aiadmk manifesto 2021 in tamil @aiadmk manifesto @manifesto @election 2021 @madurai @eps

தொடர்புடைய செய்திகள்

TN Corona updates: தமிழ்நாட்டில் 11,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..!

TN Corona updates: தமிழ்நாட்டில் 11,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..!

பாரதிய ஜனதாவா? திராவிட ஜனதாவா? கொந்தளிக்கும் பிராமணர் சங்கம்..!

பாரதிய ஜனதாவா? திராவிட ஜனதாவா? கொந்தளிக்கும் பிராமணர் சங்கம்..!

’5 லட்சத்தில் திருமணம்: 38 லட்சத்தில் நன்கொடை’ : வாரி வழங்கிய ஆச்சரிய மணமக்கள்..!

’5 லட்சத்தில் திருமணம்: 38 லட்சத்தில் நன்கொடை’  : வாரி வழங்கிய ஆச்சரிய மணமக்கள்..!

Black Fungus | கோவையில் 123 பேருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு : அதிகரிக்கும் அச்சம்..!

Black Fungus | கோவையில் 123 பேருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு : அதிகரிக்கும் அச்சம்..!

பார்டர் தாண்டிச்செல்லும் மதுப்பிரியர்கள் : காவல்துறையினர் வைத்திருக்கும் கெடுபிடி ப்ளான்..!

பார்டர் தாண்டிச்செல்லும் மதுப்பிரியர்கள் : காவல்துறையினர் வைத்திருக்கும் கெடுபிடி ப்ளான்..!

டாப் நியூஸ்

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!

Aspire Swaminathan | அதிமுகவில் இருந்து ஐ.டி.விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்..!

Aspire Swaminathan | அதிமுகவில் இருந்து ஐ.டி.விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்..!