Sathanur Dam: 10 ஆயிரம் கன அடி நீர் திறப்பு! மக்களே சாத்தனூர் அணையால் மீண்டும் தலைவலியா?
Sathanur Dam Water Level: தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாத்தனூர் அணைக்கு தற்போது நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது

கர்நாடகத்தில் உருவாகும் தென்பெண்ணை ஆறு பெங்களூர், ஓசூர், கிருஷ்ணகிரி வழியாக சாத்தனூர் வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை தண்ணீர் மூலம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.
சமீபத்தில் பெய்த கன மழை எதிரொலியாக, சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்தன. இந்த நிலையில் மீண்டும் திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ய தொடங்கியுள்ள நிலையில் சாத்தனூர் அணை நிலவரம் குறித்து தெரிந்து கொள்வோம்
சாத்தனூர் அணை Sathanur Dam Water Level (12.12.2024):
சாத்தனூர் அணையின் 119 அடியை கொண்டது. தற்போது சாத்தனூர் அணையில் 117.50 அடியாக உள்ளது. மொத்தம் நீர் பிடிப்பு அளவு 6986 Mcft இதில் தற்போது 7321 Mcft ஆக உள்ளது. அணைக்கு தற்போது நீர்வரத்து 2500 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 10000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சாத்தனூர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால், நீர்வரத்துக்கு ஏற்ப நீர் வெளியேற்றம் படிப்படியாக அதிகரிக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மக்களுக்கு எச்சரிக்கை என்ன ?
சாத்தனூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் தேவை இருந்தால் படிப்படியாக அதிகரிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வளர்ச்சித் துறை மற்றும் வருவாய் துறை மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





















