மேலும் அறிய

Tirupati Temple: திருப்பதியில் வைகுண்ட வாயில் வழியாக தரிசனம்.. இன்று டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

திருப்பதியில் வைகுண்ட வாயில் வழியாக தரிசனம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 2ஆம் தேதி முதல் 11ம் தேதி வரை வைகுண்ட வாயில் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த 10 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 20 ஆயிரம் டிக்கெட்கள் என 2 லட்சம் டிக்கெட்கள் 24ஆம் தேதி (இன்று) காலை 9 மணிக்கு ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனம்  டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் http:// Tirupati Balaji. AP. gov.in/#/login என்ற தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி வரும் பக்தர்கள் அங்கப்பிரதட்சனம் செய்தல், மொட்டையடித்தல் போன்ற நேர்த்திக் கடன்களை செய்வது வழக்கம். ஏழுமலையான் கோவிலில் தினசரியும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இலவச தரிசனம் மட்டுமல்லாது சிறப்பு தரிசனம் கட்டண தரிசனங்களின் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்கின்றனர்.

விஐபிக்கள் பிரேக் தரிசனம் மூலம் அரசியல்வாதிகளும், பணக்காரர்களும் வருகை தந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். அப்போது இலவச தரிசன அறைகளில் சில மணி நேரங்கள் பக்தர்கள் காத்திருப்பார்கள்.

அதிகாலை நேரத்தில் துவங்கி காலை எட்டு மணி வரை சுமார் 4000 பக்தர்களுக்கு விஐபி பிரேக் தரிசன அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தேவஸ்தானம் குழு எடுத்த முடிவின் அடிப்படையில் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி முதல்,  காலை 8 மணிக்கு துவங்கி பக்தர்கள் விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட அனுமதி வழங்கப்பட்டது. இதனால் இலவச தரிசனத்திற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை மாறி அதிகாலை நேரத்தில் ஏழுமலையானை தரிசிக்க முடிகிறது. மேலும் தேவஸ்தான அறக்கட்டளைப்படி ரூபாய் 1000 அல்லது 500 செலுத்தி விஐபி பிரேக் தரிசனம் பெற முடிகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

"நானும் தலைவர் தான்!" - விசிக மாநாட்டு கூரையின் உச்சிக்கு சென்று போன் பேசியபடி தொண்டர்களுக்கு கை காட்டிய நபர்!
பாப்பாபட்டி கிராம மக்கள் வழக்கு: 'ஜனநாயகம்' படத்திற்கு ஐகோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு!
பாப்பாபட்டி கிராம மக்கள் வழக்கு: 'ஜனநாயகம்' படத்திற்கு ஐகோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு!
விசிக மாநாட்டு மேடையில் திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல்.. உரையை பாதியிலேயே முடித்தார் திருமாவளவன்!
விசிக மாநாட்டு மேடையில் திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல்.. உரையை பாதியிலேயே முடித்தார் திருமாவளவன்!
மேடை உடைப்பு... தகர ஷீட் கிழிப்பு... உளுந்தூர்பேட்டை விசிக மாநாட்டில் நிலைகுலைந்த பாதுகாப்பு!
மேடை உடைப்பு... தகர ஷீட் கிழிப்பு... உளுந்தூர்பேட்டை விசிக மாநாட்டில் நிலைகுலைந்த பாதுகாப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget