மேலும் அறிய

Pocso : 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் உட்பட 2 பேர் கைது..

”ஆசிரியர் அருள்ராஜ் ஜோசப் இருசக்கர வாகனம் ஓட்ட கற்றுக்கொடுப்பதாக கூட்டிச்சென்று ரெட்டையார்பட்டி இரட்டை மலை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்”

நெல்லை பாளையங்கோட்டை அடுத்த விஎம்.சத்திரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், தனது தாய் தந்தை இல்லாததால் மேலப்பாளையத்தில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வருகிறார், பாட்டியின் அரவணைப்பில் அங்குள்ள தனியார் பள்ளியில் அச்சிறுமி பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார், இந்த நிலையில் கேடிசி நகரை சேர்ந்த பொன் கணேஷ் (20) என்ற வாலிபருடன் சிறுமிக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது, அப்போது பொன் கணேஷ் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி சிறுமியை கட்டாயப்படுத்தி  பலமுறை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார், மேலும் தன்னுடன் நெருங்கி பழகும் விஷயத்தை யாரிடமும் சொல்ல கூடாது எனவும் சிறுமியை மிரட்டியதாகவும் தெரிகிறது.


Pocso : 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் உட்பட 2 பேர் கைது..

அதோடு சிறுமியின் பள்ளியில் பாட்டு ஆசிரியராக  அருள்ராஜ் ஜோசப் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவரும் இச்சிறுமியிடம் நன்கு பழகி உள்ளார். அப்போது அச்சிறுமியை தொடர்புகொண்டு அவருக்கு பைக் ஓட்ட கற்று தருவதாகவும் கூறியுள்ளார், தனது ஆசிரியர் என்பதால் அவரை நம்பி சிறுமி அருள்ராஜ் ஜோசப் உடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்ற உள்ளார். அப்போது நெல்லை ரெட்டையார்பட்டி இரட்டை மலை அருகே சென்ற ஆசிரியர் அங்கு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.


Pocso : 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் உட்பட 2 பேர் கைது..

இந்த நிலையில் ஆசிரியர் அருள்ராஜ் ஜோசப் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதை சிறுமி பொன் கணேஷிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பொன் கணேஷ் ஆசிரியரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார், அப்போது பொன் கணேஷ் சிறுமியின் விவகாரத்தை வெளியில் சொல்லாமல் இருக்க ஆசிரியரிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது, இதற்கிடையில் பொன் கணேஷ் சிறுமியின் இல்லத்துக்கு அடிக்கடி வருவதை கவனித்த சிறுமியின் பாட்டி பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார், அதனடிப்படையில் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தி உள்ளனர், விசாரணையில் பொன் கணேஷ் மற்றும் ஆசிரியர் அருள்ராஜ் ஜோசப் ஆகிய இருவரும் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதை தெரிவித்து உள்ளார். இதையடுத்து போலீசார் இருவரையும் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர், பள்ளிக்கு படிக்க செல்லும் மாணவிகளிடம் ஆசிரியர்கள் இது போன்று தவறாக நடந்து கொள்ளும் சம்பவம் கண்டிக்கத்தக்கது, வேலியே பயிரை மேய்வது போல நெல்லையில் ஆசிரியர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காணv

தலைப்பு செய்திகள்

பானைகள் முதல் பகடைக்காய் வரை... சங்ககால வாழ்வின் மர்மங்கள் விலகும் மலையடிப்பட்டி அகழாய்வு !
பானைகள் முதல் பகடைக்காய் வரை... சங்ககால வாழ்வின் மர்மங்கள் விலகும் மலையடிப்பட்டி அகழாய்வு !
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
திருநெல்வேலி, தென்காசியில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
திருநெல்வேலி, தென்காசியில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
திருச்செந்தூர் ரயில் சேவை ரத்து, மாற்றம்: ஜூலை பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
திருச்செந்தூர் ரயில் சேவை ரத்து, மாற்றம்: ஜூலை பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget