மேலும் அறிய

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது- அமைச்சர் சிவசங்கரன்

பிற மாநிலங்களில் ஆட்கள் ஏறி பேருந்துகள் நிறைந்தால் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்லும் வகையில் தமிழகத்தில் பேருந்துகள் அரசின் மூலம் இயக்கப்பட்டு வருகிறது.

நெல்லை கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் புதிதாக வழங்கப்பட்டுள்ள 27 பேருந்துகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நெல்லை பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, போக்குவரத்து துறை அமைச்சர்  சிவசங்கரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு  புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து பேருந்தில் சட்டப்பேரவை தலைவர், அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் பயணம் செய்தனர்.  முன்னதாக நிகழ்ச்சிகள் அமைச்சர் சிவசங்கரன் பேசும் பொழுது, 

போக்குவரத்து துறை சிரமமான சூழலுக்கு சென்ற நிலையில் தமிழக முதலமைச்சராக மு க ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் அதனை மீட்டு மீண்டும் புத்துயிர் ஊட்டியுள்ளார். போக்குவரத்து துறை மிகுந்த கடன் சூழலில் இருந்த நிலையில் மகளிர் விடியல் பயணத்தை தமிழக முதலமைச்சர் அறிவித்து அதற்கான பணத்தை அரசு தரும் நிலையில் தான் தொழிலாளர்களுக்கு மாதம் மாதம் ஊதியம் கொடுக்க முடிந்து வருகிறது. பக்கத்து மாநிலங்களில் ஒரு மாதம் இரண்டு மாதங்களுக்கு  ஒரு முறை தான் சம்பளம் தரும் நிலை உள்ளது. ஆனால்  நமது மாநிலத்தில்  கடந்த காலங்களில் அப்படி ஒரு சூழல் இருந்தது. ஆனால் இப்போது முதல் தேதியில் சம்பளம் வழங்கப்படுகிறது என்றால் முதல்வர் இந்த துறைக்கு வழங்கக்கூடிய நிதிதான். இந்த ஆண்டு 2500 கோடி ரூபாயை மகளிர் விடியல் பயணத்திற்கு ஒதுக்கிய காரணத்தால் தான் இந்த துறை சிறப்பாக செயல்படுகிறது. டீசல் மானியம் இலவச பேருந்து பயணத்திற்கான மானியம் ஆகியவையால் தான் போக்குவரத்து துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது- அமைச்சர் சிவசங்கரன்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அரசு பேருந்துகள் இயக்கப்பஇட்டு வருகிறது பிற மாநிலங்களில் 20% பேருந்துகள் கூட அரசின் மூலம் இயக்கப்படுவது கிடையாது. தமிழகத்தின் தான் கிராமப்புறத்தில் இருக்கும் ஏழை எளிய மக்கள் பயணித்து தங்கள் சொந்த கிராமத்திற்கு செல்லும் அளவிற்கு குக்கிராமம் வரை பேருந்து வசதி உள்ளது.  கடந்த திமுக ஆட்சி நடந்த ஐந்தாண்டுகளில் அரசு சார்பில் 15 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டது. ஆனால்  கடந்த 10 ஆண்டுகளில் ஆதிமுக ஆட்சி நடந்த போது வாங்கிய பேருந்துகளில் எண்ணிக்கை குறைந்ததன் காரணமாகவே பழைய பேருந்துகளை வைத்து தற்போது ஓட்டும் நிலை உள்ளது. புதிய பேருந்துகள் வாங்க  நிதி ஒதுக்கி உத்தரவிட்டு தற்போது 7200 பேருந்துகள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு 1000 பேருந்துகள் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. நெல்லை மண்டலத்தில் 2023-24 ஆம் ஆண்டிற்கான புதிதாக 199 பேருந்துகள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 134 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அடுத்து 2024-25 ஆம் ஆண்டிற்கு நெல்லை மண்டலத்திற்கு புதிதாக 302 பேருந்துகள் வர உள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது- அமைச்சர் சிவசங்கரன்

பிற மாநிலங்களில் ஆட்கள் ஏறி பேருந்துகள் நிறைந்தால் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்லும் வகையில் தமிழகத்தில் பேருந்துகள் அரசின் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. பள்ளி கல்லூரி, மாணவர்களுக்கு போதிய போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதே முதல்வரின் உத்தரவு. கொரனா காலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்த நிலையில் ஒவ்வொரு பகுதிக்கும் அதிக அளவு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
"யப்பா" - 2 MATHS PERIOD: அமித்ஷாவின் ரியாக்ஷனை வைத்து மோடியை கலாய்த்த பிரியங்கா காந்தி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
"யப்பா" - 2 MATHS PERIOD: அமித்ஷாவின் ரியாக்ஷனை வைத்து மோடியை கலாய்த்த பிரியங்கா காந்தி
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Travis Head:
Travis Head: "இந்தியானாலே அடிப்பேன்" எப்படி போட்டாலும் அடிக்கும் டிராவிஸ் ஹெட் புது ரெக்கார்ட்!
Embed widget